Oruthi Oruvanai - தமிழ் பாடல் வரிகள்
ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண் :
காதல்……
பெண் :
அந்த ஒருவன் ஒருத்தியை
மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
ஆண் :
குடும்பம்……
பெண் :
நினைத்தவன் அவளை
மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன
ஆண் :
துயரம்……ம்ம்…..ம்ம்…..ம்ம்…..
பெண் :
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன
ஆண் :
மௌனம்……..
பெண் :
ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண் :
காதல்……
பெண் :
இரவும் பகலும் உன்னுருவம்
அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன்னுருவம்
அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
ஆண் :
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
பெண் :
மறைக்க முயன்றேன்
முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
ஆண் :
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை
உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
பெண் :
ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண் :
காதல்……
பெண் :
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
ஆண் :
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
பெண் :
கண்டேன் கண்டது நல்ல வழி
அது காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி
அது காதலன் உடனே செல்லும் வழி
ஆண் :
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்
பெண் :
ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண் :
காதல்……
Oruthi Oruvanai - English Lyrics
Female :
Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna
Male :
Kaadhal…
Female :
Andha oruvan orthiyai manandhu kondaal
Andha urimaikku peyar enna
Male :
Kudumbam…
Female :
Ninaithavan alavai marandhu vittaal
Andha nilamaiyin mudivenna
Male :
Thuyaram…mm..mm…mm…
Female :
Pirindhavar meendum serndhu vittaal
Angu penmaiyin nilai enna
Male :
Maunam…
Female :
Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna
Male :
Kaadhal…
Female :
Iravum pagalum unnuruvam
Adhil ingum angum unnuruvam
Iravum pagalum unnuruvam
Adhil ingum angum unnuruvam
Male :
Adakkam enbadhu pennuruvam
Adhai arindhaal maraiyum ennuruvam
Adakkam enbadhu pennuruvam
Adhai arindhaal maraiyum ennuruvam
Female :
Maraikka muyandren mudiyavillai unnai
Marakka muyandren nadakkavillai
Maraikka muyandren mudiyavillai unnai
Marakka muyandren nadakkavillai
Male :
Ninaikkum nilaiyilum naan illai
Unai nerungum thagudhiyum enakkillai
Female :
Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna
Male :
Kaadhal…
Female :
Ketten kettadhu kidaikkavillai
Ennai gaeli seidhaai manam porukkavillai
Ketten kettadhu kidaikkavillai
Ennai gaeli seidhaai manam porukkavillai
Male :
Vaadham seivadhu en kadamai
Adhil vazhiyai kaanbadhu un thiramai
Vaadham seivadhu yen kadamai
Adhil vazhiyai kaanbadhu un thiramai
Female :
Kanden kandadhu nalla vazhi
Adhu kaadhalan udanae sellum vazhi
Kanden kandadhu nalla vazhi
Adhu kaadhalan udanae sellum vazhi
Male :
Sonnen pala murai yaasikkiraai
Nee sonnadhai naanum yosikkiren
Female :
Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna
Male :
Kaadhal…