Seer Mevum Gurupatham - தமிழ் பாடல் வரிகள்
சீர் மேவு குரு பதம் சிந்தையோடு வாய்க்கினும்
சிரம் மீது வைத்து போற்றி
ஜகமெல்லாம் மெச்ச ஜெயக்கொடி பறக்க விடும்
வீரப் பிரதாபன் நானே சரி
ஆண் :
சங்கத்துப் புலவர் பலர்
தங்கத்தோடு பொற்பதக்கம்
வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
எனக்கு இங்கில்லை ஈடென சொல்லிக் களித்தார்
ஆண் :
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி
பங்கப்பட்ட பாராதீரர்
சீரெழுத்து பாடி வாரேன் நானே
அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்
ஆண் :
யானையை பிடித்து….யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவா
ஆண் :
யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக் கவி சொல்லுதே புலவா
ஆண் :
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா
ஆண் :
பூதானம் கன்னிகாதானம்
சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
ஆண் :
கேள்விக்கு பதிலை கொண்டா
உடைச்சி ஏறிவேன் ரெண்டா
உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி
ஆண் :
சொல்றேன்……
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்
ஆண் :
சொல்லிட்டான்
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே
ஆண் :
சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
பாத்துக்கடா சரிதான்
ஆண் :
அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
ஆண் :
அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
ஆண் :
பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
எப்படி
ஆண் :
பரதேசியாய் திரிவது எதனாலே
பரதேசியாய் திரிவது எதனாலே
ஆண் :
ம்ம்ம்….அவன் பத்து வீட்டு சரி ….. வேணாம்
அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே
ஆண் :
தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே
ஆண் :
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
அண்ணே கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
ஆண் :
சொல்லிப்பிட்டியே
ஆண் :
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
ஆண் :
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
ஆண் :
நான் சொல்லட்டுமா சொல்லு
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
ஆண் :
சரிதான் சரிதான் சரிதான்
ஆண் :
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
ஆண் :
கத்தி…இல்ல….கோடாரி…இல்ல…ஈட்டி…ம்ஹூம்
கடப்பாரை…இல்லை…அதுவுமில்லையா
அப்புறம் பயங்கரமான ஆயுதம் அக்னி திராவமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே….நீயே சொல்லப்பா
ஆண் :
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக் கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது……
Seer Mevum Gurupatham - English Lyrics
Male :
Seer mevu guru padham
Sindhaiyodu vaaikkinum
Siram meedhu vaithu potri
Jagamellaam mecha jayakodi parakka vidum
Veera prathaaban naane sari
Male :
Sangathu pulavar palar
Thangathodu porpathakkam
Vangathu ponnaadai parisalithaar
Enakku ingillai eedena solli kilithaar
Male :
Intha singathuku munne oadi
Pangapatta paaraatheerar
Seerezhuthu paadi vaaren naane
Atharku oarezhuthu bathil solli paaren
Male :
Yaanaiyai pidithu yaanaiyai pidithu
Oru paanaikkul adaithu vaikka
Aathira padubavar pol allavaa
Male :
Yaanaiyai pidithu
Oru paanaikkul adaithu vaikka
Aathira padubavar pol allavaa
Umathaaramba kavi solluthe pulavaa
Male :
Veettin poonai kutti kaattil oadi
Puliyai pidithu thinna
Purappatta kathai pol allavaa
Tharpugazhchi paadugiraaye pulavaa
Male :
Boothaanam kannigathanam
Sornathaanam annadanam
Kothaanam undu parpala dhaanangal
Itharku melaana dhaanam irunthaal sollungal
Male :
Kelvikku bathilai kondaa
Udaichi eriven rendaa
Unnai jeyichi kattuven mundaa
Appuram parakka viduven sendaa
Jayakodi jayakodi parakkuthu jayakodi
Male :
Solren..
Ethanai dhaanam thanthaalum
Entha logam pugazhnthaalum
Dhaanathil siranthathu nithaananthaan
Nithaananthaan
Ethanai dhaanam thanthaalum
Entha logam pugazhnthaalum
Dhaanathil siranthathu nithaananthaan
Nidhaanathanai izhanthavarku eenandhaan
Male :
Sollittaan
Kovilai katti vaippathu ethanaale
Kovilai katti vaippathu ethanaale
Male :
Sirpa velaikku perumai undu athanaale
Paarthukkada sarithaan
Male :
Anna sathiram iruppathu ethanaale
Male :
Anna sathiram iruppathu ethanaale
Male :
Pala thinnai thoongi pasangal iruppathaale
Eppadi
Male :
Paradhesiyaai thirivathu ethanaale
Paradhesiyaai thirivathu ethanaale
Male :
Mmmm.. avan pathu veettu sari.. venaam
Avan pathu veettu sothu rusi kandathaale
Male :
Thambi inga gavani
Kaarirul soozhuvathu evvidathile
Thambi kaarirul soozhuvathu evvidathile
Male :
Katrarivillaatha moodar nenjagathile
Anne Katrarivillaatha moodar nenjagathile
Male :
Sollipittiye
Male :
Pugaiyum neruppilaamal erivathethu
Male :
Pugaiyum neruppillaama atheppadi eriyum
Male :
Naan sollattumaa sollu
Pugaiyum neruppilaamal erivathethu
Pasithu vaadum makkal vayiru athu
Male :
Haan sarithaan sarithaan
Male :
Ulagathile bayangaramaana aayutham ethu
Male :
Kathi.. illa.. kodaari.. illa.. eetti.. mmhhmm
Kadappaarai.. illai.. athuvumillaiyaa
Appuram bayangaramaana aayutham agni thiraavamo
Athu aayutham illaiye
Ada theriya maatenguthe.. neeye sollappaa
Male :
Ulagathile bayangaramaana aayutham ethu
Nilai kettu pona nayavanjagarin
Naakku thaan athu aahaa aahaa
Nilaikettu pona nayavanjagarin naakku thaan athu..