Ithazh Inikka - தமிழ் பாடல் வரிகள்
இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே
கலை வளர ஜெயிக்கும்
இசைப் பாடியே
ஆண் :
இது ராஜாவின் ராஜாங்கம்
புது ரோஜாவின் பூபாளம்
சுக சங்கீத ஊர்கோலம்
வரும் உல்லாச வைபோகம்
பெண் :
ஒரு யோகமே பரிசாகுமே
கர ஒலிகள் கொடுக்கும்
சுக லயங்களே
பெண் :
இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே…ஏ…..
பெண்
: விண்வெளிக்கு போய் வரவே
விண்கலத்தில் ஏற்றி வைத்தே
பெண்களையும் போற்றும்
அயல் நாடுதான்
ஆண் :
பெண்களுக்கு சீர்வரிசை
செய்வதிலே பேரு பெற்ற
உன்னதத்தில் பாரதம்
போல் ஆகுமோ
பெண் :
காலம் எல்லாம்
மாதர் தம்மை
சோறு மட்டும் ஆக்கிடவே
பெண் அடிமை
ஆக்கி வைத்தார் நீதியா
ஆண் :
ஆணும் பெண்ணும்
சேரும் வாழ்வில்
ஆணின் நிழல் ஆவதுவே
பெண்களுக்கு பாதுகாப்பு ஆகுமே
பெண் :
சுக வாழ்வில் ஆணின் அடிமை
இங்கு ஏது பெண்ணுக்கு உரிமை
ஆண் :
சமமாக ஆணும் பெண்ணும்
ஒன்று சேர்ந்து வாழும் நிலம் இதே
பெண் :
இனி மாதரின் நிலை ஓங்கவே
சம உரிமை அடைய குரல் கொடுக்கலாம்
ஆண் :
இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
பெண் :
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே….ஏ…..
குழு :
………………………………
பெண் :
எத்தனையோ நாட்டினிலே
பந்தயத்தில் போட்டி இட்டே
வெற்றி பெற்ற பி டி உஷா
பொண்ணுதான்
ஆண் :
இல்லை என்று யாரு சொன்னா
நல்ல படி பயிற்சி தந்த
ஆண் பிள்ளையும் கேரளத்து
ஆளுதான்
பெண் :
வேலை வெட்டி ஏதும் இன்றி
சாலை பக்கம் காத்திருந்தே
பெண்களையே நோட்டம் இடும் ரோமியோ
ஆண் :
நாங்கள் கெட்டு போனதற்கு
சேலை மாறி போனதுதான்
உண்மையிலே காரணம்தான் ஆகுமே
பெண் :
பழி பேசி பெண்ணை பழிக்கும்
இதுதானே ஆணின் வழக்கம்
ஆண் :
இது போக போக புரியும்
நிஜம் எதுதான் என்று தெரியும்
பெண் :
வரும் காலமும் சரியாகவே
தலை நிமிர்ந்து எழுந்து அணிவகுக்கலாம்
ஆண் :
இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
பெண் :
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே
கலை வளர ஜெயிக்கும்
இசைப் பாடியே
ஆண் :
இது ராஜாவின் ராஜாங்கம்
புது ரோஜாவின் பூபாளம்
பெண் :
சுக சங்கீத ஊர்கோலம்
வரும் உல்லாச வைபோகம்
ஆண் :
ஒரு யோகமே பரிசாகுமே
கர ஒலிகள் கொடுக்கும்
சுக லயங்களே
பெண் :
இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
ஆண் :
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே ஹோ ஹோ
Ithazh Inikka - English Lyrics
Female :
Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Ini arangil nadakkum oru pottiyae
Kalai valara jeyikkum isai paadiyae
Male :
Idhu raajaavin raajaangam
Pudhu rojaavin boopaalam
Suga sangeetha oorkolam
Varum ullaasa vaibogam
Female :
Oru yogamae parisaagumae
Kara oligal kodukkum suga layangalae
Female :
Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Ini arangil nadakkum oru pottiyae..ae…
Female :
Vinvelikku poi varavae
Vinkalathil yetri vaithae
Pengalaiyum pottrum
Ayal naadu thaan
Male :
Pengalukku seervarisai
Seivadhilae peru petra
Unnadhathil baaradham
Pol aagumo
Female :
Kaalam ellaam
Maadhar thammai
Soru mattum aakkidavae
Pen adimai aakki vaithaar needhiyaa
Male :
Aanum pennum
Serum vaazhvil
Aanin nizhal aavadhuvae
Pengalukku paadhugaappu aagumae
Female :
Suga vaazhvil aanin adimai
Ingu yedhu pennukku urimai
Male :
Samamaaga aanum pennum
Ondru serndhu vaazhum nilam idhae
Female :
Ini maadharin nilai ongavae
Sama urimai adaiya kural kodukkalaam
Male :
Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Female :
Ini arangil nadakkum
Oru pottiyae..ae…
Chorus :
………………………………….
Female :
Ethanaiyo naattinilae
Pandhaiyatthil potti ittae
Vetri petra P T usha ponnu thaan
Male :
Illai endru yaaru sonnaa
Nalla padi payirchi thandha
Aan pillaiyum keralatthu
Aalu thaan
Female :
Vaelai vetti yedhum indri
Saalai pakkam kaathirundhae
Pengalaiyae nottam idum romeo
Male :
Naangal kettu ponadharkku
Selai maari pondhu thaan
Unmaiyilae kaaranam thaan aagumae
Female :
Pazhi pesi pennai pazhikkum
Idhu thaanae aanin vazhakkam
Male :
Idhu poga poga puriyum
Nijam yedhu thaan endru theriyum
Female :
Varum kaalamum sariyaagavae
Thalai nimirndhu ezhundhu anivagukkalaam
Male :
Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Female :
Ini arangil nadakkum oru pottiyae
Kalai valara jeyikkum isai paadiyae
Male :
Idhu raajaavin raajaangam
Pudhu rojaavin boopaalam
Female :
Suga sangeetha oorkolam
Varum ullaasa vaibogam
Male :
Oru yogamae parisaagumae
Kara oligal kodukkum suga layangalae
Female :
Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Male :
Ini arangil nadakkum
Oru pottiyae hoo ooo