Kathalukku Naalu Pakkam - தமிழ் பாடல் வரிகள்
காதலுக்கு
ஆண் :
நாலு பக்கம்
பெண் :
கால்களுக்கு
ஆண் :
நாலு நடை
பெண் :
மாதருக்கு
ஆண் :
நாலு குணம்
பெண் :
மைவிழிக்கு
ஆண் :
நாலு மொழி
பெண் :
காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை
மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி
ஆண் :
கண்களினால் எழுதுவதே முதல் பக்கம்
கலந்து கொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம்
பெண் :
எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம்
ஈருயிரும் இணைவதுதான் நாலு பக்கம்
ஆண் :
காதலுக்கு நாலு பக்கம்
பெண் :
ஆசை மிதக்கையிலே அன்னநடை போடும்
அருகினில் வாவென்றால் சின்னநடை போடும்
ஆண் :
கட்டிலுக்குச் செல்கையிலே கன்னி நடை போடும்
காரிருளில் பஞ்சணையில் என்ன நடை போடும்
பெண் :
கால்களுக்கு நாலு நடை
ஆண் :
காதலனின் பார்வையிலே தலை கவிழும் ஒரு குணம்
கைகளுக்குள் இருக்கையிலே கண் மறைக்கும் மறு குணம்
பெண் :
அள்ளி வரும் நினைவுகளை அடக்கி வைக்கும் ஒரு குணம்
அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறுகுணம்
ஆண் :
மாதருக்கு நாலு குணம்
பெண் :
தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று
தலைமகன் கண்களுக்கும் அனுப்பும் மொழி ஒன்று
ஆண் :
ஆசைமலர் பூத்ததுபோல் வீசும் மொழி ஒன்று
அடுத்தவர்க்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று
பெண் :
காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை
ஆண் :
மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி
முனகல் :
இருவர் ……………
Kathalukku Naalu Pakkam - English Lyrics
Female :
Kaathalukku
Male :
Naalu pakkam
Female :
Kaalgalukku
Male :
Naalu nadai
Female :
Madharukku
Male :
Naalu gunam
Female :
Mai vizhikku
Male :
Naalu mozhi
Female :
Kaathalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Madharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
Male :
Kangalinaal eluthuvadhae mudhal pakkam
Kalanthu kollum idhayangalae irandam pakkam
Female :
Ennuvadhai solluvadhae moondram pakkam
Eeruyirum inaivadhu thaan naalam pakkam
Male :
Kaathalukku naalu pakkam
Female :
Aasai midhakaiyilae anna nadai podum
Aruginil vaa vendraal chinna nadai podum
Male :
Kattilukku sellgaiyiilae kanni nadai podum
Kaar irulil panjanaiyil enna nadai podum
Female :
Kaalgalukku naalu nadai
Male :
Kaadhalanin paarvaiyilae thalai kavilum oru gunam
Kaigalukkul irukkaiyilaekan maraikkum maru gunam
Female :
Alli varum ninaivugalai adakki vaikkum oru gunam
Anaikkaiyilae athanaiyum maranthirukkum marugunam
Male :
Madharukku naalu gunam
Female :
Thanakkul thanimaiyilae sirikkum mozhi ondru
Thalaimagam kangalukkum anuppum mohi ondru
Male :
Aasai malar poothathu pol veesum mozhi ondru
Aduthavarkku theriyaamal pesum mozhi ondru
Female :
Kaathalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male :
Madharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
Hummming :
Both ….