Malaiyile Therkku Moolaiyile - தமிழ் பாடல் வரிகள்
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
பெண் :
மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண் :
சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
பெண் :
புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
பெண் :
மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண் :
வாசலை மூடாத தேவாலயம்
அனுதினம் காணாதோ ஆராதனம்
பெண் :
வார்த்தைகளில் கூறாத பிரேமாயணம்
உதடுகள் செய்யாதோ பாராயணம்
ஆண் :
வற்றாத ஆசைகளே ஒரு
குற்றால நீர் வீழ்ச்சியோ
பெண் :
சல்லாப வேளைகளில்
இந்த பொல்லாத ஆராய்ச்சியோ
ஆண் :
ஏனின்னும் நாணங்கள் வா கண்மணி..
பெண் :
பாற்கடல் போன்றது பூவுடல்
ஆண் :
அது நான் இன்று நீந்திட
தேனலை பாய்ந்திட ஆட……..
ஆண் :
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
பெண் :
கோகுலத்தின் கோபாலன் குழல் ஊதுவான்
குலமகள் ராதாவின் நிழல் தேடுவான்
ஆண் :
ஏழு ஸ்வரம் வேண்டாத இசை ஏதம்மா
இளந்தென்றல் தீண்டாத திசை ஏதம்மா
பெண் :
மெய் தொட்டால் ஓராயிரம்
கொடி மின்னல்கள் பாய்ந்தோடுது
ஆண் :
கைப் பட்டால் நூறாயிரம்
புது மொட்டுக்கள் பூவாகுது
பெண் :
நீ தந்து நான் தந்து தேன் மிஞ்சுமோ
ஆண் :
மீதமும் மிச்சமும் ஏனடி
பெண் :
சுகம் நீ தொட நான் தொட
ஊருணி போல் இங்கு ஊறும்
பெண் :
மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண் :
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
பெண் :
புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
ஆண் : சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
ஆண் :
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
Malaiyile Therkku Moolaiyile - English Lyrics
Male :
Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil
Maalaiyilae therkku moolaiyil
Moganam paaduthu maanguyil
Female :
Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil
Male :
Siru thooralum saaralum
Maargazhi megangal thoova
Female :
Pudhu mogamum vegamum
Poonthalir meniyil maeva
Female :
Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil
Male :
Vaasalgalai moodatha devaalayam
Anudhinam kaanadhadho aaradhanam
Female :
Vaarthaigalil kooradha premaayanam
Udhadugal seiyaadho paarayanam
Male :
Vattradha aasaigalae
Oru kuttraala neer veezhchiyo
Female :
Sallabha velaigalil
Indha polladha aaraichiyoo
Male :
Yeninum naanangal vaa kanmani
Female :
Paarkadal pondrathu poovudal
Male :
Adhu naan indru neendhida
Thean alai paaindhida aada
Male :
Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil
Female :
Gokulathin gopalan kuzhal oodhuvaan
Kulamagal raadhavin nizhal theduvan
Male :
Ezhu swaram vendaatha isai yedhamma
Ilanthendral theendaadha dhisai yedhamma
Female :
Mei thottaal ooraayiram
Kodi minnlagal paaindhoduthu
Male :
Kai pattaal noor aayiram
Pudhu mettugal poovaaguthu
Female :
Nee thandhu naan thandhu thaen minjumo
Male :
Meedhamum michamum yenadi
Female :
Sugam nee thoda naan thoda
Ooruni pol ingu oorum
Female :
Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil
Male :
Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil
Female :
Pudhu mogamum vegamum
Poonthalir meniyil maeva
Male :
Siru thooralum saaralum
Maargazhi megangal thoova
Male :
Maalaiyilae therkku moolaiyil
Moganam paaduthu maanguyil