Tamil Lyrics

Maaney Mayanguvathu song lyrics

Movie — Thanga Manasukkaran

Singer(s) — Mano

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Maaney Mayanguvathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மானே மயங்குவதேனோ……

ஆண் :
உனைத் தானே கலங்குவதேனோ…

ஆண் :
மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி
அடி மானே மறந்ததும் ஏனோ
உயிர் தானே உருகிடத் தானோ
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

ஆண் :
மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி

பெண் குழு :
லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
தீராத் துயர் அனைத்தும்
தீர்த்து வைக்கும் அம்மனுக்கு
பாடா விரதம் கொண்டு
மங்கையர்கள் பொங்க வெச்சோம்
மஞ்சள் கரச்சு வெச்ச நீரினில் தலை முழுகி
எங்கள் கரம் குவிச்சு தங்க நிறத் தாலிக்கொரு
கும்மி சொல்லி அடிப்போம்…
கும்மி சொல்லி அடிப்போம்…

ஆண் :
கங்கை வெள்ளம் ஓய்ந்த பின்னே
மீன் பிடித்தல் கூடுமோ
மங்கை உள்ளம் மாறிப் போனால்
நான் துடித்து லாபமோ

ஆண் :
காற்று திசை மாறிப் போனால்
கட்டுமரம் போகுமோ
காதல் திசை மாறிப் போனால்
அன்பு மனம் தாங்குமோ
நீரோடை மீதில் பொய்க் கோலம் போலே
நம் காதல் கோலங்கள்
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

ஆண் :
மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி

பெண் குழு :
ஒஹ்ஹோ… ஒஹ்ஹோ…
அம்மா இறங்கி வந்து
கண் திறக்க வேண்டும் அம்மா
உன்னால் வளந்த பயிர்
ஊர்கோலம் போகுதம்மா
தட்டுத் தடங்கல் இன்றி
கொட்டுகள் முழங்கி வர
பட்டாசு வானம் போல
பட்ட துயர் பட்டுப் போக
கும்மி சொல்லி அடிப்போம்…
கும்மி சொல்லி அடிப்போம்…

ஆண் :
ஆற்றங்கரை ஓரம் நின்று
அன்று சொன்ன பாடல்கள்
நேற்று வந்த காற்றைப் போலே
நெஞ்சை விட்டுப் போனதோ

ஆண் :
அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போகுமா
சந்தனம்தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றிப் போகுமா
இளவேனில் மீண்டும்
வர வேண்டும் இங்கு
நான் வாடும் கோலம் ஏன்
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

ஆண் :
மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி
அடி மானே மறந்ததும் ஏனோ
உயிர் தானே உருகிடத் தானோ
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

ஆண் :
மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி

Maaney Mayanguvathu - English Lyrics

Male :

Maanae mayanguvadhaeno…

Male :

Unai thaanae kalanguvadhaeno…

Male :

Mani kuyil isaikkudhadi

Manam indru urugudhadi

Siragugal virippadharkkae

Ingu vazhi indru thavikkudhadi

Adi maanae marandhadhum yaeno

Uyri thaanae urugida thaano

Ilam kaatrae neeyum kaettu vaa

En sogam neeyum koori vaa

Male :

Mani kuyil isaikkudhadi

Manam indru urugudhadi

Siragugal virippadharkkae

Ingu vazhi indru thavikkudhadi

Female Chorus :

Lulululululululu lulululululululu

Theeraa thuyar anaithum

Theerthu vaikkum ammanukku

Paadaa viradham kondu

Mangaiyargal ponga vechom

Manjal karachu vecha neerinil thalai muzhugi

Engal karam kuvichu thanga nira thaalikkoru

Kummi solli adippom… kummi solli adippom…

Male : Gangai vellam oindha pinnae

Meen pidithal koodumo

Mangai ullam maari ponaal

Naan thudithu laabamo

Male :

Kaatru dhisai maari ponaal

Kattu maram pogumo

Kaadhal dhisai maari ponaal

Anbu manam thaangumo

Neerodai meedhil poi kolam polae

Nam kaadhal kolangal

Ilam kaatrae neeyum kaettu vaa

En sogam neeyum koori vaa

Male :

Mani kuyil isaikkudhadi

Manam indru urugudhadi

Siragugal virippadharkkae

Ingu vazhi indru thavikkudhadi

Female Chorus :

Ohhoho… ohhoho…

Ammaa irangi vandhu

Kan thirakka vendum ammaa

Unnaal valarndha payir

Oorgolam pogudhammaa

Thattu thadangal indri

Kottugal muzhangi vara

Pattaasu vaanam pola

Patta thuyar pattu poga

Kummi solli adippom… kummi solli adippom…

Male :

Aatram karai oram nindru

Andru sonna paadalgal

Naetru vandha kaatrai polae

Nenjai vittu ponadho

Male :

Andhi vandhu saerndha pinnae

Naal mudindhu pogumaa

Sandhanam thaan kaaindha pinnae

Vaasam indri pogumaa

Ilavaenil meendum

Vara vaendum ingu

Naan vaadum kolam yaen

Ilam kaatrae neeyum kaettu vaa

En sogam neeyum koori vaa

Male :

Mani kuyil isaikkudhadi

Manam indru urugudhadi

Siragugal virippadharkkae

Ingu vazhi indru thavikkudhadi

Adi maanae marandhadhum yaeno

Uyri thaanae urugida thaano

Ilam kaatrae neeyum kaettu vaa

En sogam neeyum koori vaa

Male :

Mani kuyil isaikkudhadi

Manam indru urugudhadi

Siragugal virippadharkkae

Ingu vazhi indru thavikkudhadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maaney Mayanguvathu

Which movie does the song Maaney Mayanguvathu belong to?

The song Maaney Mayanguvathu is from the movie Thanga Manasukkaran.

Who is the music director of Maaney Mayanguvathu?

The music for Maaney Mayanguvathu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Maaney Mayanguvathu?

The lyrics for Maaney Mayanguvathu are penned by Gangai Amaran.

Who sang the Maaney Mayanguvathu song?

Maaney Mayanguvathu is sung by Mano.

Related Songs