Tamil Lyrics

Ariyathu Ketkum song lyrics

Movie — Kandhan Karunai

Singer(s) — K. P. Sundarambal

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Ariyathu Ketkum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஔவையே உலகில் அரியது என்ன….
(வசனம்)

பெண் :
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அரிது
தானமும் தவமும்தான் செய்வராயின்
வானவர் நாடு வழி பிறந்திடுமே….

ஆண் :
அரியது கேட்டமைக்கு
அழகான தமிழில்
விளக்கம் தந்த மூதாட்டியே
கொடியது என்ன……..(வசனம்)

பெண் :
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை…
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே….

ஆண் :
மிக்க மகிழ்ச்சி
சொல்லால் தமிழால்
வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்
திறமை படைத்த ஔவையே
பெரியது என்ன….(வசனம்)

பெண் :
பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான் முகன் படைப்பு
நான்முகன் கரியமால் முந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடலோ குருமுனி யங்கையில் அடக்கம்
குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினிக் ஒரு தலைப் பாரம்
அரமோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும்
பெரிதே….

ஆண் :
ஔவையே…
வானவரும் உனது
வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால்
அதில் வியப்பில்லை
இனியது என்ன……(வசனம்)

பெண் :
இனியது கேட்கின் தனி நெடுவேலோய்
இனிது இனிது ஏகாந்த்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே

ஆண் :
அரியது கொடியது பெரியது இனியது
அனைத்திற்கும் முறையோடு
விடை பகன்ற ஔவையே
புதியது என்ன…….(வசனம்)

பெண் :
என்றும் புதியது….
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது

பெண் :
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த
அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த
அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் குமரன் கொண்ட
இளமை என்றும் புதியது
முறுவல் காட்டும் குமரன் கொண்ட
இளமை என்றும் புதியது

பெண் :
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கும்
வேலும்…. மயிலும்….
உனது தந்தை இறைவனுக்கும்
வேலும் மயிலும் புதியது….
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது

பெண் :
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்….
கந்தன் கருணை புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது

பெண் :
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு
ஆறுமுகம் புதியது….

Ariyathu Ketkum - English Lyrics

Male :

Avvaiyae ulagil ariyadhu enna….

(Dialogue)

Female :

Ariyadhu ketkin varivadiveloi

Aridhu aridhu maanidaraadhal aridhu

Maanidaraayinum koon kurudu

Sevidu paedu neengi pirathal aridhu

Koon kurudu sevidu paedu

Neengi gnaanamum kalviyum nayathalaridhu

Gnaanamum kalviyum nayandha kaalaiyum

Dhaanamum thavamum thaan seidhal aridhu

Dhaanamum thavamum thaan seivaraayin

Vaanavar naadu vazhi pirandhidumae….

Male :

Ariyadhu kettamaikku

Azhagaana thamizhil

Vilakkam thandha moodhaattiyae

Kodiyadhu enna….(Dialogue)

Female :

Kodiyadhu ketkkin varivadiveloi

Kodidhu kodidhu varumai kodidhu

Adhaninum kodidhu ilamaiyil varumai

Adhaninum kodidhu aattronaa kodu noi

Adhaninum kodidhu anbilaa pendir

Adhaninum kodidhu avar kaiyaal

Inbura unbadhu thaanae….

Male :

Mikka magizhchchi

Sollaal thamizhaal

Vellaadha ulagaiyellaam vellum

Thiramai padaitha avvaiyae

Periyadhu enna….(Dialogue)

Female :

Periyadhu ketkin neri thamizh veloi

Peridhu peridhu bhuvanam peridhu

Bhuvanamum naan mugan padaippu

Naan mugan kariya maal undhiyil vandhon

Kariya maalo alaikadal thuyindron

Alai kadalo gurumuni yangaiyil adakkam

Gurumuniyo kalasathir pirandhon

Kalasamo puviyir chiruman

Puviyo aravini oru thalai paaram

Aramo umaivayal siru viral modhiram

Umaiyo iraivar baaga thodukkam

Iraivano thondar ullatthodukkam

Thondar tham perumaiyai sollavum

Peridhae….

Male :

Avvaiyae….

Vaanavarum unadhu

Vaakkirku adimaiyaagi viduvar yendraal

Adhil viyappillai

Iniyadhu enna…. (Dialogue)

Female :

Iniyadhu ketkin thani nedu veloi

Inidhu inidhu yaegaantham inidhu

Adhaninum inidhu aadhiyai thozhudhal

Adhaninum inidhu arivinar saerdhal

Adhaninum inidhu arivullorai

Kanavilum nanavilum kaanbadhu thaanae….

Male :

Ariyadhu kodiyadhu periyadhu iniyadhu

Anaithirkkum muraiyodu

Vidai pagandra avvaiyae

Pudhiyadhu enna….(Dialogue)

Female :

Endrum pudhiyadhu…

Padal endrum pudhiyadhu

Porul niraindha paadal endrum pudhiyadhu

Murugaa unnai paadum porul niraindha

Paadal endrum pudhiyadhu

Murugaa unnai paadum porul niraindha

Paadal endrum pudhiyadhu

Female :

Arul niraindha pulavar nenjil

Amudham ennum thamizh kodutha

Porul niraindha paadal endrum pudhiyadhu

Arul niraindha pulavar nenjil

Amudham ennum thamizh koduttha

Porul niraindha paadal endrum pudhiyadhu

Murugan endra peyaril vandha

Azhagae endrum pudhiyadhu

Murugan endra peyaril vandha

Azhagae endrum pudhiyadhu

Muruval kaattum kumaran konda

Ilamai endrum pudhiyadhu

Female :

Unnai petra annaiyarkku

Unadhu leelai pudhiyadhu

Unnai petra annaiyarkku

Unadhu leelai pudhiyadhu

Unadhu thandhai iraivanukkum

Velum…. mayilum….

Unadhu thandhai iraivanukkum

Velum mayilum pudhiyadhu…

Murugaa unnai paadum porul niraindha

Paadal endrum pudhiyadhu

Female :

Thingalukkum gnjaayirukkum

Kandhan maeni pudhiyadhu

Thingalukkum gnjaayirukkum

Kandhan maeni pudhiyadhu

Saerndhavarkku vazhangum…

Kandhan karunai pudhiyadhu

Saerndhavarkku vazhanghum

Kandhan karunai pudhiyadhu

Arivil ariyadhu arulil periyadhu

Arivil ariyadhu arulil periyadhu

Alli alli unna unna

Unadhu thamizh iniyadhu

Alli alli unna unna

Unadhu thamizh iniyadhu

Female :

Mudhalil mudivadhu mudivil mudhaladhu

Mudhalil mudivadhu mudivil mudhaladhu

Moondru kaalam unarndha perkku

Aarumugam pudhiyadhu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ariyathu Ketkum

Which movie does the song Ariyathu Ketkum belong to?

The song Ariyathu Ketkum is from the movie Kandhan Karunai.

Who is the music director of Ariyathu Ketkum?

The music for Ariyathu Ketkum is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Ariyathu Ketkum?

The lyrics for Ariyathu Ketkum are penned by Kannadasan.

Who sang the Ariyathu Ketkum song?

Ariyathu Ketkum is sung by K. P. Sundarambal.

Related Songs