Aalayam Endraal Aalayam - தமிழ் பாடல் வரிகள்
ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்
ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்
ஆண் :
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்……
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்……
ஆண் :
ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்
ஆண் :
சாலை வழியே தனியே சென்றால்
தானும் வருவாள் பவானியே
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே…
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே…
ஆண் :
காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி
காரிகைமார்கள் கூடுகின்றார்
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்…..
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்…..
ஆண் :
காளி திரிசூலி
குழு :
காளி திரிசூலி
ஆண் :
நீலி ஜெகன்மாதா
குழு :
நீலி ஜெகன்மாதா
ஆண் :
தேவி பராசக்தி
குழு :
தேவி பராசக்தி
ஆண் :
ஓம் சக்தி பவானி
குழு :
பவானி பவானி
ஆண் :
ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்
ஆண் :
தாலியைக் காட்டி வேலியை நினைந்து
தம்மை மறந்தே ஆடிகின்றார்
தர்மம் என்பதை காணாதவர்கள்
சன்னிதி முழுவதும் தேடுகின்றார்….
ஆண் :
பாளையத்தம்மா இருப்பதை மறந்து
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்
பட்டப் பகலில் கண்களை இழந்து
பாதையை மாற்றி ஓடுகின்றார்
ஆண் :
தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்
தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்…
Aalayam Endraal Aalayam - English Lyrics
Male :
Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam
Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam
Male :
Kaalam vazhangum thunbaththai ellaam
Kanavaai maattum aalayam
Kaalam vazhangum thunbaththai ellaam
Kanavaai maattum aalayam
Male :
Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam
Male :
Saalai vazhiyae thaniyae sendraal
Thaanum varuvaal bhavaaniyae
Thaayae saranam endru vizhunthaala
Than kai koduppaal bhavaaniyae
Thaayae saranam endru vizhunthaala
Than kai koduppaal bhavaaniyae….
Male :
Kaalaiyil manjal neeril moozhgi
Kaarigamaargal koodugindraar
Kattiya veppan selaigaludane
Kaaliyin perumai paadugindraar
Kattiya veppan selaigaludane
Kaaliyin perumai paadugindraar….
Male :
Kaali thirisoozhi
Chorus :
Kaali thirisoozhi
Male :
Neeli jeganmadha
Chorus :
Neeli jeganmadha
Male :
Devi parasakthi
Chorus :
Devi parasakthi
Male :
Om sakthi bavani
Chorus :
Bavani bavani
Male :
Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam
Male :
Thaliyai kaatti veliyai ninainthu
Thammai maranthae aadigindraar
Dharmam enbathai kaanathavargal
Sannithi muzhuvathum thedungindraar
Male :
Paalaiyaththammaa iruppathai maranthu
Paavigal ellaam aadugindraar
Patta pagalil kangalai izhanthu
Paadhaiyai maattri odugindraar
Male :
Thavaru nadanthaal paalaiyaththammaa
Sakthiyai angae kaattugindraal
Dharmam vellum enbathai solli
Thaayin perumaiyai naattugindraal…