Kaargala Megam - தமிழ் பாடல் வரிகள்
கார்கால மேகம்
உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது
மழை சிந்து பாடும்
ஆண் :
மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம்
பார்வையால் தந்து விடு காதல் வரம்
ஆண் :
விரல்கள் கொண்டு என்னை தீண்டினாள்
விழிகள் கொண்டு என்னை வீழ்த்தினாள்
மொழிகள் கொண்டு என்னை மாற்றினாள்
இதயம் கொண்டு என்னை காட்டினாள்
ஆண் :
ஏதேதோ எண்ணம் வருகிறதே
உன் உறவை தேடி
என் இதயம் என்னை கொல்கிறதே
உலகம் தலை கீழாய் ஆனதே
அடி பெண்ணே உன்னால்
எல்லாமே மாறி போனதே
ஆண் :
பேசாத நொடியில்
எனை நொந்து போகிறேன்
நீக்கினாய் ஏக்கம் இதழ் வழியில்
பெண் :
மழையில் நான் நனைந்தேன்
மலராய் நான் மலர்ந்தேன்
நீ அணைக்க எந்தன் மனம் தொலைத்தேன்
ஆண் :
நான் உன்னை பார்த்த நேரம்
பூமியில் வெண்ணிலவொன்று
விண் தாண்டி வந்ததோ என்று
கண் வியந்து கிடந்தேன் நானே..
ஆண் :
ஹே நீ அருகில் வந்து
பூவின் மேல் இதழ் கொண்டு
முத்தங்கள் தந்த பல கனவு
பெண் :
நான் உன் மார்பில் சாய
நீ என்னை ஏந்தி கொள்ள
கார்மேகம் எட்டி சாரல் தூவ…
தூவ தூவ…
ஆண் :
உன் நாணம் கண்ணில் தெரிகிறதே
நான் மோகம் கொள்ள
என் நெஞ்சம் தீயை சுடுகிறதே
பெண் :
உன் மோகம் என்னை கொல்கிறதே
என் தேகம் எல்லாம்
உன் விரலால் கீதம் பிறக்கிறதே
ஆண் :
கார்கால மேகம்
உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது
மழை சிந்து பாடும்
ஆண் :
மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம்
பார்வையால் தந்து விடு காதல் வரம்
Kaargala Megam - English Lyrics
Male :
Kaargaala megam
Unai paarthaal koodum
Pon dhegam meedhu
Mazhai sindhu paadum
Male :
Mannil muzhaitha velli nakshathiram
Paarvaiyaal thandhu vidu kaadhal varam
Male :
Viralgal kondu ennai theendinaal
Vizhigal kondu ennai veezhthinaal
Mozhigal kondu ennai maatrinaal
Idhayam kondu ennai kaatinaal
Male :
Yedhedho ennam varugiradhae
Un uravai thedi
En idhayam ennai kolgiradhae
Ulagam thalai keezhai aanadhae
Adi pennae unnaal
Ellamae maari ponadhae
Male :
Pesaadha nodiyil
Enai nondhu pogiren
Neekkinaai yekkam idhazh vazhiyil
Female :
Mazhaiyil naan nanaindhen
Malaraai naan malarndhen
Nee anaikka endhan manam tholaithen
Male :
Naan unnai paartha neram
Boomiyil vennilavondru
Vin thaandi vandhadho endru
Kan viyandhu kidandhen naanae..
Male :
Hey nee arugil vandhu
Poovin mel idhazh kondu
Muthangal thandha pala kanavu
Female :
Naan un maarbil saaya
Nee ennai yendhi kolla
Kaarmegam etti saaral thoova..
Thoova thoova..
Male :
Un naanam kannil therigiradhae
Naan mogam kolla
En nenjam theeyaai sudugiradhae
Female :
Un mogam ennai kolgiradhae
En dhegam ellam
Un viralaal geetham pirakkiradhae
Male :
Kaargala megam
Unai paarthaal koodum
Pon dhegam meedhu
Mazhai sindhu paadum
Male :
Mannil muzhaitha velli nakshathiram
Paarvaiyaal thandhu vidu kaadhal varam