Vaavendru Sonnadhum - தமிழ் பாடல் வரிகள்
வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ
வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ
பெண் :
வாவென்று சொன்னதால் வரவில்லை நான்
இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்
வாவென்று சொன்னதால் வரவில்லை நான்
இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்
ஆண் :
சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே
அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே
பெண் :
ஹாஹாஹா
ஆண் :
சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே
அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே
பெண் :
ஹ்ம்ம் உன் சம்பந்தம் கொள்ள மன சம்மதமுண்டு
அதைத்தடை செய்ய நந்தி போல் பெற்றோருண்டு
ஆண் :
வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ
பெண் :
நீ தாவென்று கேட்டாலும் தரமாட்டேன் நான்
இப்போ தாவென்றால் தடை இன்றி தருவேனே நான்
ஆண் :
சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை
மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை
பெண் :
ஹாஹாஹா
ஆண் :
சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை
மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை
பெண் :
ஹ்ம்ம் வெல்லமென்று சொல்வதால் வாயும் இனிக்குமா
நீ சொல்லும் இந்த வார்த்தையும் என்றும் நிலைக்குமா
ஆண் :
வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ
பெண் :
ஹோ ஹோ
வாவென்று சொன்னதும் வந்தேனே நான்
டௌரி தா என்று கேட்டாலும் போவென்பேன் நான்
ஆண் :
கரும்பான உன் மனசை தந்தால் போதும்
மனம் விரும்புகின்ற டௌரியெல்லாம் அதுவேயாகும்
பெண் :
என் இரும்பான மனமுருகிப் பலநாள் ஆச்சு
இருவர் :
இனி எந்நாளும் இன்பமே நம் வாழ்வின் மூச்சு….
முனங்கல் :
……
Vaavendru Sonnadhum - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
A. Maruthakasi
Male :
Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharuvaaya nee
Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharuvaaya nee
Female :
Vaavendru sonnadhaal varavillai naan
Ingu vambellaam pesinaal povenben naan
Vaavendru sonnadhaal varavillai naan
Ingu vambellaam pesinaal povenben naan
Male :
Sandaiyil thaan namadhu kaadhal aarambamae
Adhu sammandham kondaal varum aannadhamae
Female :
Hahaha
Male :
Sandaiyil thaan namadhu kaadhal aarambamae
Adhu sammandham kondaal varum aannadhamae
Female :
Hmm un sammandham kolla mana sammadham undu
Adhai thadai seiya nandhi pol pettrorundu
Male :
Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharavendum nee
Female :
Nee thaavendru kettaalum tharamatten naan
Ippo thaavendraal thadai yindri tharuvenae naan
Male :
Seerattti valarpapdhu thaan pettrvar velai
Manam serndhu naamum uravaadal kaadhalin leelai
Female :
Hahaha
Male :
Seerattti valarpapdhu thaan pettrvar velai
Manam serndhu naamum uravaadal kaadhalin leelai
Female :
Hmmm vellamendru solvadhaal vaayum inikkuma
Nee sollum indha vaarthaiyum endrum nilaikkuma
Male :
Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharavendum nee
Female :
Hoho
Vaavendru sonnadhum vandhene naan
Dowry thaavendru kettalum povenbaen naan
Male :
Karumbaana un manasai thandhaal podhum
Manam virumbugindra dowry ellam adhuvae aagum
Female :
En irumbaana manamurughi pala naal aachu
Both :
Ini ennaalum inbame namm vaazhvin moochu
Humming :
……………