Tamil Lyrics

Koonthalukku song lyrics

Movie — Saradha

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Koonthalukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கூந்தலுக்கு மலர் கொடுத்தாள்
குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே
கொண்ட மலர் வாடுதையா

ஆண் :
கூந்தலுக்கு மலர் கொடுத்தாள்
குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே
கொண்ட மலர் வாடுதையா

ஆண் :
குளிர்ந்த நீரில் குளித்தாலும்
குணமும் கூடக் குளிப்பதில்லை
கும்பிடும் தெய்வம் முன்னிருந்தாலும்
இதயம் எதையும் மறப்பதில்லை

ஆண் :
ஆடையினால் உடல் மறைத்தாலும்
ஆசைகள் மறைவதில்லை
அறுபது வயதை இருபது வயதில்
யாருமே அடைவதில்லை
யாருமே அடைவதில்லை

ஆண் :
கூந்தலுக்கு மலர் கொடுத்தாள்
குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே
கொண்ட மலர் வாடுதையா

ஆண் :
கண்களிருந்தும் காட்சியில்லாமல்
கலங்கி வாடும் உயிரிங்கே
பொருள் கையிலிருந்தும் பசியறியாமல்
கதறியழும் உயிர் அங்கே

ஆண் :
சொந்தமிருந்து துணை சேராமல்
துடிதுடிக்கும் உயிர் இங்கே
துணையாய் இருக்க வழி இருந்தும்
துவளுதே உயிர் அங்கே
துவளுதே உயிர் அங்கே

ஆண் :
பட்ட மரமே…….
பழுதடைந்த ஓவியமே
கட்டியதோர் தாலியின்றி
காரிகைக்குத் தந்ததென்ன

ஆண் :
அணைக்காத கரங்களுக்குத் துணை எதற்கு
அருந்தாத முடவனுக்குப் பால் எதற்கு
சுவைக்காக மரக்கிளைக்கு வாய் எதற்கு
சுகம் தெரியாக் குருடனுக்கு வாழ்வெதற்கு

Koonthalukku - English Lyrics

Male :

Koondhalukku malar koduthaal

Kulir mugathil thilagam ittaal

Kodutha malar vaadumunnae

Konda malar vaadudhaiyaa

Male :

Koondhalukku malar koduthaal

Kulir mugathil thilagam ittaal

Kodutha malar vaadumunnae

Konda malar vaadudhaiyaa

Male :

Kulirndha neeril kulirthaalum

Gunamum kooda kulippadhillai

Kumbidum dheivam munnirundhaalum

Idhayam edhaiyum marappadhillai

Male :

Aadaiyinaal udal maraithaalum

Aasaigal maraivadhillai

Arubadhu vayadhai irubadhu vayadhil

Yaarumae adaivadhillai

Yaarumae adaivadhillai

Male :

Koondhalukku malar koduthaal

Kulir mugathil thilagam ittaal

Kodutha malar vaadumunnae

Konda malar vaadudhaiyaa

Male :

Kangal irundhum kaatchi illaamal

Kalangi vaadum uyir ingae

Porul kaiyilirundhum pasi ariyaamal

Kadhari azhum uyir angae

Male :

Sondham irundhum thunai seraamal

Thudi thudikkum uyir ingae

Thunaiyaai irukka vazhi irundhum

Thuvaludhae uyir angae

Thuvaludhae uyir angae

Male :

Patta maramae…

Pazhudhadaindha oviyamae

Kattiyadhor thaaliyindri

Kaarigaikku thandhadhenna

Male :

Anaikkaadha karangalukku thunai edharkku

Arundhaadha mudavanukku paal edharkku

Suvaikkaadha marakkilaikku vaai edharkku

Sugam theriyaa kurudanukku vaazhvedharkku..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Koonthalukku

Which movie does the song Koonthalukku belong to?

The song Koonthalukku is from the movie Saradha.

Who is the music director of Koonthalukku?

The music for Koonthalukku is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Koonthalukku?

The lyrics for Koonthalukku are penned by Kannadasan.

Who sang the Koonthalukku song?

Koonthalukku is sung by T. M. Soundararajan.

Related Songs