Kaalam Varugudhu Nalla Kaalam - தமிழ் பாடல் வரிகள்
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
ஆண் :
ஜாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
ஜாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
ஆண் :
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி
வேடபுரதாருக்கு நல்ல குறி சொல்லு
ஆண் :
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
ஆண் :
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்ப சுருங்குது சுறுசுறுப்பு வெளையுது
எட்டு லட்சுமியும் ஏறி வளருது
ஆண் :
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பும் வருகுது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினா மெத்த
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினா
போவான் போவான் அய்யோன்னு போவான்
ஆண் :
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
ஆண் :
பயம் தொலையுது பாவம் தொலையுது
சாத்திரம் வளருது ஜாதி கொறையுது
வேடபுரத்தில் வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
ஆண் :
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரமெல்லாம் வளருது வளருது
மாகாளி வேடபுரதாருக்கு நல்ல குறி சொல்லு
ஆண் :
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
காலம் வருகுது நல்ல காலம் வருகுது
ஆண் :
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
பழைய பைத்தியம் பளீரென தெளியுது
வீரம் வருகுது மென்மை கெடைக்குது
சொல்லடி சொல்லடி சக்தி
சுந்தரி வீரி சண்டிகை சூலி
நல்வாக்கு சொல்லடி நல்வாக்கு சொல்லடி
பாத்து சொல்லடி
ஆண் :
காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
ஆண் :
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது…
Kaalam Varugudhu Nalla Kaalam - English Lyrics
Music Director :
G. Govindarajulu Naidu
Lyricist :
Mahakavi Bharathiyar
Male :
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Male :
Jaathigal seruthu sandaigal tholaiyuthu
Jaathigal seruthu sandaigal tholaiyuthu
Male :
Solladi solladi sakthi maakaali
Vedapurathaarukku nalla kuri sollu
Male :
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Male :
Saamimarkkellaam thairiyam valaruthu
Thoppa surunguthu surusuruppu velaiyuthu
Ettu lakshmiyum yaeri valaruthu
Male :
Thariththiram poguthu selvam varuguthu
Thariththiram poguthu selvam varuguthu
Padippum varuguthu paavam tholaiyuthu
Padichchavan soodhum paavamum panninaa
Meththa padichcavan soodhum paavamum panninaa
Poovaan povaan aiyyonnu povaan
Male :
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Male :
Bayam tholaiyuthu paavam tholaiyuthu
Saaththiram valaruthu jaathi koraiyuthu
Vedapuraththil viyaabaaram peruguthu
Thozhil peruguthu thozhilaali vaazhvaan
Male :
Saaththiram valaruthu sooththiram theriyuthu
Saaththiram valaruthu sooththiram theriyuthu
Yanthiram peruguthu thnthiram valaruthu
Manthiramellaam valaruthu valaruthu
Maakaali vaedapurathaarukku nalla kuri sollu
Male :
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Kaalam varuguthu nalla kaalam varuguthu
Male :
Neththiram thirakkuthu niyaayam theriyuthu
Pazhaiya paththiyam paleerena theliyuthu
Veeram varuguthu menmai kedaikkuthu
Solladi solladi sakthi
Sundhari veeri sandigai sooli
Nallvaakku solladi nallvaakku solladi
Paaththu solladi
Male :
Kaalam varuguthu
Nalla kaalam varuguthu
Kaalam varuguthu
Nalla kaalam varuguthu
Male :
Nalla kaalam porakkuthu
Nalla kaalam porakkuthu
Nalla kaalam porakkuthu
Nalla kaalam porakkuthu
Nalla kaalam porakkuthu
Nalla kaalam porakkuthu…