Tamil Lyrics

Unnai Paarthu – Naatpadu Theral 2 song lyrics

Movie — Naatpadu Theral

Singer(s) — Shankar Mahadevan

Lyricist — Vairamuthu

Music Director — Augaath

Unnai Paarthu – Naatpadu Theral 2 - தமிழ் பாடல் வரிகள்

வசனம் :
வைரமுத்து

இசை அமைப்பாளர் :
அவ்காத்

பாடல் ஆசிரியர் :
வைரமுத்து

ஆண் :
உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளர விடாதே

ரெட்டைப் பேச்சு பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே (வசனம் )

ஆண் :
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் ரெட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

எழுது எழுது எழுது

எழுது எழுது எழுது

ஆண் :
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்

பரிமே லழகரை வரச்சொல் என்றது (வசனம் )

ஆண் :
ஹோ

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்

குண்டுச் சட்டியில் குதிரை என்றது

எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்

திறமை எல்லாம் திருடிய தென்றது

திருடிய தென்றது திருடிய தென்றது

திருடிய தென்றது திருடிய தென்றது

ஆண் :
அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன்நிழல் பார்த்து தானே குரைக்கும் குரைக்கும்

ஆண் :
எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்

கழுதைக் கெதற்குக் கண்மை என்றது

ஆண் :
மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்

படித்த திமிர்தான் பணிவில்லை என்றது

மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன்

கவிஞன் நல்ல காக்கா என்றது (வசனம் )

ஆண் :
அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்

குரைக்கும்

ஆண் :
மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்

புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது

மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்

தந்திரக்காரன் தள்ளி நில் என்றது (வசனம் )

ஆண் :
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்

பயந்து விட்டான் பாவம் என்றது

மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்

விளங்கி விட்டதா மிருகம் என்றது

ஆண் :
உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன்

அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது (வசனம் )

ஆண் :
புணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்

வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது

என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்

புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது (வசனம் )

ஆண் :
சொந்த ஊரில் துளி நிலம் இல்லை

இவனா மண்ணின் மைந்தன் என்றது

தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்

பண்ணையார் ஆனான் பாவலன் என்றது

ஆண் :
கயவர் கேட்டால் காசு மறுத்தேன்

கறக்க முடியாத கஞ்சன் என்றது

உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்

உதறித் திரியும் ஊதாரி என்றது

ஆண் :
அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி ருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன்நிழல் பார்த்து தானே குரைக்கும் குரைக்கும்

ஆண் :
மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்

கவிஞன் என்ற கர்வம் என்றது

பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்

கண்களைக் கவனி காமம் என்றது (வசனம் )

ஆண் :
ஹ்ம்ம் விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்

டில்லியில் யாரையோ தெரியும் என்றது

ஆண் :
திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்

அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது

நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்

கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது

ஆண் :
அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்து தானே குரைக்கும் குரைக்கும்

ஆண் :
உலகின் வாயைத் தைத்திடு அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம் (வசனம் )

Unnai Paarthu – Naatpadu Theral 2 - English Lyrics

Male :

Unnai paarthu ulagam kuraikkum

Thannanbikkai thalara vidathae

Rettaai pechu pesum ulagam

Mirattum thambhi mirandu vidathae (Dialogue)

Male :

Ovvoru vaayilum ottrai naakku

Ulagin vaayil rettai naakku

Enakku nerndha izhamozhi ellaam

Unaku solgiren ullathil ezhuthu

Ezhuthu ehzuthu ezhuthu

Ezhuthu ehzuthu ezhuthu

Male :

Innisai thamizhai elimai seidhen

Ilakkiyam illai laegiyam endrathu

Thirai paattukkul sendhamizh seidhen

Parimaelazhagarai varasol endrathu (Dialogue)

Male :

Ho kurunthogai kamban kotti moozhginen

Kundu sattiyil kudhirai endrathu

Eliyat neruda ellaam sonnen

Thiramai ellam thirudiya thendrathu

Thirudiya thendrathu thirudiya thendrathu

Thirudiya thendrathu thirudiya thendrathu

Male :

Appadi irundhaal adhuvum thappu

Ippadi irundhaal idhuvum thappu

Kaththum naaikku kaaranam vendam

Than nizhal paarthu thanae kuraikkum kuraikkum

Male :

Eliya thottramae iyalbena irundhen

Vaduga patti vazhiyudhu endrathu

Azhagaai nanaum aadaigal konden

Kazhuthaikkuedharkku kanmai endrathu

Male :

Maedaiyil kaalmel kaalittamarndhen

Paditha thimirthaan panivillai endrathu

Moothavar vandhadhum mudhalil ezhundhen

Kavigan nalla kaakka endrathu (Dialogue)

Male :

Appadi irundhaal adhuvum thappu

Ippadi irundhaal idhuvum thappu

Kaththum naaikku kaaranam vendam

Than nizhal paarthu thanae kuraikkum kuraikkum

Male :

Mattravar soozhchiyaal mannil vizhunthen

Puthi kozhuthavan pudhainthan endrathu

Moochu piditha mutti mulaithen

Thandhirakaaran thalli nil endrathu(Dialogue)

Male :

Pagaiayi kandu paiya nagarndhen

Payandhu vittaan paavam endrathu

Modhi midhithu mugathil umildhen

Vilangi vittadha mirugam endrathu

Male :

Uyarndhor perumai uvandhu pugazhndhen

Kaadhil poo vaikkiraan kavanam endrathu

Viral nagatahlavu vimarsanam seidhen

Arivaal edukkiraan aabathu endrathu (Dialogue)

Male :

Punathil porulil pattattru irundhen

Varumaiyin vindhil pirandhavan endrathu

Ennai theithu mandapam kattinen

Pulavan illai poorshva endrathu (Dialogue)

Male :

Sondha peril thuli nilam illai

Ivana mannin maindhan endrathu

Thennai marangal thedi vaanginen

Pannaiyaar aanaan paavaalan endrathu

Male :

Kayavar kettaal kasu maruthaen

Karakka mudiyaadha kanjan endrathu

Unmai irundhaal urupporul koduthen

Udhiri thiriyum oodhaari endrathu

Male :

Appadi irundhaal adhuvum thappu

Ippadi irundhaal idhuvum thappu

Kaththum naaikku kaaranam vendaam

Than nizhal paarthu thaanae kuraikkum kuraikkum

Male :

Mangaiyaridaiyae maunam kaathen

Kavingen endra karvar endrathu

Pengal silarudan pesa thodanginen

Kangalai kavani kaamam endrathu (Dialogue)

Male :

Hmm virudhugal kaluthil veezha kanden

Kuruttu adhirstam koodiya thendrathu

Mendum meednum virudhugal konden

Dilliyil yaaraiyoo theriyum endrathu

Male :

Dhisaigal thorum thaedhi koduthen

Aiyoo pugalukku alaigiraan endrathu

Nera kuaraivu niruthi konden

Kanakku paarkkiraan kavingan endrathu

Male :

Appadi irundhaal adhuvum thappu

Ippadi irundhaal idhuvum thappu

Kaththum naaikku kaaranam vendaam

Than nizhal paarthu thaanae kuraikkum kuraikkum

Male :

Ulagin vaaiyai thaithidu alladhu

Irandu sevigalai irukki moodidu

Ulagin vaaiyai thaipathu kadinam

Undhan sevigal mooduthal sulabam (Dialogue)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unnai Paarthu – Naatpadu Theral 2

Which movie does the song Unnai Paarthu – Naatpadu Theral 2 belong to?

The song Unnai Paarthu – Naatpadu Theral 2 is from the movie Naatpadu Theral.

Who is the music director of Unnai Paarthu – Naatpadu Theral 2?

The music for Unnai Paarthu – Naatpadu Theral 2 is composed by Augaath.

Who wrote the lyrics for Unnai Paarthu – Naatpadu Theral 2?

The lyrics for Unnai Paarthu – Naatpadu Theral 2 are penned by Vairamuthu.

Who sang the Unnai Paarthu – Naatpadu Theral 2 song?

Unnai Paarthu – Naatpadu Theral 2 is sung by Shankar Mahadevan.

Related Songs