Andha Anbulla Annakkili - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் :
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண் :
இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண் :
முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள்
நேற்று தண்டித்தாள் இன்று சிந்தித்தாள்
ஆண் :
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண் :
ஒரு பார்வையில் விதை வந்தது
மறுப் பார்வையில் மழை வந்தது
துளிர் விட்டது நெஞ்சம்
பெண் மனம் குளிர்விட்டது கொஞ்சம்
பெண் :
கூந்தலில் பூக்களை ஒளித்தேன்
சின்னக் கோபத்தில் காதலை மறைத்தேன்
காதலும் வானமும் ஒன்றுதான்
அதை கைகளில் மூடிட நினைத்தேன்
பெண் :
ஊமைகள் நாடகத்தில் நானொரு பாத்திரமா
நாடகம் முடிந்துவிட்டால் மௌனமும் சாத்தியமா
என்று சிந்தித்தேன் நாளை சந்திப்பேன்
இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமே
உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமே
குழு :
………………………
ஆண் :
முத்தக்கலை கற்ப்பிக்கவும்
மோகக் கதை ஒப்பிக்கவும் நெஞ்சென்பது இல்லை
கண்மணி நேசம் போல் இல்லை
ஆண் :
காதலில் நானின்று வீழ்ந்தேன்
உந்தன் கண்களில் கண்களை இழந்தேன்
பார்வைக்கு ஆறடி இருந்தேன்
உன்னை பார்த்ததும் ஓரடி குறைந்தேன்
ஆண் :
புன்னகை ஓவியமே போவது நீதியில்லை
நீ எனை நீங்கிவிட்டால் வாழ்க்கையில் பாதியில்லை
வந்து நில்லம்மா வார்த்தை சொல்லம்மா
ஆண் :
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண் :
முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள்
நேற்று தண்டித்தாள் இன்று மன்னித்தாள்…..
குழு :
லாலா லல்லல் லா……
ஆண் :
லாலா லல்லல் லா……
குழு :
லாலா லல்லல் லா……
Andha Anbulla Annakkili - English Lyrics
Chorus :
……………….
Male :
Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female :
Intha anpulla annakkili thannai tharumaa
Unnai santhikka aasaipattu jannal vittu varumaa
Female :
Munbu santhiththaal pinbu kandiththaal
Netru thandiththaal indru sinthithaal
Male :
Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female :
Oru paarvaiyil vvidhai vanthathu
Maru parvaiyil mazhai vanthathu
Thulir vittathu nenjam
Pen manam kulivittathu konjam
Female :
Koondhalil pookkalai olithaen
Chinna kobaththil kadhalai maraiththaen
Kadhalum vaanamum ondruthaan
Adhai kaigalil moodida ninaiththaen
Female :
Oomaigal naadakaththil naanoru paaththiramaa
Naadagam mudinthuvittaal mounamum saaththiyamaa
Endru sinthiththaen naalai santhippaen
Intha anbulla annakkili thannai tharumae
Unnai santhikka aasaipattu jannal vittu varumae
Chorus :
……………….
Male :
Muththakkalai karpikkavum
Moga kadhai oppikkavum nenjenbathu illai
Kanmani nesam pol illai
Male :
Kadhalil naanindru veezhnthaen
Unthan kangalil kangalai izhanthen
Paarvaikku aaradi irunthaen
Unnai paarthathum oradi kurainthaen
Male :
Punagai oviyamae povathu needhiyillai
Nee enai neengivittaal vaazhkkaiyil paadhiyillai
Vanthu nillammaa vaarththai sollammaa
Male :
Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female :
Munbu santhiththaal pinbu kandiththaal
Netru thandiththaal indru sinthithaal
Chorus :
Laalaa lallal laa….
Male :
Laalaa lallal laa….
Chorus :
Laalaa lallal laa….