Tamil Lyrics

Aandavan Mugatha Parkkanum song lyrics

Movie — Kalyana Oorvalam

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — R. Parathasarathy

Aandavan Mugatha Parkkanum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

ஆண் :
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச

ஆண் :
{பணம் இருந்தா இந்த உலகத்திலே
பல கதை நடக்குதப்பா
நீ படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் கிழிச்சு
படைச்சா உதவியப்பா} (2)

ஆண் :
படித்தால் என்ன உழைத்தால் என்ன
பணம்தான் வாழ்வின் எல்லையப்பா

ஆண் :
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

ஆண் :
{தர்மம் என்பது என்றோ ஒரு நாள்
தற்கொலை புரிந்ததப்பா
தலைவன் உடம்பும் நீதிக்கு பயந்து
கோவிலில் மறைந்ததப்பா} (2)

ஆண் :
அழுதால் என்ன தொழுதால் என்ன
நடக்கும் கதைத்தான் நடக்குதப்பா

ஆண் :
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

ஆண் :
ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் தந்தது
ஒரு ஜாண் வயிறல்லவா
ஒரு ஜாண் வயிற்றுக்கு வழியில்லையென்றால்
ஒரு முழம் கயிறல்லவா

ஆண் :
வயிறும் வைத்து கயிறும்
வைத்துப் படைத்தது உந்தன் தவறல்லவா

ஆண் :
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச

ஆண் :
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

Aandavan Mugatha Parkkanum - English Lyrics

Male :

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Male :

Yaendaa saami enna padaichcha

Ennai padaikkaiyilae enna ninaichcha

Yaendaa saami enna padaichcha

Ennai padaikkaiyilae enna ninaichcha

Male :

{Panam irunthaa intha ulagaththilae

Pala kadhai nadakkuthappaa

Nee padaikkaiyilae konjam nottaiyyum kizhichchu

Padaichchaa udviyappaa} (2)

Male :

Padiththaal enna uzhaiththaal enna

Panamthaan vaazhvin ellaiyappaa

Male :

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Male :

{Tharmam enbathu endro orunaal

Tharkolai purinthathappaa

Thalaivan udambum needhikku payanthu

kovililmaranthathappaa} (2)

Male :

Azhuthaal enna thozhuthaal enna

Nadakkum kadhaithaan nadakkuthappaa

Male :

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Male :

Ovvoru uyirukkum iraivan thanthathu

Oru jaan vayirallavaa

Oru jaan vayittrukku vazhiyillai endraal

Oru muzham kayirallavaa

Male :

Vayirum vaiththu kayirum vaiththu

Vaiththu paaiththathu unthan thavarallavaa

Male :

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Yaendaa saami enna padaichcha

Ennai padaikkaiyilae enna ninaichcha

Male :

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aandavan Mugatha Parkkanum

Which movie does the song Aandavan Mugatha Parkkanum belong to?

The song Aandavan Mugatha Parkkanum is from the movie Kalyana Oorvalam.

Who is the music director of Aandavan Mugatha Parkkanum?

The music for Aandavan Mugatha Parkkanum is composed by R. Parathasarathy.

Who wrote the lyrics for Aandavan Mugatha Parkkanum?

The lyrics for Aandavan Mugatha Parkkanum are penned by Kannadasan.

Who sang the Aandavan Mugatha Parkkanum song?

Aandavan Mugatha Parkkanum is sung by T. M. Soundararajan.

Related Songs