Iraivan Enakkoru - தமிழ் பாடல் வரிகள்
லா லா லா…..லால லால லால லா லா
லா லா லா…..லால லால லால லா லா
ஆண் :
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
ஆண் :
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
விசில் :
…………………………..
ஆண் :
வாலிப வேகம் வளர்ந்திடும் போது
வானில் பறக்காதோ
வாழ்க்கையில் ரசனை பிறந்திடும் போது
காதல் சிரிக்காதோ
ஆண் :
அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து
ஆறுதல் காண வச்சான்
அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து
ஆறுதல் காண வச்சான்
இங்கு ஆணுக்கு பெண்ணை சீதனம் கொடுத்து
ஆட்டத்தை துவக்கி வச்சான்…..
ஆண் :
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
ஆண் :
மேடையில்லாமல் ஆடிடும் காத்தில்
மெல்லிசை பிறந்து வரும்
கோடான கோடி உயிர்கள் மடியில்
கவிதைகள் தவழ்ந்து வரும்
ஆண் :
படரும் கொடிக்கொரு பந்தலை அமைத்து
பழுத்து குலுங்க வச்சான்
அதில் பறவைகள் கோடி உறவுக் கொண்டாடி
பசியை மறக்க வச்சான்……
விசில் :
…………………………….
ஆண் :
ஓடத்தின் மேலே ஊர்வலம் போனால்
உள்ளம் குளிராதோ……
ஓசையில்லாமல் பேசிடும் கண்ணில்
உண்மை புரியாதோ
ஆண் :
பருவ மனசுக்கு பார்வையைக் கொடுத்து
பாதையை வகுத்து வச்சான்
அதில் படிப்பதற்கென்றும் களிப்பதற்கென்றும்
நேரத்தை ஒதுக்கி வச்சான்….
ஆண் :
இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக
இளமையை கொடுத்து வச்சான்
விசில் :
……………………………..
Iraivan Enakkoru - English Lyrics
Male :
Laa laa laaa…laala laala laala laa laa
Laa laa laaa…laala laala laala laa laa
Male :
Iraivan enakkoru ulagathai padaithu
Inbathai kuvichu vachaan
Adhil irupadhai ellaam rasippadharkkaaga
Ilamaiyai koduthu vachaan
Male :
Iraivan enakkoru ulagathai padaithu
Inbathai kuvichu vachaan
Adhil irupadhai ellaam rasippadharkkaaga
Ilamaiyai koduthu vachaan
Whistling :
………………..
Male :
Vaaliba vegam valarndhidum bothu
Vaanil parakkadhoo
Vaazhkaiyil rasanai piranthidum bothu
Kaadhal sirikkadho
Male :
Azhagin mayakkathil aasaiyai valarthu
Aarudhal kaana vachaan
Azhagin mayakkathil aasaiyai valarthu
Aarudhal kaana vachaan
Ingu aanukku pennai seedhanam koduthu
Aattathai thuvakki vechaan…
Male :
Iraivan enakkoru ulagathai padaithu
Inbathai kuvichu vachaan
Adhil irupadhai ellaam rasippadharkkaaga
Ilamaiyai koduthu vachaan
Male :
Maedaiyillaamal aadidum kaathil
Mellisai pirandhu varum
Kodaana kodi uyirgalin madiyil
Kavidhaigal thavazhndhu varum
Male :
Padarum kodikkoru pandhalai amaithu
Pazhuthu kulunga vechaan
Adhil paravaigal kodi uravu kondaadi
Pasiyai marakka vechaan
Whistling :
………………….
Male :
Odathin melae oorvalam ponaal
Ullam kuliraadho
Oosaiyillaamal paesidum kannil
Unmai puriyaadho
Male :
Paruva manasukku paarvaiyai koduthu
Paadhaiyai vaguthu vechaan
Adhil padippadharkkendrum kalippadharkkendrum
Naerathai odhukki vechaan…
Male :
Iraivan enakkoru ulagathai padaithu
Inbathai kuvichu vachaan
Adhil irupadhai ellaam rasippadharkkaaga
Ilamaiyai koduthu vachaan
Whistling :
………………….