Tamil Lyrics

Maaname Perithendra song lyrics

Maaname Perithendra - தமிழ் பாடல் வரிகள்

:
பி. லீலா

இசை அமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி

பெண் :
மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே
வாவா வாவா வா……மகளே…….
நீருண்டு விளைகின்ற நிலமுண்டு
இங்கே நிலையான வளமும் உண்டு
ஏருண்டு உன் கையில் எதிர்காலம் உருவாக்கும்
இணையில்லா பலமும் உண்டு….
நீருண்டு விளைகின்ற நிலமுண்டு
இங்கே நிலையான வளமும் உண்டு
ஏருண்டு உன் கையில் எதிர்காலம் உருவாக்கும்
இணையில்லா பலமும் உண்டு….
மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே
வாவா வாவா வா……மகளே…….

பெண் :
பேருண்டு நீ இங்கு பெரும்பாடுபட்டாலே
பின்னாலே பலனும் உண்டு
பேருண்டு நீ இங்கு பெரும்பாடுபட்டாலே
பின்னாலே பலனும் உண்டு
சீருண்டு நீ உண்ண சோறுண்டு
இயற்கையின் செல்வங்கள் பலவும் உண்டு….
சீருண்டு நீ உண்ண சோறுண்டு
இயற்கையின் செல்வங்கள் பலவும் உண்டு….
மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே
வாவா வாவா வா……மகளே…….

பெண் :
நேர் நின்று எஜமானர் நான் என்று சொல்லவே
நிறைய பேர் ஊரில் உண்டு
நேர் நின்று எஜமானர் நான் என்று சொல்லவே
நிறைய பேர் ஊரில் உண்டு
பார் இன்று அத்தகைய பண்பிலா மானிடப்
பதர்கள் இங்கே யாருண்டு
பார் இன்று அத்தகைய பண்பிலா மானிடப்
பதர்கள் இங்கே யாருண்டு
மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே
வாவா வாவா வா……மகளே…….

பெண் :
ஆண்டானும் இங்கில்லை அடிமையும் இங்கில்லை
அமைந்திடும் சம வாழ்வின் எல்லை
ஆண்டானும் இங்கில்லை அடிமையும் இங்கில்லை
அமைந்திடும் சம வாழ்வின் எல்லை
வேண்டாத போட்டி பொறாமைகள் இல்லை
மெய்யான சொர்க்கம் வேறில்லை…..
வேண்டாத போட்டி பொறாமைகள் இல்லை
மெய்யான சொர்க்கம் வேறில்லை…..
மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே
வாவா வாவா வா……மகளே…….

Maaname Perithendra - English Lyrics

Music Director :

K. V. Mahadevan

Lyricist :

A. Maruthakasi

Female :

Maanamae perithendra valaiyaadha gunakundrae

Vaa vaa.. vaa vaa… vaa… magalae

Neerundu vilaigindra nilamundu

Ingae nilaiyaana valamum undu

Yerundu un kaiyil edhirkaalam uruvakkum

Inaiyilla balamum undu

Neerundu vilaigindra nilamundu

Ingae nilaiyaana valamum undu

Yerundu un kaiyil edhirkaalam uruvakkum

Inaiyilla balamum undu

Maanamae perithendra valaiyaadha gunakundrae

Vaa vaa.. vaa vaa… vaa… magalae

Female :

Perundu nee inghu perum paadupattaalae

Pinnaalae palanum undu

Perundu nee inghu perum paadupattaalae

Pinnaalae palanum undu

Seerundu nee unna soruundu

Iyarkaiyin selvangal palavum undu

Seerundu nee unna soruundu

Iyarkaiyin selvangal palavum undu

Maanamae perithendra valaiyaadha gunakundrae

Vaa vaa.. vaa vaa… vaa… magalae

Female :

Ner nindru ejamaanar naan endru sollavae

Niraiya per ooril undu

Ner nindru ejamaanar naan endru sollavae

Niraiya per ooril undu

Paar endru athagaiya panbilla maanida

Padhargal ingae yaarundu

Paar endru athagaiya panbilla maanida

Padhargal ingae yaarundu

Maanamae perithendra valaiyaadha gunakundrae

Vaa vaa.. vaa vaa… vaa… magalae

Female :

Aandaanum ingillai adimaiyum ingillai

Amaindhidum sama vaazhvin ellai

Aandaanum ingillai adimaiyum ingillai

Amaindhidum sama vaazhvin ellai

Vendaatha potti poramaigal illai

Meiyaana sorgam ver illai

Vendaatha potti poramaigal illai

Meiyaana sorgam ver illai

Maanamae perithendra valaiyaadha gunakundrae

Vaa vaa.. vaa vaa… vaa… magalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maaname Perithendra

Which movie does the song Maaname Perithendra belong to?

The song Maaname Perithendra is from the movie Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom.

Who is the music director of Maaname Perithendra?

The music for Maaname Perithendra is composed by Unknown.

Who wrote the lyrics for Maaname Perithendra?

The lyrics for Maaname Perithendra are penned by A. Maruthakasi.

Who sang the Maaname Perithendra song?

Maaname Perithendra is sung by P. Leela.

Related Songs