Thesathai Paarkaiyile - தமிழ் பாடல் வரிகள்
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
ஆண் :
அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் :
அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் :
நித்தம் பல குற்றங்களைச் செய்பவனைக் கண்டு
ரத்தம் கொதிக்குதடா
கொள்கைதனை விற்கும் சில கூட்டங்களைக் கண்டு
சித்தம் துடிக்குதடா
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா….ஆஆஆஆஆ….
ஆண் :
{பட்டப் படிப்புகள் கற்ற இளைஞர்கள்
யாருக்கும் வேலையில்ல
இதில் மாட்சிமை தாங்கிய ஆட்சியில் உள்ளவர்கள்
யாருக்கும் வெட்கமில்லை} (2)
ஆண் :
ஜாதி ஒழிந்திட மேடை அதிர்ந்திடத்
தலைவர்கள் முழங்குகிறார்
அவர் ஆயிரம் பேசினும்
ஜாதியைத் தானடா தேர்தலில் தேடுகிறார் ஹாஹாஹா
தேர்தலில் தேடுகிறார்
ஆண் :
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் :
{வீர சுதந்திரப் போரில் மடிந்தவர்
நாட்டினில் கோடியடா
இன்று பட்டினி போரினில்
பஞ்சத்தில் மாய்கிற ஏழைகள் கோடியடா} (2)
ஆண் :
சீதை நெருப்பினில் அன்று குளித்தது
தென்திசைத் தீவினிலே
வரதட்சிணைத் தீயினில் சீதைகள் சாவது
இந்திய பூமியிலே ஹாஹாஹா இந்திய பூமியிலே
ஆண் :
வெள்ளிப் பணங்களை அள்ளிக் கொடுக்கையில்
சட்டங்கள் மாறுதடா அட
லஞ்சமும் ஊழலும் தேசிய ரீதியில்
நர்த்தனம் ஆடுதடா
ஆண் :
போலித்தனங்களும் காலித்தனங்களும்
இன்னமும் ஓயவில்லை
இதை புண்ணிய பாரத நாடென சொல்வது
கொஞ்சமும் ஞாயமில்ல… கொஞ்சமும் ஞாயமில்ல
ஆண் :
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா
அதன் வேஷத்தைக் கலைத்திடவே
புது வேகங்கள் தேவையாடா
அதற்கு விதையொன்று போடுங்கடா
ஆண் :
நித்தம் பல குற்றங்களைச் செய்பவனைக் கண்டு
ரத்தம் கொதிக்குதடா
கொள்கைதனை விற்கும் சில கூட்டங்களைக் கண்டு
சித்தம் துடிக்குதடா
தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா..ஆஆஆஆஆ….
Thesathai Paarkaiyile - English Lyrics
Male :
Dhesathai paarkaiyilae
Nenjam theepandham aagudhadaa
Dhesathai paarkaiyilae
Nenjam theepandham aagudhadaa
Male :
Adhan veshathai kalaithidavae
Pudhu vegangal thevaiyada
Adharkku vidhaiyondru podungada
Male :
Adhan veshathai kalaithidavae
Pudhu vegangal thevaiyada
Adharkku vidhaiyondru podungada
Male :
Nitham pala kuttramgalai
Seibavanai kandu ratham kodhikkudhadaa
Kolgaithanai virkkum sila kootangalai kandu
Sitham thudikkudhadaa
Dhesathai paarkaiyilae
Nenjam theepandham aagudhadaa…aaa….aaa…aa..aa…aa..
Male :
{Patta padippugal kattra ilainjargal
Yaarukkum vaelaiyilla
Idhil maatchimai thaangiya aatchiyil ullavargal
Yaarukkum vetkam illai } (2)
Male :
Jaadhi ozhinthida maedai adhirndhida
Thalaivargal muzhangugiraar
Avar aayiram pesinum jaadhiyai thaanada
Therdhalil thedugiraar hahaha
Therdhalil thedugiraar
Male :
Dhesathai paarkaiyilae nenjam
Theepandham aagudhadaa
Adhan veshathai kalaithidavae
Pudhu vegangal thevaiyada
Adharkku vidhaiyondru podungada
Male :
{Veera sudhandhira poril madindhavar
Naatinil kodiyada
Indru pattini porinil panjathil maaigira
Ezhaigal kodiyada} (2)
Male :
Seethai neruppinil andru kulithathu
Thendhisai theevinilae
Varathachinai theeyinil seethaigal saavathu
Indhiya boomiyilae hahaha indhiya boomiyilae
Male :
Velli panangalai alli kodukkaiyil
Sattangal maarudhadaa ada
Laanjamum oozhalum dhesiya reedhiyil
Narthanam aaduthada
Male :
Polithanangalum kaalithanangalum
Innumum oyavillai
Idhai punniya bhaaratha naadena solvadhu
Konjamum gnyamilla.. konjamum gnyamilla
Male :
Dhesathai paarkaiyilae nenjam
Theepandham aagudhadaa
Adhan veshathai kalaithidavae
Pudhu vegangal thevaiyada
Adharkku vidhaiyondru podungada
Male :
Nitham pala kuttramgalai
Seibavanai kandu ratham kodhikkudhadaa
Kolgaithanai virkkum sila kootangalai kandu
Sitham thudikkudhadaa
Dhesathai paarkaiyilae nenjam
Theepandham aagudhadaa …aaa….aaa…aa..aa…aa..