Unakkoru Vishayam - தமிழ் பாடல் வரிகள்
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ
ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ்
பெண் :
பல்லாக்கு என் மேனி
பட்டத்து ராஜா நீ
பக்கம் வந்தாடவோ
பொன் மஞ்சம் என் நெஞ்சம்
பூங்கன்னம் தேன் கிண்ணம்
சொந்தம் கொண்டாடவோ வா வா
பெண் :
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ
ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ்
பெண் :
என் வாழ்வுக்கு நீதான் வெண்ணிலவு
ஆண் :
வெண்ணிலவுக்கு வானம்தான் உறவு
பெண் :
இந்த தாமரை பூவிதழ் மலராதோ
ஆண் :
அந்த சூரியன் சுடர் வந்து தழுவாதோ
பெண் :
உடல் கொதிக்குது குளிர்ந்திட வழி சொல்லு
ஆண் :
குளிர் நதியினில் போய் கொஞ்சம் நீராடு
பெண் :
நீ ஆசையில்லாத ஆண் மகனோ
ஆண் :
உன் ஆசைக்கு காரணம் நான்தானோ
ஆண் :
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ
ஓஓஓஓஓஓஹ்
ஆண் :
மாணிக்கம் வைடூர்யம் ஆணிப்பொன்
எல்லாம் உன் அங்கம் என்றானதோ
பவளத்தின் பெட்டிக்குள் தவழும் நல்முத்துக்கள்
பற்கள் என்றானதோ
ஆண் :
இந்த மைவிழி பாண்டியன் மீன் கொடியோ
பெண் :
இளம் மீன் வந்து முகத்தினில் மிதப்பதுண்டோ
ஆண் :
இந்த புருவங்கள் சேரனின் வில் கொடியோ
பெண் :
இதை வீரர்கள் கைகளில் வளைப்பதுண்டோ
ஆண் :
உன் எழில்நடை சோழனின் புலிக்கொடியோ
பெண் :
என் இனத்தவள் புலியையும் விரட்டலையோ
ஆண் :
நீ ஆசையில்லாத பெண் மகளோ
பெண் :
உன் ஆசைக்கு காரணம் என் அழகோ
ஆண் :
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
பெண் :
ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
இருவர் :
சொல்லவோ என்னென்று சொல்லவோ
Unakkoru Vishayam - English Lyrics
Female :
Unakkoru vishayam therivikkavo
Unakkoru vishayam therivikkavo
Ha ullaththin aasaiyai arivikkavo
Sollavo ennendru sollavo
Oooooooh oooooooh
Female :
Pallaakku en maeni
Pattaththu raja nee
Pakkam vanthaadavo
Pon manjam en nenjam
Poongannam thaen kinnam
Sontham kondaadavo vaa vaa
Female :
Unakkoru vishayam therivikkavo
Ha ullaththin aasaiyai arivikkavo
Sollavo ennendru sollavo
Oooooooh oooooooh
Female :
En vaazhvukku neethaan vennilavu
Male :
Vennilavukku vaanamthaan uravu
Female :
Intha thaamarai poovithazh malaraatho
Male :
Antha sooriyan sudar vanthu thazhuvaatho
Female :
Udal kodhikkuthu kulirnthida vazhi sollu
Male :
Kulir nadhiyinil poe konjam neeraadu
Female :
Nee aasaiyillaatha aan magano
Male :
Un aasaikku kaaranam naanthaano
Male :
Unakkoru vishayam therivikkavo
Ha ullaththin aasaiyai arivikkavo
Sollavo ennendru sollavo
Oooooooh
Male :
Maanikkam vaidooriyam aanipon
Ellaam un angam endraanatho
Pavalaththin pettikkul thavazhum nal muththukkal
Parkkal endraanatho
Male :
Intha maivizhi pandiyan meen kodiyo
Female :
Ilam meen vanthu mugaththinil mithappathundo
Male :
Intha puruvangal serananin vil kodiyo
Female :
Idhai veerargal kaigalil valaippathundo
Male :
Un ezhil nadai sozhanin pulikkodiyo
Female :
En inaththaval puliyaiyum virattalaiyo
Male :
Nee aasaiyillaatha penn magalo
Female :
Un aasaikku kaaranam en azhago
Male :
Unakkoru vishayam therivikkavo
Female :
Ha ullaththin aasaiyai arivikkavo
Both :
Sollavo ennendru sollavo