Tamil Lyrics

Vettaiyada Vaarum Mannava song lyrics

Movie — Raja Rajan

Singer(s) — S. C. Krishnan, Tiruchi Loganathan, Vadivamba

Lyricist — Muthukoothan

Music Director — K. V. Mahadevan

Vettaiyada Vaarum Mannava - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வேட்டையாட வாரும் மன்னவா
வன வேட்டையாட வாரும் மன்னவா
கொடும் வேங்கைப் புலி யானை தன்னை
விரட்டியடித்துப் பிடித்து மகிழ
வேட்டையாட வாரும் மன்னவா

ஆண் :
காட்டுப் பன்றிக் கூட்டம் தன்னைக்
கலைத்திடுவோம் சென்று
கரடி செந்நாய் மனிதக் குரங்கு
கதறிடக் கணை தொடுத்து நின்று
வேட்டையாட வாரும் மன்னவா

ஆண் :
ஆகா அப்படியே ஆகட்டும் மந்திரி
அடே யாரங்கே

ஆண் :
காவலா நீ சென்று
ஆவனச் செய்திட வேண்டும்
மக்கள் கஷ்டத்தை மகராஜன்
நான் தீர்க்க வேண்டும் காவலா
தாவியோடி வேட்டையாட விலங்க
தலை தப்பினேனென்று ஓடுமேயங்கு
தருணமிதே மிருக பயம்
தனையழிப்போம் மந்திரி
தாமதமேன் கானகம் செலத்தடுப்பவர்
யார் எந்திரி

பெண் :
ஆ பிராண நாதா
எங்கு செல்லுகின்றீர்
இப்போது வேகமாய்
எங்கு செல்லுகின்றீர்
சிங்காரவல்லிச் செந்தாமரையை
நீரும் விட்டு
எங்கு செல்லுகின்றீர்

ஆண் :
துட்ட மிருகங்கள் கொட்டத்தையடக்கத்
துரிதமாய் வனம் செல்லுகின்றேன் எனை
விட்டு அந்தப்புரம் தொட்டு நடந்திடு
வேட்டையாடி வந்து கொஞ்சுகின்றேன்

ஆண் :
பாவாய் நீ அந்தப்புரம் போவாய்

பெண் :
போகாதே போகாதே எந்தன் மன்னா
பிராண நாதா நேத்து
பொல்லாத சொப்பனங் கண்டேனே நான்
அய்யோ பொல்லாத சொப்பனங் கண்டேனே நான்
தேகம் நடுங்குது என் துரையே
எந்தன் மன்னா பெருந்தீங்கு
செய்வானிந்த மந்திரியே
அய்யோ தீங்கு செய்வானிந்த மந்திரியே

ஆண் :
மாதே நீ சொல்வதை
நம்ப மாட்டேன் எந்தன்
மந்திரி பேச்சையும் தட்ட மாட்டேன்
மந்த மதி கொண்ட சுந்தராங்கி உன்னை
மாட்டி வைத்தே சிறை பூட்டிடுவேன்

பெண் :
அய்யோ சுவாமி காடுமலை
வன வனாந்திரங்களுக்கு
இந்த நன்றி கெட்ட மந்திரியோடு
தனியாகவா போகிறீர்கள்
வேண்டாம் நாதா வேண்டாம்

பெண் :
மந்திரிப் பேச்சைக் கேட்டு
மன்னவா காடு சென்றால்
தந்திரமாக உமைத் தாக்கியே
துரத்தி விட்டு
கேடு நீர் செய்ததாலே
கிடைத்தது சாவு என்று
தேடுவோர் தமக்குக் சொல்லி
தேசத்தைக் கைக் கொள்வானே……ஏ…….ஏ…..ஏ…

வசனம் :
……………………………………….

பெண் :
கதைய முழுதும் சொல்லணும்
டே மாமா டே புருஷா
டியாலிங்குற டியாசிங்கா
கண்டிப்பா நான் தெரிஞ்சுக்க வேணும்

ஆண் :
தகடி புத்திக் கெட்ட போக்கிரிப் பெண்ணே
ஏ சிறுக்கி மேல்மினுக்கி
டியாலிங்குற டியாசிங்கி
போவாம் வாடி என்னோட பின்னே

பெண் :
ஏ அம்மே ஏ ஆயி நான் மாட்டேன்

ஆண் :
நீ வாடி

பெண் :
நான் மாட்டேன்

ஆண் :
டகுடி டிங்குடி
டாங்கு சுந்தரி
வாடி பின்னாலே

பெண் :
ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா
கதையை சொல்லு முன்னாலே

ஆண் :
டகுடி டிங்குடி
டாங்கு சுந்தரி
வாடி பின்னாலே

பெண் :
ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா
கதையை சொல்லு முன்னாலே

ஆண் :
திம்திம் தத்தினதிம் தினதின
தகதின திம் திம்திம்
அஃகூ அ அஃகூ அ அஃகூ அ அஃகூ

பெண் :
மக்களை ஏமாத்தி
மந்திரி நாடாளும்
மர்மத்தை நீ சொல்லு சிங்கா
அந்த மர்மத்தை நீ சொல்லு சிங்கா

ஆண் :
அய்யோ மன்னன் தீங்கு செய்து
மாண்டானென்று சொல்லி
மந்திரியாளுறான் சிங்கி
நாட்டை மந்திரியாளுறான் சிங்கி

பெண் :
முக்காடு போட்டுக் கழுத்தறுக்கும்
அந்த மோசக்காரன் பேரை சொல்லு சிங்கா
மோசக்காரன் பேரை சொல்லு

ஆண் :
அடியே முடியாது என்னாலே
பிடிவாதம் செய்யாதே
முட்டாளே நீ எட்டி நில்லு எட்டி நில்லு

பெண் :
அட சும்மா சொல்லு சிங்கா நான்
அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்குறேன்
ஆபத்து வராமே காத்துக்குறேன்

ஆண் :
படமெடுத்து ஆடும் அந்த
பாம்புக்கென்ன பேரு

பெண் :
நாகம்

ஆண் :
ம்……வடமலையான் மருத வள்ளி
தெய்வயானை புருசன் நாம
வணங்கும் அப்பன் சாமிக்கென்ன பேரு

பெண் :
வேலன் ஓ…

ஆண் :
ஸ்…

பெண் :
ஓ… நாக வேலன் நாகவேலன் உர்ர்ர்ர்ர்…

பெண் :
கத்தியினாலே காரியம்
சாதிக்க முடியாது
காரியம் முடியாது
இந்த கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர்
கிடையாது உர்ர்ர்ர்ர்…
சத்திய தர்ம நீதி நியாயமே இல்லாது
நீதி இல்லாது ஆளும்
சர்வாதிகார வெறியராட்சி இனி
செல்லாது உர்ர்ர்ர்ர்…

ஆண் :
ஒட்டாரம் பண்ணாதே
ஒங்க காலம் பொல்லாதே
ஊரு ஜனத்தைப் பகைச்சிகிட்டு
ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே நல்ல
ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே உர்ர்ர்ர்…

இருவர் :
கத்தியினாலே காரியம்
சாதிக்க முடியாது
காரியம் முடியாது
இந்த கத்தியை நம்பி வெகு நாள்
வாழ்ந்தவர் கிடையாது

இருவர் :
{கத்தியினாலே காரியம்
சாதிக்க முடியாது
காரியம் முடியாது
இந்த கத்தியை நம்பி வெகு நாள்
வாழ்ந்தவர் கிடையாது} (2)

Vettaiyada Vaarum Mannava - English Lyrics

Male :

Vaettaiyaada vaarum mannavaa

Vana vaettaiyaada vaarum mannavaa

Kodum vaengai puli yaanai thannai

Viratiyadithu pidithu magizha

Vaettaiyaada vaarum mannavaa

Male :

Kaattu pandri koottam thannai

Kalaithiduvom sendru

Karadi sennaai manidha kurangu

Kadharida kanai thoduthu nindru

Vaettaiyaada vaarum mannavaa

Male :

Aagaa appadiyae aagattum mandhiri

Adae yaarangae

Male :

Kaavalaa nee sendru

Aavana seidhida vendum

Makkal kashtathai maharaajan

Naan theerkka vaendum kaavalaa

Thaaviyodi vaettaiyaada vilangu

Thalai thappinaenendru odumae angu

Tharunamidhae miruga bayam

Thanaiyazhippom mandhiri

Thaamadhamaen kaanagam selathappadubavar

Yaar endhiri

Female :

Aa praana naadhaa

Engu sellugindreer

Ippodhu vaegamaai

Engu sellugindreer

Singaaravalli sendhaamaraiyai

Neerum vittu

Engu sellugindreer

Male :

Thutta mirugangal kottathaiyadakka

Thuridhamaai vanam sellugindraen

Enai vittu andhappuram thottu nadandhidu

Vaettaiyaadi vandhu konjugindren

Male :

Paavaai nee andhappuram povaai

Female :

Pogaadhae pogaadhae endhan mannaa

Praana naadhaa naethu

Pollaadha soppanang kanden naan

Aiyo pollaadha soppanang kanden naan

Dhaegam nadungudhu en dhuraiyae

Endhan mannaa peruntheengu

Seivaanindha mandhiriyae

Aiyo theengu seivaanindha mandhiriyae

Male :

Maadhae nee solvadhai

Namba maatten endhan

Mandhiri pechaiyum thatta maatten

Mandha madhi konda sundharaangi unnai

Maatti vaithae sirai poottiduven

Female :

Aiyo swaami kaadumalai

Vana vanaandhirangalukku

Indha nandri ketta mandhiriyodu

Thaniyaagavaa pogireergal

Vendaam naadhaa vendaam

Female :

Mandhiri pechai kettu

Mannavaa kaadu sendraal

Thandhiramaaga umai thaakkiyae

Thurathi vittu

Kaedu neer neidhadhaalae

Kidaithadhu saavu endru

Thaeduvor thamakku cholli

Dhesathai kai kolvaanae… ae…ae…ae…

Dialogue :

……………

Female :

Kadhaiya muzhudhum sollanum

Dae maamaa dae purushaa

Diyaalinghura diyaasinghaa

Kandippaa naan therinjukka venum

Male :

Thagadi buthi ketta pokkiri pennae

Ae sirukki mael minukki

Diyaalinghura diyaasinghi

Povom vaadi ennoda pinnae

Female :

Ae ammae ae aayi naan maatten

Male :

Nee vaadi

Female :

Naan maatten

Male :

Dagudi dinghudi

Daangu sundhari

Vaadi pinnalae

Female :

Aathaadi damukku dippaa singaa

Kadhaiyai sollu munnaalae

Male :

Dagudi dinghudi

Daangu sundhari

Vaadi pinnalae

Female :

Aathaadi damukku dippaa singaa

Kadhaiyai sollu munnaalae

Male :

Dhimdhim thatthinathim dhinadhina

Thaghadhina dhim dhimdhim

Akkoo a akkoo a akkoo a akkoo

Female :

Makkalai yaemaathi

Mandhiri naadaalum

Marmathai nee sollu singaa

Andha marmathai nee sollu singaa

Male :

Aiyo mannan theengu seidhu

Maandaanendru solli

Mandhiriyaalugindraan singi

Naattai mandhiriyaalugindraan singhi

Female :

Mukkaadu pottu kazhutharukkum

Andha mosakkaaran perai sollu singaa

Mosakkaaran perai sollu

Male :

Adiyae mudiyaadhu ennaalae

Pidivaadham seiyaadhae

Muttaalae nee yetti nillu yetti nillu

Female :

Ada summaa sollu singaa naan

Angittum ingittum paathukkuren

Aabatthu varaamae kaathukkuren

Male :

Padamedutthu aadum andha

Paambukkenna peru

Female :

Naagam

Male :

Mmm…vadamalaiyaan marudha valli

Dheivaanai purusan naama

Vanangum appan saamikkeena peru

Female :

Vaelan oo…

Male :

Ss…

Female :

O… naaga vaelan naagavaelan urrrrr…

Female :

Kathiyinaalae kaariyam

Saadhikka mudiyaadhu

Kaariyam mudiyaadhu

Idha kathiyai nambi vegu naal vaazhndhavar

Kidaiyaadhu urrrrr…

Sathiya dharma needhi niyaayamae illaadhu

Needhi illaadhu aalum

Sarvaadhigaara veriyaatchi ini

Sellaadhu urrrrr…

Male :

Ottaaram pannaadhae

Onga kaalam pollaadhae

Ooru janathai pagaichukkittu

Odambai keduthu kollaadhae nalla

Odambai keduthu kollaadhae urrrrr…

Both :

Kathiyinaalae kaariyam

Saadhikka mudiyaadhu

Kaariyam mudiyaadhu

Idha kathiyai nambi vegu naal

Vaazhndhavar kidaiyaadhu

Both :

{Kathiyinaalae kaariyam

Saadhikka mudiyaadhu

Kaariyam mudiyaadhu

Idha kathiyai nambi vegu naal

Vaazhndhavar kidaiyaadhu} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vettaiyada Vaarum Mannava

Which movie does the song Vettaiyada Vaarum Mannava belong to?

The song Vettaiyada Vaarum Mannava is from the movie Raja Rajan.

Who is the music director of Vettaiyada Vaarum Mannava?

The music for Vettaiyada Vaarum Mannava is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Vettaiyada Vaarum Mannava?

The lyrics for Vettaiyada Vaarum Mannava are penned by Muthukoothan.

Who sang the Vettaiyada Vaarum Mannava song?

Vettaiyada Vaarum Mannava is sung by S. C. Krishnan, Tiruchi Loganathan, Vadivamba.

Related Songs