Vettunda Kaiyum - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
இசை அமைப்பாளர் :
ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
வெட்டுண்ட கையும்
வீழ்ந்துவிட்ட பூங்கொடியும்
கட்டுண்டுதான் வணங்கும்
கன்னியர்கள் பொன்னடியை
பெண் :
கூன் விழுந்த மானிடர்கள்
குவிந்திருக்கும் சமுதாயம்
தான் விழுந்து வணங்கும் நாள்
தலைமுறையில் வாராதோ…..
பெண் :
பொழுது விடியாதோ
புதுப்பாதை தோன்றாதோ
அழுதழுது கன்னியர்கள்
அலறும் நாள் மாறாதோ
பெண் :
பழுதுபடா உத்தமனே
பண்புமிகும் கண்ணியனே
விழுது விட வைத்த மரம்
விழுந்துவிட்டால் சம்மதமோ…..
பெண் :
மாலையிட்ட மங்கையர்க்கு
வாழ்வில் ஒரேவழிதான்
தாள் பிடித்துக் கேட்பாயோ
தலை குனிந்து அழைப்பாயோ
தங்கையினை வாழ வைக்கத்
தயங்காதே புறப்பட்டு நீ…….
பெண் :
வெட்டுண்ட கையும்
வீழ்ந்துவிட்ட பூங்கொடியும்
கட்டுண்டுதான் வணங்கும்
கன்னியர்கள் பொன்னடியை
பெண் :
கூன் விழுந்த மானிடர்கள்
குவிந்திருக்கும் சமுதாயம்
தான் விழுந்து வணங்கும் நாள்
தலைமுறையில் வாராதோ…..
Vettunda Kaiyum - English Lyrics
Female :
Vettunda kaiyum
Veezhndhu vitta poongodiyum
Kattunduthaan vanangum
Kanniyargal ponadiyai
Female :
Koon vilundha maanidargal
Kuvindhirukkum samudhayam
Thaan vilundhu vanangum naal
Thalaimuraiyil vaarathatho
Female :
Poluthu vidiyaadho
Pudhu paadhai thondratho
Azhuthazhudhu kanniyargal
Alarum naal maaradhadho
Female :
Pazhudhupadaa uthamanae
Panbumigum kanniyanae
Viludhu vida veitha maram
Vilunthuvittaal sammadhamo
Female :
Maalaiyitta mangaiyarukku
Vaazhvil orae vazhithaan
Thaal pidithu ketpaayoo
Thalai kunindhu azhaipaayoo
Thangaiyinai vaazha vaikka
Thayangaadhae purapattu nee
Female :
Vettunda kaiyum
Veezhndhu vitta poongodiyum
Kattunduthaan vanangum
Kanniyargal ponadiyai
Female :
Koon vilundha maanidargal
Kuvindhirukkum samudhayam
Thaan vilundhu vanangum naal
Thalaimuraiyil vaarathatho