Tamil Lyrics

Kalyaana Maalai 1 song lyrics

Movie — Pudhu Pudhu Arthangal

Singer(s) — S.P. Balasubrahmanyam, Ilayaraja

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Kalyaana Maalai 1 - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன் } (2)
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண் :
கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண் :
வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது மாலையிடும்
சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது

ஆண் :
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண் :
நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

ஆண் :
கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண் :
கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண் :
கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா

ஆண் :
நாள்தோறும்
ரசிகன் பாராட்டும்
கலைஞன் காவல்கள்
எனக்கில்லையே சோகங்கள்
எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே

ஆண் :
துக்கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான்

ஆண் :
கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண் :
கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்

Kalyaana Maalai 1 - English Lyrics

Male :

{Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen} (2)

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae

Male :

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Male :

Vaalibangal odum vayadhaaga koodum

Aanaalum anbu maaraadhathu

Maalaiyidum sondham mudipotta bandham

Pirivennum sollae ariyaadhathu

Male :

Azhagaana manaivi anbaana thunaivi

Amaindhaalae perinbamae

Madimeedhu thuyila sarasangal payila

Moghangal aarambamae

Male :

Nalla manaiyaalin nesam oru kodi

Nenjamenum veenai paadumae thodi

Sandhoosha saamraajyamae…

Male :

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae

Male :

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Male :

Koovugindra kuyilai koottukkul vaithu

Paadendru sonnaal paadaadhamaa

Solaimayil thannai siraivaithu pootti

Aadendru sonnaal aadaadhamaa

Male :

Naaldhorum rasigan paarattum kalainjan

Kaavalgal enakillaiyae

Sogangal enakum nenjodu irukkum

Sirikaadha naalillaiyae

Male :

Thukkam silaneram pongivarumbodhum

Makkal manampolae paaduven kannae

En sogham ennodudhaan…

Male :

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Suruthiyodu layam polavae

Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae

Male :

Kalyaana maalai kondaadum pennae

En paattai kelu unmaigal sonnen

Hmmm..mmmm..mmmmm…mmmmmm..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalyaana Maalai 1

Which movie does the song Kalyaana Maalai 1 belong to?

The song Kalyaana Maalai 1 is from the movie Pudhu Pudhu Arthangal.

Who is the music director of Kalyaana Maalai 1?

The music for Kalyaana Maalai 1 is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kalyaana Maalai 1?

The lyrics for Kalyaana Maalai 1 are penned by Vaali.

Who sang the Kalyaana Maalai 1 song?

Kalyaana Maalai 1 is sung by S.P. Balasubrahmanyam, Ilayaraja.

Related Songs