Anna Meendum - தமிழ் பாடல் வரிகள்
அண்ணல் காந்தியின் வழியினிலே
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்
தந்தை பெரியார் பகுத்தறிவால்
எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்…….
ஆண் :
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா………அண்ணா……..எங்கள் அண்ணா…..
ஆண் :
ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
என்பது நீ சொன்ன போதனை
ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே
மறைந்ததுதான் பெரும் சோதனை
ஆண் :
எப்போது நீ பிறப்பாய்
எங்கள் துயரம் தணிப்பாய்
சென்ற இடம்தான் எங்கே
என்று வருவாய் இங்கே……….
ஆண் :
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
ஆண் :
இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை
இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்
இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்
இனிமேல் காண்பது யாரிடம்
ஆண் :
வானத்தை மனதால் அளந்தாய்
வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்
நான் எனும் நினைவை மறுத்தாய்
நாம் எனும் உறவை வளர்த்தாய்……..
ஆண் :
அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா………அண்ணா……..எங்கள் அண்ணா…..
Anna Meendum - English Lyrics
Male :
Annal gandhiyin vazhiyinilae
Vaikkam veerar thanthai periyaar nadanthaar
Thanthai periyaar paguththarivaal
Engal tamilmagan annaa valarnthaar
Male :
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……
Male :
Yaezhai sirippinil iraivanai kaanbom
Enbathu nee sonna bodhanai
Yezhaigal sirikkum nilai varyum munnae
Maranthathuthaan perum sodhanai
Male :
Eppothu nee pirappaai
Engal thuyaram thanippaai
Sendra idamthaan engae
Endru varuvaai ingae
Male :
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Male :
Yaesuvin porumai budhanin karunai
Inainthathae vaazhnthathu unnidam
Igazhnthavar thammai vaazhnthidum ullam
Inimaen kaanbathu yaaridam
Male :
Vaanaththai manathaal alanthaai
Vaazhvukku vazhiyaai nadanthaai
Naan enum ninaivai maruththaai
Naam enum uravai valarththaai
Male :
Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……