Vaada Malar Thenen - தமிழ் பாடல் வரிகள்
ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் :
ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
வாடா மலர்த் தேனே
வாடா மலர்த் தேனே
சிறு மாங்கனி வாயிதழ்க் கோமானே
எழில் வானே நீலவிழிப் பூமானே
இமை மூடித் துயில்வாயே
பெண் :
வாடா மலர்த் தேனே
சிறு மாங்கனி வாயிதழ்க் கோமானே
எழில் வானே நீலவிழிப் பூமானே
இமை மூடித் துயில்வாயே
பெண் :
ஆயிரம் துயரால் நம் வாழ்க்கையாவும்
தாளாத் தனிமையால் வாடிடலானேன்
தாயிவள் மனக்குறை சொன்னால் தீருமோ
தாயிவள் மனக்குறை சொன்னால் தீருமோ
தாரகையே கதை கேளாதே
பெண் :
வாழ்க்கையெல்லாம் ரகசியமே
வளராத இளநெஞ்சில் அறிவாயோ
பெண் :
வாடா மலர்த் தேனே
பெண் :
மோகனச் சிலையே கேள் பாரில் யாரும்
காணாத கதையடா அன்னையின் வாழ்வே
வேதனை ரகசியம் உன்னால் மாறுமோ
சொல்வதென்றால் மனம் தாளாதே
காலம் எல்லாம் கருகியதே
கலையாத இளம் நெஞ்சில் அறிவாயோ
பெண் :
வாடா மலர்த் தேனே
சிறு மாங்கனி வாயிதழ்க் கோமானே
எழில் வானே நீலவிழிப் பூமானே
இமை மூடித் துயில்வாயே
Vaada Malar Thenen - English Lyrics
Female :
Vaada malar thaenae
Vaada malar thaenae
Siru maangani vaayidhazh komaanae
Ezhil vaanae neelavizhi poomaanae
Imai moodi thuyilvaayae
Female :
Vaada malar thaenae
Siru maangani vaayidhazh komaanae
Ezhil vaanae neelavizhi poomaanae
Imai moodi thuyilvaayae
Female :
Aayiram thuyaraal nam vaazhkaiyaavum
Thaala thanimaiyil vaadidalaanen
Thaaival manakurai sonnaal theerumoo
Thaaival manakurai sonnaal theerumoo
Tharagaiyae kadhai keladhae
Female :
Vaazhkaiyellam ragasiyamae
Valaradha ilan nenjil arivaayoo
Female :
Vaada malar thaenae
Female :
Mogana silaiyae kel paaril yaarum
Kaanadha kadhaiyada annaiyin vaazhvae
Vaedhanai ragasiyam innaal maarumoo
Solvadhendral manam thaaladhae
Kaalam ellaam karugiyadhe
Kalaiyadha ilam nenjil arivaayoo
Female :
Vaada malar thaenae
Siru maangani vaayidhazh komaanae
Ezhil vaanae neelavizhi poomaanae
Imai moodi thuyilvaayae