Ulagathil Sirandhadhu - தமிழ் பாடல் வரிகள்
உலகத்தில் சிறந்தது
எது ஓர் உருவமில்லாதது
எது ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது
அனுபவமாவது அது
பெண் :
வட்டி கொடுப்போரும்
வாங்கி முடிப்போரும் காண
துடிப்பது அது வட்டி
கொடுப்போரும் வாங்கி
முடிப்போரும் காண
துடிப்பது அது
பெண் :
சிலர் எட்டி
உதைத்தாலும் கட்டி
அடித்தாலும் இதயத்தில்
இருப்பது அது இதயத்தில்
இருப்பது அது
பெண் :
உலகத்தில் சிறந்தது
எது ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு
வீட்டிலும் அனுபவமாவது அது
அனுபவமாவது அது
பெண் :
அறிவையும்
கெடுப்பது அழகினில்
பிறப்பது அகிலத்தின்
பெருங்கதை அது
அறிவையும் கெடுப்பது
அழகினில் பிறப்பது
அகிலத்தின் பெருங்கதை
அது
பெண் :
அன்று ஆதாம்
ஏவாள் அடிக்கல் நாட்டிய
ஆனந்த மாளிகை அது
ஆனந்த மாளிகை அது
பெண் :
உலகத்தில் சிறந்தது
காதல் உலகத்தில் சிறந்தது
காதல் அந்த காதல்
இல்லையேல் சாதல்
உலகத்தில் சிறந்தது
காதல்
ஆண் :
வட்டி கொடுப்போரும்
வாங்கி முடிப்போரும் மறக்க
முடியாதது வட்டி கொடுப்போரும்
வாங்கி முடிப்போரும் மறக்க
முடியாதது
ஆண் :
காதல் கட்டி
அணைப்போரும் கலந்து
மிதப்போரும் கடக்க
முடியாதது கடக்க
முடியாதது
ஆண் :
உலகத்தில் சிறந்தது
எது ஓர் உருவமில்லாதது
எது ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது
அனுபவமாவது அது
ஆண் :
உள்ளே உயிர்
வளர்த்து உதிரத்தால் பால்
கொடுத்து அள்ளி
இடும்போதெல்லாம்
அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும்
சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லியிடும்
தேவதையின் கோவில் அது
ஆண் :
பண்பு தெரியாத
மிருகம் பிறந்தாலும் பால்
தரும் கருணை அது சிலர்
பசித்த முகம் பார்த்து பதறும்
நிலை பார்த்து பழம் தரும்
சோலை அது
ஆண் :
இருக்கும் பிடி
சோறு தனக்கென்று
எண்ணாமல் கொடுக்கின்ற
கோவில் அது இருக்கும் பிடி
சோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது
ஆண் :
தினம் துடிக்கும்
உயிர் கண்டு தோளில்
இடம் தந்து அணைக்கின்ற
தெய்வம் அது
ஆண் :
அது தூய்மை
அது நேர்மை அது
வாய்மை அதன் பேர்
தாய்மை
ஆண் :
உலகத்தில்
சிறந்தது தாய்மை
அதை ஒப்பு கொள்வதை
நேர்மை உலகத்தில்
சிறந்தது தாய்மை
ஆண் & பெண் :
உலகத்தில்
சிறந்தது தாய்மை உலகத்தில்
சிறந்தது தாய்மை
Ulagathil Sirandhadhu - English Lyrics
Female :
Ulagaththil sirandhadhu edhu..
Orr uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu..
Anubavamaavadhu adhu..
Female :
Vatti kodupoorum
Vangi mudipporum
Kaana thudipadhu adhu
Vatti kodupoorum
Vangi mudipporum
Kaana thudipadhu adhu
Female :
Silar etti uthaithaalum
Katti adiththaalum
Idhayathil irupadhu adhu
Idhayathil irupadhu adhu
Female :
Ulagaththil sirandhadhu edhu..
Orr uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu..
Anubavamaavadhu adhu..
Female :
Arivaiyum keduppadhu
Azhaginil pirappadhu
Agilaththin perunkkadhai adhu
Arivaiyum keduppadhu
Azhaginil pirappadhu
Agilaththin perunkkadhai adhu
Female :
Andru aadhaam yevaal
Adikkal naattiya
Aanandha maaligai adhu..
Aanandha maaligai adhu..
Female :
Ulagaththil sirandhadhu kaadhal…
Ulagaththil sirandhadhu kaadhal…
Andha kaadhal illaiyael saadhal…
Ulagaththil sirandhadhu kaadhal…
Male :
Vatti kodupoorum
Vangi mudipporum
Marakka mudiyaadhadhu
Vatti kodupoorum
Vangi mudipporum
Marakka mudiyaadhadhu
Male :
Kaadhal katti anaipporum
Kalandhu midhapporum
Kadakka mudiyaadhadhu..
Kadakka mudiyaadhadhu..
Male :
Ulagaththil sirandhadhu edhu..
Orr uruvamillaadhadhu edhu
Ovvoru naattilum ovvoru veettilum
Anubavamaavadhu adhu..
Anubavamaavadhu adhu..
Male :
Ullae uyir valarththu..
Udhiraththaal paal koduththu
Alli idumbodhellaam
Anbaiyae serththeduththu
Thollai thanakkendrum
Sugamellaam unakkendrum
Sollaamal solliyidum
Devadhaiyin koviladhu..
Male :
Panbu theriyaadha
Mirugam pirandhaalum
Paal tharum karunai adhu
Silar pasiththa mugam paarththu
Padharum nilai paarththu
Pazham tharum solai adhu
Male :
Irukkum pidi soru
Thanakkendru ennaamal
Kodukkindra kovil adhu
Irukkum pidi soru
Thanakkendru ennaamal
Kodukkindra kovil adhu
Male :
Dhinam thudikkum uyir kandu
Tholil idam thandhu
Anaikkindra dheivam adhu
Male :
Adhu thooymai…..
Adhu nermai…
Adhu vaaimai..
Adhan per thaaimai…
Male :
Ulagaththil sirandhadhu thaaimai
Adhai oppu kolvadhae nermai..
Ulagaththil sirandhadhu thaaimai
Male & Female :
Ulagaththil sirandhadhu thaaimai
Ulagaththil sirandhadhu thaaimai