Tamil Lyrics

Vazhakondru Thoduppen song lyrics

Movie — Andru Kanda Mugam

Singer(s) — P. Susheela, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Vazhakondru Thoduppen - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வழக்கொன்று தொடுப்பேன்
வாதத்தில் அடிப்பேன் வம்புக்கிழுத்ததாக
என்னை வம்புக்கிழுத்ததாக

ஆண் :
எதிர் வழக்காடுவேன்
பதில் மனு போடுவேன் என்னை அழைத்ததாக
எந்தன் நெஞ்சை கெடுத்ததாக

பெண் :
வழக்கொன்று தொடுப்பேன்
வாதத்தில் அடிப்பேன் வம்புக்கிழுத்ததாக
என்னை வம்புக்கிழுத்ததாக

ஆண் :
எதிர் வழக்காடுவேன்
பதில் மனு போடுவேன் என்னை அழைத்ததாக
எந்தன் நெஞ்சை கெடுத்ததாக

பெண் :
மன்மதன் நீதிபதியாய் இருப்பான்
அந்த மன்றத்தில் உன்னை நான் நிறுத்தி வைப்பேன்

ஆண் :
ஹ்ம்ம்

பெண் :
மன்மதன் நீதிபதியாய் இருப்பான்
அந்த மன்றத்தில் உன்னை நான் நிறுத்தி வைப்பேன்

ஆண் :
சம்மதம் இன்றி அது நடக்காதே என
சட்டத்தை நான் அங்கு எடுத்துரைப்பேன்…

பெண் :
ஹோ ஹோ

ஆண் :
உன் சம்மதம் இன்றி அது நடக்காதே என
சட்டத்தை நான் அங்கு எடுத்துரைப்பேன்

பெண் :
தனிமையில் நீ என்னை அழைத்ததென்ன
நல்ல சாகச கலை அங்கு தொடுத்ததென்ன
தனிமையில் நீ என்னை அழைத்ததென்ன
நல்ல சாகச கலை அங்கு தொடுத்ததென்ன

ஆண் :
இனிமையென்ன அங்கு ஒருவருக்கா
ஹம்ம்ம்
இனிமையென்ன அங்கு ஒருவருக்கா
இல்லை இரண்டற கலக்கின்ற இருவருக்கா

பெண் :
வழக்கொன்று தொடுப்பேன்
வாதத்தில் அடிப்பேன் வம்புக்கிழுத்ததாக

ஆண் :
எதிர் வழக்காடுவேன்
பதில் மனு போடுவேன் என்னை அழைத்ததாக
எந்தன் நெஞ்சை கெடுத்ததாக

பெண் :
மறுப்பதுப்போல் கையை பிடிப்பதென்ன
என்னை மன்னிக்கும் பாவனையில் அணைத்ததென்ன
மறுப்பதுப்போல் கையை பிடிப்பதென்ன
என்னை மன்னிக்கும் பாவனையில் அணைத்ததென்ன

ஆண் :
அணைக்கின்ற சுகம் தன்னை ரசித்ததென்ன
அந்த ரசனையில் மெல்ல மெல்ல சிரித்ததென்ன என்ன
அணைக்கின்ற சுகம் தன்னை ரசித்ததென்ன
அந்த ரசனையில் மெல்ல மெல்ல சிரித்ததென்ன

பெண் :
சிரிக்கின்ற கனிகளில் கொடுத்ததென்ன
அது சிவந்ததென்ன பழம் விழுந்ததென்ன
சிரிக்கின்ற கனிகளில் கொடுத்ததென்ன
அது சிவந்ததென்ன பழம் விழுந்ததென்ன

ஆண் :
நடக்கட்டும் என்று கண்ணை மறைத்ததென்ன
ஹ்ம்ம்
நடக்கட்டும் என்று கண்ணை மறைத்ததென்ன
இன்று நான் செய்த குற்றம் என்று உரைத்ததென்ன

பெண் :
வழக்கொன்று தொடுப்பேன்
வாதத்தில் அடிப்பேன் வம்புக்கிழுத்ததாக

ஆண் :
எதிர் வழக்காடுவேன்
பதில் மனு போடுவேன் என்னை அழைத்ததாக
எந்தன் நெஞ்சை கெடுத்ததாக

Vazhakondru Thoduppen - English Lyrics

Female :

Vazhakkondru thoduppen

Vaadhathil adippen vambizhuthathaaga

Ennai vambizhuthathaaga

Male :

Edhir vazhakkaaduven

Padhil manu poduven ennai azhaithathaaga

Endhan nenjai keduthathaaga

Female :

Vazhakkondru thoduppen

Vaadhathil adippen vambizhuthathaaga

Ennai vambizhuthathaaga

Male :

Edhir vazhakkaaduven

Padhil manu poduven ennai azhaithathaaga

Endhan nenjai keduthathaaga

Female :

Manmadham needhipadhiyaai irupaan

Andha mandrathil unnai naan niruthi vippen

Male :

Hmm

Female :

Manmadham needhipadhiyaai irupaan

Andha mandrathil unnai naan niruthi vippen

Male :

Sammadham indri adhu nadakaadhae ena

Sattathai naan angu eduthuraippen

Female :

Hoo hoo

Male :

Sammadham indri adhu nadakaadhae ena

Sattathai naan angu eduthuraippen

Female :

Thanimaiyil nee ennai azhaithathenna

Nalla sagasa kalai angu thoduthathenna

Thanimaiyil nee ennai azhaithathenna

Nalla sagasa kalai angu thoduthathenna

Male :

Inimaiyenna angu oruvarukka

Hmm

Inimaiyenna angu oruvarukka

Illai irandara kalakkindra iruvarukkaa

Female :

Vazhakkondru thoduppen

Vaadhathil adippen vambizhuthathaaga

Male :

Edhir vazhakkaaduven

Padhil manu poduven ennai azhaithathaaga

Endhan nenjai keduthathaaga

Female :

Maruppathu pol kaiyai pidithathenna

Ennai mannikkum bavanaiyil anaithathenna

Maruppathu pol kaiyai pidithathenna

Ennai mannikkum bavanaiyil anaithathenna

Male :

Anaikkindra sugam thannai rasithathenna

Andha rasanaiyil mella mella sirithathenna enna

Anaikkindra sugam thannai rasithathenna

Andha rasanaiyil mella mella sirithathenna

Female :

Sirikkindra kanigalil koduthathenna

Adhu sivandhadhenna pazham vizhundhadhenna

Sirikkindra kanigalil koduthathenna

Adhu sivandhadhenna pazham vizhundhadhenna

Male :

Nadakattum endru kannai maraithathenna

Hmm

Nadakattum endru kannai maraithathenna

Indru naan seidha kuttram endru uraithathenna

Female :

Vazhakkondru thoduppen

Vaadhathil adippen vambizhuthathaaga

Male :

Edhir vazhakkaaduven

Padhil manu poduven ennai azhaithathaaga

Endhan nenjai keduthathaaga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vazhakondru Thoduppen

Which movie does the song Vazhakondru Thoduppen belong to?

The song Vazhakondru Thoduppen is from the movie Andru Kanda Mugam.

Who is the music director of Vazhakondru Thoduppen?

The music for Vazhakondru Thoduppen is composed by Unknown.

Who wrote the lyrics for Vazhakondru Thoduppen?

The lyrics for Vazhakondru Thoduppen are penned by Kannadasan.

Who sang the Vazhakondru Thoduppen song?

Vazhakondru Thoduppen is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs