Thanga Pappa Sandham Duet - தமிழ் பாடல் வரிகள்
: ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா
பெண்
: லலலலலா லாலலலாலா….
ஆண்
: லாலாலா…
ஆண்
: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே….
பெண்
: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்
ஆண்
: பூமணக்கும் பெண் மயிலே
பால் மணக்கும் நேரமோ
பெண்
: ம்ம்ம்…பொங்கி வரும் தாய்மையிலே
பெண் மனமும் பாடுமோ
ஆண்
: அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை
பிள்ளைதான் அறிந்திடுமோ
பெண்
: பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி
அன்னைக்கே புரிந்திடுமோ
ஆண்
: கர்ப்பம் என்னும் கோயிலிலே
கண்ணை மூடித் தூங்கும்
பெண்
: பிள்ளை உன்னைக் காண்பதற்கே
தாயின் நெஞ்சம் ஏங்கும்
ஆண்
: பல ஜென்மம் தொடரும் பந்தமே
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
பெண்
: தந்தை உந்தன் கண்களிலே
தங்க மகள் பார்க்கிறேன்
ஆண்
: ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி
காதை வைத்து கேட்கிறேன்
பெண்
: சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை
மெல்லத்தான் பேசிடுமோ
ஆண்
: தத்தி தத்தி தாவி நம் பிள்ளை
நெஞ்சில்தான் ஆடிடுமோ
பெண்
: பிள்ளை ஒன்று இல்லையென்றால்
சொல்லும் உன்னால் மாறும்
ஆண் :
தந்தை நெஞ்சின் ஆசைகளும்
பிள்ளை உன்னால் தீரும்
உன்னைக் காண கண்கள் ஏங்குது
பெண்
: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே….
பெண்
: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
ஆண்
: தந்தை நெஞ்சம் தாளம் போடும்…..
Thanga Pappa Sandham Duet - English Lyrics
Male :
Sanisaga sanisari sanisagama sanirisa
Female :
Lalalalalaa… laalalalaalaa
Laalaalaalaa laa lalala
Laalaalaalaa laa lalalalalalaa…
Male :
Lalalalalallalalalaaa
Male :
Thanga paapa sandham paadum
Thandhai nenjam thaalam podum
Idhu inba thollaiyoo suga raagamillaiyoo
Oru thaayin ullamae anbu koyil illaiyoo
Andha koyil vaazhum deivamae
Female :
Thanga paapa sandham paadum
Thaayin nenjam thaalam podum
Male :
Poomanakkum pen mayilae
Paal manakkum naeramoo
Female :
Mmm pongi varum thaaimaiyilae
Penn manamum paadumoo
Male :
Annai nenjil oorum ennangalai
Pillaithaan arindhidumoo
Female :
Pinju kaalgal modhi pesum mozhi
Annaikku purindhidumoo
Male :
Karbam ennum koyililae
Kannai moodi thoongum
Female :
Pillai unnai kaanbadharkkae
Thaayin nenjam yengum
Male :
Pala jenmam thodarum bandhamae
Thanga paapa sandham paadum
Thandhai nenjam thaalam podum
Female :
Thandhai undhan kangalilae
Thanga magal paarkkiren
Male :
Mmm…oosaiyindri pesum mozhi
Kaadhai veithu ketkkiren
Female :
Chinna chinna mullai kilippillai
Mellathaan pesidumoo
Male :
Thaththi thaththi thaavi namm pillai
Nenjil thaan aadidumoo
Female :
Pillai ondru illaiyendraal
Sollum unnaal maarum
Male :
Thandhai nenjin aasaigalum
Pillai unnaal theerum
Unnai kaana kangal yengudhu
Female :
Thanga paapa sandham paadum
Thaayin nenjam thaalam podum
Idhu inbha thollaiyoo suga raagamillaiyoo
Oru thaayin ullamae anbhu koyil illaiyoo
Andha koyil vaazhum deivamae
Female :
Thanga paapa sandham paadum
Male :
Thandhai nenjam thaalam podum