Tamil Lyrics

Sivam Sivam song lyrics

Sivam Sivam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஊஊஹ்ம்ம்….
சிவாய நமஹ

குழு :
ஜடாமுடி அவிழ்ந்திட
விழுந்த கங்கை பாய்ந்திட
கழுத்தில் தூங்கும் நாகமோ
விழித்தெழுந்து பார்த்திட
இடக்கையில் உடுக்கையை
எடுத்து நீ அடித்திட
நடக்கும் இந்தத் தாண்டவத்தை
விண்ணும் மண்ணும் கண்டிட

குழு :
திறக்கும் நெற்றிக் கண்ணில் பட்டு
அரக்கரும் எரிந்திட
தெறிக்கும் அந்தத் தீயிலே
இருட்டு யாவும் தீர்ந்திட
எரிக்கும் தீ தணித்திட
இளம்பிறை அணிந்திட
பிறக்கும் ஒன்று இறக்கும் என்று
உன் சினம் உரைத்திட

குழு :
உமையவள் தன் காதலால்
பெருஞ் சினத்தை ஆற்றிட
தவங்கலைந்த ஞானியர்
துதித்து உன்னைப் போற்றிட
பனிப்பொருப்பின் மீது
நீ சினம் குளிர்ந்து வீற்றிட
எமக்கு இங்கு காவலாய்
வேற் யாரை நாங்கள் ஏற்றிட…

குழு :
நமச்சிவாய நாமத்தை
நாம் உச்சரிக்கும் போதிலே
நமக்குள் இன்பம் பாயுமே
மனக்களத்தின் மீதிலே
புகழ்ந்து உன்னை பாடினோம்
உன் தாண்டவம் முடிந்திட
புயல் முடிந்த பூமியாய்
அவ் விண்ணுமே விடிந்திட

குழு :
கழுத்தணிந்த வாசுகி
எம் ஆணவம் உணர்த்திட
உடல் அணிந்த தோலுமே
எம் அச்சம் யாவும் நீக்கிட
கரம் பிடித்த சூலமோ
மூலோகம் மொத்தம் ஆண்டிட
வரம் கொடுக்க உன்னை
யாம் தவம் கிடந்து வேண்டிட

குழு :
தலை அணி இளம்பிறை
எம் நெஞ்சிலே எரிந்திட
கருநிறச் ஜடாமுடி
இவ்வண்டமாய் விரிந்திட
அவ் வானலோக தேவரும்
உன் பாதம் ரெண்டைத் தேடிட
உனை வணங்கும் போதிலே
மனம் மகிழ்ந்து ஆடிட

குழு :
ஓம் நம சிவ ஓம்
சிவ சிவ ஓம்
சிவ சிவ சிவாய நம ஓம்
நம சிவ ஓம்
சிவ சிவ ஓம்

குழு :
முக்கண்ணனின் நுதல்விழி
சினத்திலே திறந்திட
மனத்தினைக் கெடுத்திடும்
அக் காமனைப் பொசுக்கிட
மலைமகள் முலைகளில்
கலைபடைத்த நேசனே
நிலையில்லாத வாழ்விலே
நிலையென்றான ஈசனே

குழு :
சிவம் சிவம் சிவம் சிவம்
அளிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
அழிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எங்கெங்குமே சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எம் நெஞ்சிலும் சிவம் சிவம்

குழு :
ஓம் நம சிவாய…(6)

ஆண் :
………………………

குழு :
நீள்கின்ற வானின் நீலமே
வாழ்கின்ற வாழ்வின் மூலமே
ஊழ்நீக்கிக் காக்கும் சூலமே
ஞாலத்தை வெல்லும் காலமே
ஆனந்தங் கொண்டு தாண்டவம்
நீ ஆடுகின்ற காட்சியை
ஆடாமல் நின்று காண்கிறோம்
நீ ஆட்சி செய்யும் மாட்சியை

குழு :
வெறுப்புகள் அறுத்தனை
விருப்புகள் உதிர்த்தனை
நெருப்புகள் எரிக்கையில்
புகழ் துகள் உணர்த்தினை
கழுத்தில் நாகம் கொண்டனை
விழுங்கி நஞ்சு உண்டனை
உமைக்கு தேகம் தந்தனை
எமக்கு நீயே சிந்தனை

குழு :
அண்டத்தை ஆளும் நாதனே
சித்தைக்கு வாய்த்த பித்தனே
முற்றும் உணர்ந்த சித்தனே
நிதம் நிகழ்த்தும் நித்தனே
திருத்திடும் அருத்தனே
அறுத்திடும் கருத்தனே
உறுத்திடும் செருக்கினை
நிறுத்திடும் ஒருத்தனே

குழு :
உடுக்கையை எடுக்கையில்
இடும்பைகள் நடுங்கிடும்
அறக்கணே உன் பார்வையில்
துறக்கமே அடங்கிடும்
முக்கண்ணன் உந்தன் பார்வையால்
திக்கெட்டும் சோதி ஆகுமே
முக்கோடு இட்ட நெற்றியால்
முக்காலம் அற்றுப் போகுமே

ஆண் :
சிவம் சிவம் சிவம் சிவம்
எடுப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
முடிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
அளிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
அழிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்

குழு :
விண்ணெங்கிலும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
மண்ணெங்கிலும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எங்கெங்குமே சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எம் நெஞ்சிலும் சிவம் சிவம்

Sivam Sivam - English Lyrics

Male :

Ooooohmmm…

Sivaaya namaha

Chorus :

Jadaamudi avizhndhida

Vizhundha gangai paaindhida

Kazhuthil thoongum naagamoo

Vizhithezhundhu paarthida

Idakkaiyil udukkaiyai

Nadakkum indha thaandavathai

Vinnum mannum kandida

Chorus :

Thirakkum netri kannil pattu

Arakkarum erindhida

Therikkum andha theeyilae

Iruttu yaavum theerndhida

Erikkum thee thanithida

Ilambirai anindhida

Pirakkum ondru irakkum endru

Un chinam uraithida

Chorus :

Umaiyaval than kaadhalaal

Perunj chinathai aatrida

Thavangalaindha njaaniyar

Thudhithu unnai potrida

Panipporuppin meedhu

Nee chinam kulirndhu veetrida

Emakku ingu kaavalaai

Vaeraarai naangal yaetrida…

Chorus :

Namachivaaya naamathai

Naam ucharikkum podhilae

Namakkul inbam paayumae

Manakkalathin meedhilae

Pugazhndhu unnai paadinom

Un thaandavam mudindhida

Puyal mudindha boomiyaai

Avvinnumae vidindhida

Chorus :

Kazhuthanindha vaasugi

Em aanavam unarthida

Udal anindha tholumae

Em acham yaavum neekkida

Karam piditha choolamoo

Moologam motham aandida

Varam kodukka unnai

Yaam thavam kidandhu vendida

Chorus :

Thalai ani ilambirai

Em nenjilae erindhida

Karunira chadaamudi

Ivvandamaai virindhida

Av vaanaloaga thaevarum

Un paadham rendai thaedida

Unai vanangum podhilae

Manam magizhndhu aadida

Chorus :

Ohmm namashiva ohmm

Shiva shiva ohmmm

Shiva shiva shivaaya nama ohmmmm

Nama shiva ohmm

Shiva shiva ohmmm

Chorus :

Mukkannanin nudhalvizhi

Chinathilae thirandhida

Manathinai keduthidum

Akkaamanai posukkida

Malaimagal mulaigalil

Kalaibadaitha naesanae

Nilaiyillaadha vaazhvilae

Nilaiyendraana eesanae

Chorus :

Shivam shivam shivam shivam

Azhippadhum shivam shivam

Shivam shivam shivam shivam

Azhippadhum shivam shivam

Shivam shivam shivam shivam

Engengumae shivam shivam

Shivam shivam shivam shivam

Em nenjilum shivam shivam

Chorus :

Om nama shivaaya…(6)

Male :

………………………….

Chorus :

Neelgindra vaanin neelamae

Vaazhgindra vaazhvin moolamae

Oozhneekki kaakkum choolamae

Njaalathai vellum kaalamae

Aanandhang kondu thaandavam

Nee aadugindra kaatchiyai

Aadaamal nindru kaangirom

Nee aatchi cheiyum maatchiyai

Chorus :

Veruppugal aruthanai

Viruppugal udhirthanai

Neruppugal erikkaiyil

Pugazh thugal unarthinai

Kazhuthil naagam kondanai

Vizhungi nanju undanai

Umaikku thaegam thandhanai

Emakku neeyae chindhanai

Chorus :

Andathai aalum nathanae

Muttrum unarndha chithanae

Nidham nigazhthum nithanae

Thiruthidum aruthanae

Aruthidum karuthanae

Uruthidum cherukkinai

Niruthidum oruthanae

Chorus :

Udukkaiyai edukkaiyil

Idumbaigal nadungidum

Arakkanae un paarvaiyil

Thurakkamae adangidum

Mukkannan undhan paarvaiyaal

Thikkettum chodhi aagumae

Mukkodu itta netriyaal

Mukkaalam attru pogumae

Male :

Shivam shivam shivam shivam

Eduppadhum shivam shivam

Shivam shivam shivam shivam

Mudippadhum shivam shivam

Shivam shivam shivam shivam

Azhippadhum shivam shivam

Shivam shivam shivam shivam

Azhippadhum shivam shivam

Chorus :

Shivam shivam shivam shivam

Vinnengilum shivam shivam

Shivam shivam shivam shivam

Mannengilum shivam shivam

Shivam shivam shivam shivam

Engengumae shivam shivam

Shivam shivam shivam shivam

Em nenjilum shivam shivam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sivam Sivam

Which movie does the song Sivam Sivam belong to?

The song Sivam Sivam is from the movie Manikarnika (The Queen of Jhansi).

Who is the music director of Sivam Sivam?

The music for Sivam Sivam is composed by Shankar-Ehsaan-Loy.

Who wrote the lyrics for Sivam Sivam?

The lyrics for Sivam Sivam are penned by Madhan Karky.

Who sang the Sivam Sivam song?

Sivam Sivam is sung by Renjith Unni, Jithin Rajand Shenbagaraj.

Related Songs