Maname Sol Maname - தமிழ் பாடல் வரிகள்
திரை மின்னத்தான்
திரை மின்னத்தான்
புது விண்மீனாய்
இவள் வந்தாலே
ஆண் சிங்கங்கள் தலை தூக்கித்தான்
தனை பார்க்கத்தான் இவள் நின்றாலே
ஆண் :
விழியால் எதையும்
மொழிவாள் இவள்
மொழிகள் கடந்தும்
ஒளிர்வாள் இவள்
ஒளியாய் அழகாய் பொழிவால் இவள்
நிலவாய் நிலவாய் காய்கின்றால்
ஆண் :
இளைஞர் கனவில்
தினமும் இவள்
பலரின் மனதில்
மனமும் இவள்
சிலரின் விழியில் பணமும் இவள்
கரைகள் கடந்தே பாய்கின்றால்
குழு :
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
ஆண் :
புகழை துரத்தி
பலரும் அலைவாரே
இவளைத் துரத்தி
புகழ் அலைய கண்டால்
ஆண் :
உயர உயர
திமிர் வளரும் ஊரில்
வானை அடைந்தும்
பணிவை இவள் கொண்டால்
பெண் :
இவள் தங்கை மகள்
அன்னை என
வேடம் எல்லாமே எடுப்பாள்
ஒரு தானம் என
யாரும் வர
தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள்
குழு :
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
ஆண் :
வெளியில் இவளோ
கலங்கரையின் தீயாய்
வீட்டில் இவளோ
அகல் மலரும் தீயாய்
ஆண் :
திரையை கடந்தும்
வாரும் ஒரு காதல்
அரங்கை கடந்தும்
தொடரும் ஒரு பாடல்
ஆண் :
அழகாய் ஓர் கனா
காதல் கனா
அதுவே வாழ்வென்று இருந்தால்
தன்னுள்ளே சிறு
விண்மீன் கரு
கொண்டே விண்ணாக விருந்தால்
குழு :
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
ஆண் :
மனமே சொல் மனமே
சில பொய்களே
எந்தன் வாழ்க்கையா
ஆண் :
மனமே சொல் மனமே
உயிர் இன்றியே
எந்தன் யாக்கையா
ஆண் :
ஒரு ஓவியம்
என்றெந்தன் நேற்றை
தீட்டிக் காட்டினாய்
அதன் மீதிலே
கருஞ்சாயம் ஏனோ கொட்டினாய்
ஆண் :
அது நிஜமா…
இது நிஜமா….
உன்னை உண்மை கேட்கிறேன்…
அதைக் கூறினால்
ரணம் ஆறினால்
அதன் பின்பு சாகிறேன்
ஆண் :
அது கனவா….
இது கனவா….
தூக்கம் நீக்கக் கேட்கிறேன்…
தொடராமலே…
முடியாமலே…
இங்கு வாழ்கிறேன்…
ஆண் :
என் காதல் வானம்
என்னானதோ
நான் வளர்த்த மூலிகை
என்னைத் தின்றதோ
ஆண் :
மண்ணை மாற்றத் தானே
எண்ணெய் நான் செய்தேன்
அதில் எனை எரிக்கையில்
என்ன நான் செய்வேன்
ஆண் :
அது நிஜமா….
இது நிஜமா….
உன்னை உண்மை கேட்கிறேன்…
அதைக் கூறினால்
ரணம் ஆறினால்
அதன் பின்பு சாகிறேன்
ஆண் :
அது கனவா….
இது கனவா…
தூக்கம் நீக்கக் கேட்கிறேன்…
தொடராமலே….
முடியாமலே…..
இங்கு வாழ்கிறேன்…
ஆண் :
மனமே சொல் மனமே
எதை நம்புவேன்
யாரை நம்புவேன்
ஆண் :
ஒரு காவியம்
என்றெந்தன் வாழ்வை
நீயும் பேசினாய்
அதன் மீதிலே
ஏரி அமிலம் ஏனோ வீசினாய்…
ஆண் :
எரிந்திடவா
அணைந்திடவா
உன்னைக் கேள்வி கேட்கிறேன்…
அதைக் கூறினால்
ரணம் ஆறினால்
அதன் பின்பு சாகிறேன்
ஆண் :
கரைந்திடவோ
மறந்திடவோ
பாதை என்ன கேட்கிறேன்…
முன் செல்லவோ
பின் செல்லவோ
வழி பார்க்கிறேன்…
Maname Sol Maname - English Lyrics
Male :
Thirai minnathaan
Tharai minnathaan
Pudhu vinmeenaai
Ival vandhaalae
Aan singangal thalai thookkithaan
Thanai paarkkathaan ival nindraalae
Male :
Vizhiyaal edhaiyum
Mozhivaal ival
Mozhigal kadandhum
Olirvaal ival
Oliyaai azhagai pozhivaal ival
Nilavaai nilavaai kaaigindraal
Male :
Ilainjar kanavil
Dhinamum ival
Palarin manadhil
Manamum ival
Silarin vizhiyil panamum ival
Karaigal kadandhae paaigindraal
Chorus :
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Male :
Pugazhai thurathi
Palarum alaivaarae
Ivalaith thurathi
Pugazh alaiya kandaal
Male :
Uyara uyara
Thimir valarum ooril
Vaanai adaindhum
Panivai ival kondaal
Female :
Ival thangai magal
Annai ena
Vedam ellaamae eduppaal
Oru thaanam ena
Yaarum vara
Theivam ondraagi koduppaal
Chorus :
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Male :
Veliyil ivaloo
Kalangaraiyin theeyaai
Veettil ivaloo
Agal malarum theeyaai
Male :
Thiraiyai kadandhum
Valarum oru kaadhal
Arangai kadandhum
Thodarum oru paadal
Male :
Azhagaai orr kanaa
Kaadhal kanaa
Adhuvae vaazhvendru irundhaal
Thannullae chiru
Vinmeen karu
Kondae vinnaaga virindhaal
Chorus :
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi…
Male :
Manamae sol manamae
Sila poigalae
Endhan vaazhkkaiyaa
Male :
Manamae sol manamae
Uyir indriyae
Endhan yaakkaiyaa
Male :
Oru oviyam
Endrendhan naettrai
Theetti kaattinaai
Adhan meedhilae
Karunjaayam yenoo kottinaai
Male :
Adhu nijamaa..
Idhu nijamaa…
Unnai unmai ketkkiren…
Adhai koorinaal
Ranam aarinaal
Adhan pinbu saagiren
Male :
Adhu kanavaa..
Idhu kanavaa..
Thookkam neekka ketkkiren…
Thodaraamalae…
Mudiyaamalae…
Ingu vaazhgiren…
Male :
En kaadhal vaanam
Ennaanadhoo
Naan valartha mooligai
Ennai thindradhoo
Male :
Mannai maatra thaanae
Ennai naan seidhaen
Adhil enai erikkaiyil
Enna naan seiven
Male :
Adhu nijamaa..
Idhu nijamaa…
Unnai unmai ketkkiren…
Adhai koorinaal
Ranam aarinaal
Adhan pinbu saagiren
Male :
Adhu kanavaa..
Idhu kanavaa..
Thookkam neekka ketkkiren…
Thodaraamalae…
Mudiyaamalae…
Ingu vaazhgiren…
Male :
Manamae sol manamae
Edhai nambuven
Yaarai nambuven
Male :
Oru kaaviyam
Endrendhan vaazhvai
Neeyum pesinaai
Adhan meedhilae
Eri amilam yeno veesinaai..
Male :
Erindhidavaa
Anaindhidavaa
Unnai kelvi ketkiren…
Adhai koorinaal
Ranam aarinaal
Adhan pinbu saagiren
Male :
Karaindhidavoo
Marandhidavoo
Paadhai enna ketkkiren…
Mun chellavoo
Pin chellavoo
Vazhi paarkkiren