Tamil Lyrics

Paarkadal Alaimele song lyrics

Movie — Raja Desingu

Singer(s) — M. L. Vasanthakumari

Lyricist — Udumalai Narayanakavi

Music Director — G. Ramanathan

Paarkadal Alaimele - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா…
பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா
உந்தன் பதமலர் நிதம் தேடி பரவசமொடு பாடி
பதமலர் நிதம் தேடி பரவசமொடு பாடி
கதி பெறவே ஞானம் நீ தா தேவா

பெண் :
பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா

பெண் :
காதகனான ஒரு சோமுகன் கை கொண்டு
கடலிடையே ஒளித்த மறை நாலும்
காதகனான ஒரு சோமுகன் கை கொண்டு
கடலிடையே ஒளித்த மறை நாலும் பின்னும்
மேதினி தேன் மீளா……ஆ…..ஆ…..ஆ…
மேதினி தேன் மீளா பாதகன் தான் மாள
மீனவதாரங் கொண்ட திருமாலே

பெண் :
வானவரும் தானவரும் ஆழியமுதம் கடைந்த
மந்தர கிரி தன்னை தாங்கிடவே
வானவரும் தானவரும் ஆழியமுதம் கடைந்த
மந்தர கிரி தன்னை தாங்கிடவே ஒரு
கூனுடைய ஓடு கொண்ட…..ஆ…ஆ…..ஆ…..ஆ…
கூனுடைய ஓடு கொண்ட கூர்மாவதாரமென
கோல முற்றாய் புகழும் ஓங்கிடவே

பெண் :
ஈனன் இரண்யாட்சனெனும் படுபாவி
இ…..இ…..இ…..இ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஈனன் இரண்யாட்சனெனும் படுபாவி பாயாய்
ஏழு கடலுள் மறைத்த பூதேவி அவள்
தீன ரட்சகா சகல ஜீவ ரட்சகா
தீன ரட்சகா சகல ஜீவ ரட்சகா
எனவே மாநிலத்தை தூக்கிய வராக வடிவானவனே

பெண் :
எங்கிருக்கிறான் ஹரி எங்கிருக்கிறான்
அவன் எங்கிருக்கிறான் சொல்லடா
எங்கிருக்கிறான் என்ற இரணியன் சொல்லை
இடை மறித்தே அவன் பிள்ளை ஹரி
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் ஹரி
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் என
இயம்பினதால் நேர்ந்த தொல்லை நீங்கவும்
பொங்கு சின வம்பனது பூத உடலும் தசை
தின்றெழுந்த தொந்தியொடு மணிக்குடலும் உதிரம்
சிந்தவே நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே
சங்கு சக்ர தாரனே உபகாரனே ஆதாரனே

பெண் :
மூவடி மண் கேட்டு வந்து மண்ணளந்து விண்ணளந்து
மாவலி சிரம் அளந்த வாமனனே
மூவடி மண் கேட்டு வந்து மண்ணளந்து விண்ணளந்து
மாவலி சிரம் அளந்த வாமனனே தந்தை
ஆவியை பறித்ததனால் சூரியகுல வைரியென
ஆவியை பறித்ததனால் சூரியகுல வைரியென
அமைந்த பரசுராமன் ஆனவனே

பெண் :
தேவர்களின் சிறை மீட்ட ராவணாதி உயிர் மாய்த்த
தேவர்களின் சிறை மீட்ட ராவணாதி உயிர் மாய்த்த
தசரத ஸ்ரீ ராம அவதாரனே
தசரத ஸ்ரீ ராம அவதாரனே
பூவுலகிலே உழவோர் புகழும் கலப்பை தன்னை
பூவுலகிலே உழவோர் புகழும் கலப்பை தன்னைப்
புயந்தனில் தாங்கி நின்ற பலராமனே…. ஏ… ஏ…

பெண் :
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி மேவிய யசோதை நந்தலாலா…
ஆ… ஆ… ஆ…
ஆயர்பாடி மேவிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூ பாரம் தீர்க்க பாரத போர் முடித்த சீலா
பூ பாரம் தீர்க்க பாரத போர் முடித்த சீலா
கோபால கிருஷ்ணனான ஆதிமூலா பரிபாலா

பெண் :
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே

பெண் :
பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ர பேதகம்
பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ர பேதகம்
செய்ய அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரனே
சிங்காரனே தசாவதாரன் நீயே

பெண் :
பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா…

பெண் :
பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே
பள்ளி கொண்டாய் ரங்கநாதா…

Paarkadal Alaimele - English Lyrics

Female :

Paarkadal alai melae paambanaiyin melae

Palli kondaai ranganaadhaa…

Paarkadal alai melae paambanaiyin melae

Palli kondaai ranganaadhaa…

Undhan padhamalar nidham thaedi paravasamodu paadi

Padhamalar nidham thaedi paravasamodu paadi

Gadhi peravae njaanam nee thaa dhaevaa

Female :

Paarkadal alai melae paambanaiyin melae

Palli kondaai ranganaadhaa…

Female :

Kaadhaganaana oru somugan kai kondu

Kadalidaiyae olitha marai naalum

Kaadhaganaana oru somugan kai kondu

Kadalidaiyae olitha marai naalum pinnum

Maedhini thaen meelaa… aa… aa… aa…

Maedhini thaen meelaa paadhagan thaan maala

Meenavathaarang konda thirumaalae

Female :

Vaanavarum thaanavarum aazhiyamudham kadaindha

Madhara giri thannai thaangidavae

Vaanavarum thaanavarum aazhiyamudham kadaindha

Madhara giri thannai thaangidavae oru

Koonudaiya odu konda… aa…aa….aa…aa..

Koonudaiya odu konda koormaavadhaaramena

Kola muttraai pugazhum ongidavae

Female :

Eenan iranyaatchanenum padupaavi

Ee….ee….ee….ee….ee….aa….aa….aa….aa….aa…..

Eenan iranyaatchanenum padupaavi paayaai

Ezhu kadalul maraitha boodhaevi aval

Dheena ratchagaa sagala jeeva ratchagaa

Dheena ratchagaa sagala jeeva ratchagaa

Enavae maanilatthai thookkiya varaaga vadivaanavanae

Female :

Engirukkiraan hari engirukkiraan

Avan engirukkiraan solladaa

Engirukkiraan endra iraniyan sollai

Idai marithae avan pillai hari

Engum iruppaan thoonil ingum iruppaan hari

Engum iruppaan thoonil ingum iruppaan yena

Iyambinadhaal naerndha thollai neengavum

Ponghu sina vanbaanadhu boodha udalum thasai

Thindrezhndha thondhiyodu manikkudalum

Udhiram sindhavae nagam kondu keerum

Narasingamaana avathaaranae

Sangu chakra dharanae upakaaranae aadhaaranae

Female :

Moovadi man kaettu vandhu mannalandhu vinnalandhu

Maavali siram alandha vaamananae

Moovadi man kaettu vandhu mannalandhu vinnalandhu

Maavali siram alandha vaamananae thandhai

Aaviyai parithadhanaal sooriya kula vairiyena

Aaviyai parithadhanaal sooriya kula vairiyena

Amaindha parasuraaman aanavanae

Female :

Dhaevargal sirai meetta raavanaadhi uyir maaitha

Dhaevargal sirai meetta raavanaadhi uyir maaitha

Dhasaradha sri raama avadhaaranae

Dhasaradha sri raama avadhaaranae

Boovulagilae uzhavor pugazhum kalappai thannai

Boovulagilae uzhavor pugazhum kalappai thannai

Puyanthanil thaangi nindra balaraamanae… ae… ae…

Female :

Aavani rohiniyil ashtamiyilae

Artta jaama naerathilae avadharithonae

Aavani rohiniyil ashtamiyilae

Artta jaama naerathilae avadharithonae

Aayarpaadi maeviya yasodhai nandhalaalaa…

Aa… aa… aa…

Aayarpaadi maeviya yasodhai nandhalaalaa

Pathinaayiram gopiyar paramaanandha lolaa

Pathinaayiram gopiyar paramaanandha lolaa

Boo baaram theerkka baaradha por muditha seelaa

Boo baaram theerkka baaradha por muditha seelaa

Gopaala kirushnanaana aadhimoolaa paripaalaa

Female :

Aavani rohiniyil ashtamiyilae

Artha jaama naerathilae avadharithonae

Female :

Panja paadhagam vaadhudan kodiya

Vanjagam mithra baedhagam

Panja paadhagam vaadhudan kodiya

Vanjagam mithra baedhagam

Seiya anjidaadhavar aadidum naadaga maedai

Aadiya kaliyugam azhikkavae dharmam thazhaikkavae

Anburuvaagiya kalki avadhaaranae

Singaaranae dhasaavadhaaran neeyae

Female :

{Paarkadal alai melae paambanaiyin melae

Palli kondaai ranghanaadhaa…} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paarkadal Alaimele

Which movie does the song Paarkadal Alaimele belong to?

The song Paarkadal Alaimele is from the movie Raja Desingu.

Who is the music director of Paarkadal Alaimele?

The music for Paarkadal Alaimele is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Paarkadal Alaimele?

The lyrics for Paarkadal Alaimele are penned by Udumalai Narayanakavi.

Who sang the Paarkadal Alaimele song?

Paarkadal Alaimele is sung by M. L. Vasanthakumari.

Related Songs