Tamil Lyrics

Imaiyum Vizhiyum song lyrics

Imaiyum Vizhiyum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மேகம் குவிந்ததம்மா
மேகம் குவிந்ததம்மா
மின்னல் வரப் போகுதம்மா
மோதும் இடி முழக்கம்
முன்னோடி வந்ததம்மா
அம்மா அம்மா ஆஅ….ஆஅ…ஆஅ…

பெண் :
இமையும் விழியும் எதிரானால்
இயற்கை சிரிக்காதோ
இமையும் விழியும் எதிரானால்
இயற்கை சிரிக்காதோ
தாயும் சேயும் பகையானால்
தாரணி நகைக்காதோ
தாயும் சேயும் பகையானால்
தாரணி நகைக்காதோ

ஆண் :
நகைக்கட்டும்
நன்றாக நகைக்கட்டும்
நீயும் நகைத்துவிடு
வலு உள்ளவர்கள் வாழ்கிறார்கள்
வாழ்வுல்லார்கள் சிரிக்கிறார்கள்
சாவை கண்டு சிரிக்க பழகு
சஞ்சலம் மறைந்து விடும்
ரத்த ஓட்டத்திலிருந்து
பாசத்தை எடுத்துவிடு
இதயம் சுத்தமாகி விடும்
மண்டை ஓடுகளின் மீது நடந்து
மண்டலத்தை ஆண்டவர் பலர்
தன தம்பியின் தலை மீது
நடந்து தரையினை ஆள போகிறவன்
உன் கணவன் (வசனம்)

பெண் :
ஒரு தாய் மக்கள்
பொருதும் காலம்
வருவது சரிதானோ
ஒரு தாய் மக்கள்
பொருதும் காலம்
வருவது சரிதானோ
இருதலைக் கொள்ளி எறும்பாய் நானும்
மடிவதும் முறைதானோ
மடிவதும் முறைதானோ

ஆண் :
ஹ்ம்ம் பைத்தியகாரி
வர கூடாது வந்து விட்டது
அழுதாலும் தொழுதாலும் அதில் ஓர்
எழுத்து மாறாது
வாழ தெரியாதவன் வறண்டு போன
தத்துவங்களின் பிரதிநிதி
ஜெயிக்க கட்சியிலே சேர தெரியாதவன்
போராடுவோர் பக்கம் சேர்ந்து
புத்தி இல்லாதவன்
சாவதற்கு என்றே பிறந்து விட்ட
துர்பாக்கியம் பிடித்த என் சகோதரன்
அவன் ஆத்மா சாந்தி அடையட்டும்
சாந்தி அடையட்டும் (வசனம்)

பெண் :
நாட்டுப் படகைச்
சாய்க்கும் புயலாய்
நாமும் வரலாமோ
நாட்டுப் படகைச்
சாய்க்கும் புயலாய்
நாமும் வரலாமோ
நாளைய உலகில் துரோகிகள் என்னும்
பெயரும் பெறலாமோ
பெயரும் பெறலாமோ…..

ஆண் :
ஹ்ம்ம் பெயரில் என்ன இருக்கிறது
நூறு பேர் கூடி
ஊர்வலம் நடத்தி
வீராதி வீரன் என்று
வாழ்த்து பா பாடினால்
துரோகி தியாகி ஆவான்
குழப்பம் புரிந்தவன்
முழக்கம் செய்தவன் ஆவான்
கொள்ளை அடித்தவன்
வள்ளலாய் மாறுவான்
மந்தை ஆடுகள் மக்கள்
வாழ்ந்து காட்டுகிறேன் என்பான்
வருக வருக வென வாழ்த்துரைக்க
செய்கிறேன் என்பான்
கல் ஆகிவிட்டது நெஞ்சம்
கரைக்க முடியாது யாரும் (வசனம்)

பெண் :
தேவன் இதயம் கல்லானால்
தேவியர் துணை இல்லையோ
ஆவியைத் தருவார் அவரென்றால்
அடைக்கலம் கிடைக்காதோ
அடைக்கலம் கிடைக்காதோ
அடைக்கலம் கிடைக்காதோ
தாயே தாயே தாயே

Imaiyum Vizhiyum - English Lyrics

Female :

Megam kuvinthathamma

Megam kuvinthathamma

Minnal vara poguthamma

Modhum idi mulakkam

Munnodi vandhadhamma

Ammaaa ammaa aaa….aaa…aaa..

Female :

Imaiyum vizhiyum edhiraanaal

Iyarkkai sirikkatho

Imaiyum vizhiyum edhiraanaal

Iyarkkai sirikkatho

Thaaiyum seiyum pagaiyaanaal

Thaarani nagaikaadho

Thaaiyum seiyum pagaiyaanaal

Thaarani nagaikaadho

Male :

Nagaikkattum

Nandraaga nagaikkattum

Neeyum nagauthuvidu

Valu ullavargal vaazhgiraargal

Vaazhvullargal sirikkiraargal

Saavai kandu sirikka pazhagu

Sanjalam maraindhu vidum

Raththa ottathilirunthu

Pasaththai eduthu vidu

Idhayam suthamaagi vidum

Mandaodugalin meedhu nadandhu

Mandalathai aandavar palar

Than thambiyin thalai meedhu

Nadanthu tharaniyai aalzha pogiravan

Un kanavan (Dialogue)

Female :

Oru thaai makkal

Poruthum kaalam

Varuvathum sarithaanoo

Oru thaai makkal

Poruthum kaalam

Varuvathum sarithaanoo

Iruthalai kolli erumbaai naanum

Madivadhum murai thaanoo

Madivadhum murai thaanoo

Male :

Hmm paithiyakaari

Vara koodathu vandhu vittadhu

Aluthaalum tholuthaalum athil orr

Ezhuthu maaradhu

Vaazha teriyadhavan varandu pona

Thathuvangalin pradhinidhi

Jeyikka katchiyilae sera theriyadhavan

Poraaduvor pakkam serndhu

Buthi illandhavan

Saavadharkku endrae pirandhu vitta

Thurbaakiyam piditha en sagodharan

Avan aathma santhi adaiyattum

Santhi adaiyatthum (Dialogue)

Female :

Naattu padagai

Saaikkum puyalaai

Naamum varalaamo

Naattu padagai

Saaikkum puyalaai

Naamum varalaamo

Naalaiya ulagil throgigal ennum

Peyarum peralaamo

Peyarum peralaamo

Male :

Hmm peyaril enna irukkirathu

Nooru per koodi

Oorvalam nadathi

Veerathi veeran endru

Vaazhthu paa paadinaal

Throghi thiyaagi aavaan

Kulappam purindhavan

Mulakkam seidhavan aaavan

Kollai adithavan

Vallalaai maaruvaan

Mandhai aadugal makkal

Vaazhnthu kaatugiren enbaan

Varuga varuga vena vaazhthuraikka

Seigiren enbaan

Kall aagivittadhu nenjam

Karaikka mudiyathu yaarum

Female :

Devan idhayam kallaanaal

Dheviyar thunai illaiyoo

Aaviyai tharuvaar avar endraal

Adaikalam kedaikaadhoo

Adaikalam kedaikaadhoo

Adaikalam kedaikaadhoo

Thaayae thaayae thaayae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Imaiyum Vizhiyum

Which movie does the song Imaiyum Vizhiyum belong to?

The song Imaiyum Vizhiyum is from the movie Sivagangai Seemai.

Who is the music director of Imaiyum Vizhiyum?

The music for Imaiyum Vizhiyum is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Imaiyum Vizhiyum?

The lyrics for Imaiyum Vizhiyum are penned by Kannadasan.

Who sang the Imaiyum Vizhiyum song?

Imaiyum Vizhiyum is sung by P. Suseela, Dialogues by P. S. Veerappa.

Related Songs