Tamil Lyrics

Thendral Kaatre Ondraai song lyrics

Movie — Adharmam

Singer(s) — Mano

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Thendral Kaatre Ondraai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹோ ஹோ……ஓஹோஹோ ஹோ ஹோ….
ஓஹோ….ஹா ஆஹா ஹா ஹா…

ஆண் :
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
புள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம்
பொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம்

ஆண் :
நாமிருவர் கையணைத்து
ஊர்வலமாய் போய் வரலாமா
இங்கு பூத்திருக்கும் பூக்களிடம்
வாழ்த்துக்களை வாங்கிடலாமா

ஆண் :
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா

குழு :
ஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….
ஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….
ஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….
ஓஹோஹ்ஹோ……

குழு :
சுள்ளுன்னு வெயில் ஏறுது
ஆமாடி அன்னக்கிளி
சில்லுன்னு காத்த தேடுது
ஆமாடி சொர்ணக்கிளி
சும்மாடி சுள்ளி பூக்குது
ஆமாடி பொன்னுமணி
சுமைதாங்கி நம்ம பாடுது
ஆமாடி தங்கமணி
ஊரு துளி நீரும் கொடுக்கும்…..
காடு நம்மை தாய்ப்போல் அணைக்கும்

ஆண் :
நீரை சுமந்து வரும்
ஆகாய மேகங்களே
நான் உங்கள் நண்பன் இல்லையோ
தாழப் பறந்து வரும்
தட்டாரப் பூச்சிகளே
நான் உங்கள் அண்ணன் இல்லையோ
மூங்கில்களின் மேலே
மரங்கொத்திகளே நீங்க
மூக்கு நுனியாலே தினம் கொத்துறது ஏங்க
துளைப் போட்டாக்க பூங்காத்து குடியேறும்
அந்த ஓசைதான் தேன் பாட்டா உருமாறும்
என் காதாரதான் அத நான் கேக்குறேன்
அந்த பாட்டுகளை பாடம் பண்ணி
பால் நிலவில் பாடிடுவேன் நான்

ஆண் :
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா

ஆண் :
சாதி சனங்களிடம்
சங்காத்தம் வேணாமுன்னு
காத்தோடு காலம் கழித்தேன்
கோயில் குளத்தை வச்சு
போராட்டம் பண்ணுறத
பாத்து நான் எட்டி இருப்பேன்

ஆண் :
நாட்டிலுள்ள பேதம்
இந்த காட்டில் இல்லை சாமி
வேங்கை புலி சிங்கம்
இங்க என்ன மதம் காமி
இங்கு பூசல்கள் ஏசல்கள் கிடையாது
இதுபோலேதான் மேலான இடம் ஏது
ஓர் வம்பும் இல்ல வீண்வாதம் இல்ல
இங்கு சூரியன் போல் சந்திரன் போல்
சுதந்திரமாய் திரிஞ்சிடுவேன் நான்

ஆண் :
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
புள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம்
பொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம்

ஆண் :
நாமிருவர் கையணைத்து
ஊர்வலமாய் போய் வரலாமா
இங்கு பூத்திருக்கும் பூக்களிடம்
வாழ்த்துக்களை வாங்கிடலாமா

ஆண் :
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா

Thendral Kaatre Ondraai - English Lyrics

Male :

Ho ho… 0hoho ho ho…

Oho… haa aaha haa haa…

Male :

Thendral kaatrae ondraai povomaa

Thullum vellam endrae aavomaa

Pullinangal paatteduthu paadura naeram

Pon aruvi kaaleduthu odura naeram

Naam iruvar kai anaithu

Oorvalammaai poi varalaamaa

Ingu poothirukkum pookkalidam

Vaazhthukkalai vaangidalaamaa

Male :

Thendral kaatrae ondraai povomaa

Thullum vellam endrae aavomaa

Chorus :

Sullunu veyil yaerudhu

Aamaandi anna kili

Sillunnu kaatha thaedudhu

Aamaandi chella kili

Summaadi sulli pookkudhu

Aamaandi ponnu mani

Sumai thaangi nammai paadudhu

Aamaandi thanga mani

Ooru thuli neerum kodukkum

Kaadu nammai thaai pol anaikkum

Male :

Neerai chumandhu varum

Aagaaya megangalae

Naan ungal nanban illaiyo

Thaazha paarandhu varum

Thasthaara poochigalae

Naan ungal annan illaiyo

Moongilgalin melae

Maram kothigalae neenga

Mookku nuniyaala dhinam kothuradhu yaenga

Thola pottaakkaa poongaathu kudiyaerum

Andha osai thaan thaen paattaa uru maarum

En kaadhara thaan adha naan kekkuren

Andha paattugala paadam panni

Paal nilavil paadiduven naan

Male :

Thendral kaatrae ondraai povomaa

Thullum vellam endrae aavomaa

Male :

Saadhi sanangalidam

Sangaatham venaaminnu

Kaattoda kaalam kazhithaen

Koyil kulatha vechu

Poraattam pannuradha

Paathu naan yetti iruppen

Male :

Naattil ulla baedham

Indha kaattil illa saami

Vaengai puli singam

Inga yenna madham kaami

Ingu poosalgal yaesalgal kidaiyaadhu

Idhu polae thaan melaana idam yaedhu

Or vambum illa veen vaadham illa

Ingu sooriyan pol chandhiran pol

Sudhandhiramaa thirinjiduven naan

Male :

Thendral kaatrae ondraai povomaa

Thullum vellam endrae aavomaa

Pullinangal paatteduthu paadura naeram

Pon aruvi kaaleduthu odura naeram

Naam iruvar kai anaithu

Oorvalammaai poi varalaamaa

Ingu poothirukkum pookkalidam

Vaazhthukkalai vaangidalaamaa

Male :

Thendral kaatrae ondraai povomaa

Thullum vellam endrae aavomaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thendral Kaatre Ondraai

Which movie does the song Thendral Kaatre Ondraai belong to?

The song Thendral Kaatre Ondraai is from the movie Adharmam.

Who is the music director of Thendral Kaatre Ondraai?

The music for Thendral Kaatre Ondraai is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thendral Kaatre Ondraai?

The lyrics for Thendral Kaatre Ondraai are penned by Isaignani Ilayaraja.

Who sang the Thendral Kaatre Ondraai song?

Thendral Kaatre Ondraai is sung by Mano.

Related Songs

Movie — Adharmam

Music Director — Ilayaraja

Movie — Adharmam

Music Director — Ilayaraja

Movie — Adharmam

Music Director — Ilayaraja

Movie — Adharmam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja