Koodalaar Koodum - தமிழ் பாடல் வரிகள்
கே. பி. சுந்தராம்பாள்
இசை அமைப்பாளர் :
டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
கூடலார் கூடுமொரு குமரிமுனை ஓரத்தில்
குடிகொண்ட தங்க மயிலே
கொற்றவன் தென்பாண்டி முத்துக்களாடுமொரு
குமரிக்கு உந்தன் பெயரே
குமரிக்கு உந்தன் பெயரே
பெண் :
ஆதவன் உதயமும் அஸ்தமன சமயமும்
அமைகின்ற கடலினருகே
அழகான தமிழகமும் வழிகாண வந்ததொரு
அன்பான குமரி மலரே
பெண் :
நாடாத பேர்களும் நாடுவார் பாடுவார்
நாடுந்தன் கண்ணிலம்மா
நங்கை நீ வடதிசை திரும்பினால் இமயத்தில்
நாயகன் உருவமம்மா
பெண் :
கோதையின் மூக்குத்தி குளிர் கடலில் வருகின்ற
படகையும் காக்குமம்மா
கோடானு கோடி உயிர் கூட்டங்கள் கூடி உன்னைக்
கும்பிட்டு வாழ்த்துமம்மா……
கும்பிட்டு வாழ்த்துமம்மா……
கும்பிட்டு வாழ்த்துமம்மா……
Koodalaar Koodum - English Lyrics
Female :
Kodalaar koodumoru kumarimunai orathil
Kudikonda thangamayilae
Kottravan thenpaandi muthukalaal aadum oru
Kumarikku undhan peyarae
Kumarikku undhan peyarae
Female :
Aathvan udhayamum asthamana samayamum
Amaikkindra kadalin arugae
Azhagaana thamizh ulagam vazhikaana vandhadhoru
Anbaana kumari malarae
Female :
Nadaatha pergalum naaduvaar paaduvaar
Naadunandhan kannilamma
Nangai nee vadadhisai thirumbhinaal imayathil
Naayagan uruvamamma
Female :
Kothaiyin mookuthi kulir kadalil varugindra
Padagaiyum kaakum amma
Kodaana kodi uyir koottangal koodi unnai
Kumbittu vaazhthum amma
Kumbittu vaazhthum amma
Kumbittu vaazhthum amma