Anbe Sivam - தமிழ் பாடல் வரிகள்
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே
அதுவே சுகம் அதுவே சுகம்
குழு :
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….
ஆண் :
பண்பான உலகத்தில் பகல் வேஷக்காரர்கள்
பழகவே நாமும் இடம் கொடுக்கலாமா
பெண் :
பகவானை ஏமாற்ற எவனாலும் முடியாது
பகையாளி ஆனாலும் கெடுக்கலாமா
குழு :
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….
ஆண் :
கண்மூடித்தனமான கட்சிகள் தோன்றியே
கலகம் செய்திட இடமும் கொடுக்கலாமா
பெண் :
கட்சியின் பெயராலே தட்சணை வாங்கியே
காலம் கழிப்பவரை கெடுக்கலாமா
குழு :
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….
ஆண் :
கோயிலின் சொத்துக்கு
குழித்தோண்டவே வரும்
பாவிகளுக்கே இடமும் கொடுக்கலாமா
பெண் :
கோயிலில் தெய்வமே இருந்திடில் கேட்கட்டும்
குலத் துரோகியானாலும் கெடுக்கலாமா
குழு :
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….
ஆண் :
பாட்டாளி மக்களின் பச்சை ரத்தத்திலே
படகோட்டவே இடமும் கொடுக்கலாமா
பெண் :
படகோட்டினாலுமே பாஷாண புயலினால்
பலி வாங்கும் நாமதை கெடுக்கலாமா
ஆண் :
தன்னையே நினையாத புதுப்பணக்காரரின்
தற்புகழுக்கே இடம் கொடுக்கலாமா
பெண் :
தற்புகழும் நாட்டினில் சகஜமாய் போனதால்
தானாக நாம் சென்று கெடுக்கலாமா
குழு :
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….
ஆண் :
கரையானின் வீட்டிலே கருநாகம் வாழ்ந்திட
கண்ணாலே பார்த்தும் இடம் கொடுக்கலாமா
பெண் :
இறைவனின் சிருஷ்ட்டியில்
இதுவுமோர் லீலையென
எண்ணாமல் நாமதை கெடுக்கலாமா
குழு :
அறிவாயடா உலகை அறிவாயடா
அநியாய செயல் யாவும் தெரிவாயடா
ஆண் :
தேன் பாயும் நாட்டிலே எப்பொழுதும் பட்டினி
கோபமென் குணமென அலைவது ஆகாதய்யா
சிங்கம் சங்கர ஸ்வாமி செந்தமிழை உணர்ந்திட
யாருக்கும் வயதிங்கு போதாதய்யா
குழு :
அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….
Anbe Sivam - English Lyrics
Male :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae Uyarnthaalae
Adhuvae sugam adhuvae sugam
Chorus :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae Uyarnthaalae
Adhuvae sugam
Male :
Panpaana ulagaththil pagal veshakkaararkal
Pazhagavae naamum idam kodukkalaamaa
Female :
Bhagavaanai yaemaattra evanaalum mudiyaathu
Pagaiyaali aanaalum kodukkalaamaa
Chorus :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam
Male :
Kannmoodiththanamaana katchigal thondriyae
Kalagam seithida idamum kodukkalaamaa
Female :
Katchiyin peyaraalae dhatchanai vaangiyae
Kaalam kazhippavarai kedukkalaamaa
Chorus :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam
Male :
Koyilin soththukku
Kuzhi thondavae varum
Paavikalukkae idamum kodukkalaama
Female :
Koyilil deivamae irunthidil ketkattum
Kula thurogiyaanalum kedukkalaamaa
Chorus :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam
Male :
Paattaali makkalin pachai raththathilae
Padakottavae idamum kodukkalaamaa
Female :
Padakottinaalumae paashaana puyalinaal
Pali vaangum naamathai kedukkalaamaa
Male :
Thannaiyae ninaiyaatha pudhu panakkaararin
Tharpugazhukkae idam kodukkalaamaa
Female :
Tharpugazhum naattinil sagajamaai ponathaal
Thaanaaga naam sendru kedukkalaamaa
Chorus :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam
Male :
Karaiyaanin veettilae karunaagam vaazhnthida
Kannaalae paarththum idam kodukkalaamaa
Female :
Iraivanin sirushttiyil
Idhuvumor leelaiyena
Ennaamal naamathai kedukkalaamaa
Chorus :
Arivaayadaa ulagai arivaayadaa
Aniyaaya seyal yaavum therivaayadaa
Male :
Thaen paayum naattilae eppozhuthum pattini
Kobamen gunamena alaivathu aagaathaiyyaa
Singam sangara swaamy sentamizhai unarnthida
Yaarukkum vayathingu pogaathaiyyaa
Chorus :
Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam