Kannaalam - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
கண்ணாலம் கண்ணாலம்
மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம்
மேகம் முட்டட்டும்
பெண் :
கண்ணாலம் கண்ணாலம்
வண்ணம் ஏறட்டும்
பொண்ணோட மஞ்சக் கன்னம்
செவப்பா மாறட்டும்
பெண் :
பிப்பீப்பீ கெட்டி மேளம்
சத்தம் கூடட்டும்
மாப்பிள்ளை காலு தானா
ஆட்டம் போடட்டும்
குழு :
கண்ணாலம் கண்ணாலம்
மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம்
மேகம் முட்டட்டும்
பெண் :
எந்தன் கை மீது
மருதாணி போல்
நெஞ்சில் உனை தானே
நான் சூடினேன்…..
பெண் :
காதல் பெய்கின்ற
வண்ணங்களில்
எந்தன் உடை மாற
நான் ஆடினேன்
பெண் :
காற்றில் கேட்காத பாடல்கள்
கேட்கின்றேன்
கண்கள் இமைக்கின்ற ஓசைக்குள்
நான் காண்கிறேன்
கனா… ஒரே கனா…
நாளெல்லாம் அதே கனா
குழு :
கண்ணாலம் கண்ணாலம்
நெய்யி மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட
நாக்கு நெனைக்கும்
குழு :
கண்ணாலம் கண்ணாலம்
வாசம் கூடட்டும்
தக்கோலம் ஏலம் கிராம்பு
மூக்கத் தாக்கட்டும்
பெண் :
கற்பூரம் போல நெஞ்சு
பத்திகிடட்டும்
சந்தோசம் ஊரு பூரா
தொத்திகிடட்டும்
குழு :
கண்ணாலம் கண்ணாலம்
நெய்யி மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட
நாக்கு நெனைக்கும்
பெண் :
நாவை சீண்டாத
சுவை ஒன்றிலே
உந்தன் பேர் சொல்ல
நாவூற்கிறேன்
பெண் :
தேனில் திண்டாடும்
வண்டாகவே
உன்னில் நான் வீழ்ந்து
கொண்டாடினேன்
பெண் :
நாசி பேசாத வாசங்கள்
உன்னாலே
எந்தன் மூச்சாக ஆவாயா
நான் கேட்கிறேன்…
வினா… ஒரே வினா…
உன்னிலும் அதே வினா….
பெண் :
மாப்பிள்ளை இதயம்
குழு :
துடிதுடிக்கும்
பெண் :
ராத்திரி கேட்டு
குழு :
அடம்புடிக்கும்
பெண் :
பொண்ணிவ போகிற வேகத்த
பாத்து கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
குழு :
கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
பெண் :
தாப்பா போட்டு பூட்டும்போது…
குழு :
தாப்பா போட்டு பூட்டும்போது…
மாப்பிள்ளை மனசு படபடக்கும்
குழு :
அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
அவன் தொட்டு பேசவே துடிச்சிடுவான்
இவ முத்தம் வெச்சே முடிச்சிடுவா
அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
பெண் :
தீண்டல் ஓர் தீண்டல்
நீ தீண்டவே
பெண்மை நான் இங்கு
கொண்டேனடா
பெண் :
மென்மை என் மென்மை
என்னென்று நீ
கண்டு சொல் என்று
நின்றேனடா
பெண் :
முத்தம் என்னென்று கேட்கும்
என் இதழோடு
உந்தன் இதழ் சேர்த்து நீ சொல்லும்
நாள் தானடா…
விழா… எந்தன் விழா…
காதலில் விழும் விழா
Kannaalam - English Lyrics
Claps :
……………………
Female :
Kannaalam kannaalam
Melam kottattum
Nammooru naadhasvaram
Megam muttattum
Female :
Kannaalam kannaalam
Vannam yerattum
Ponnoda manja kannam
Chevappaa maarattum
Female :
Pippeeppee ketti melam
Chatham koodattum
Maappilla kaalu thaanaa
Aattam podattum
Chorus :
Kannaalam kannaalam
Melam kottattum
Nammooru naadhasvaram
Megam muttattum
Female :
Endhan kai meedhu
Marudhaani pol
Nenjil unai thaanae
Naan choodinen….
Female :
Kaadhal peigindra
Vannangalil
Endhan udai maara
Naan aadinen
Female :
Kaatril ketkaadha paadalgal
Ketkindren
Kangal imaikkindra osaikkul
Naan kaangidren
Kanaa… orae kanaa…
Naalelaam adhae kanaa
Chorus :
Kannaalam kannaalam
Neiyi manakkum
Pandhikku mundhikkida
Naaku nenaikkum
Chorus :
Kannaalam kannaalam
Vaasam koodattum
Thakkolam yelam kiraambu
Mookka thaakkattum
Female :
Karpooram pola nenju
Pathikidattum
Sandhosam ooru pooraa
Thothikidattum
Chorus :
Kannaalam kannaalam
Neiyi manakkum
Pandhikku mundhikkida
Naaku nenaikkum
Female :
Naavai cheendaadha
Chuvai ondrilae
Undhan per cholla
Naavoorgiren
Female :
Thaenil thindaadum
Vandaagavae
Unnil naan veezhndhu
Kondaadinen
Female :
Naasi pesaadha vaasangal
Unnaalae
Endhan moochaaga aavaayaa
Naan ketkkiren…
Vinaa… orae vinaa…
Unnilum adhae vinaa..
Female :
Maappila idhayam
Chorus :
Thudidhudikkum
Female :
Raathiri kettu
Chorus :
Adampudikkum
Female :
Ponniva pogira vegatha
Paathu kattilukippa juram adikkum
Chorus :
Kattilukippa juram adikkum
Female :
Thaappaa pottu poottumbodhu…
Chorus :
Thaappaa pottu poottumbodhu…
Maappila manasu padabadakkum
Chorus :
Avan veeran poladhaan nadichiduvaan
Iva koocham vandhadhaa nadichiduvaa
Avan thottu pesavae thudichiduvaan
Iva mutham vechae mudichiduvaa
Avan veeran poladhaan nadichiduvaan
Iva koocham vandhadhaa nadichiduvaa
Female :
Theendal orr theendal
Nee theendavae
Penmai naan ingu
Kondenadaa….
Female :
Menmai en menmai
Ennendru nee
Kandu chol endru
Nindrenadaa!…
Female :
Mutham ennendru ketkum
En idhazhodu
Undhan idhazh cherthu nee chollum
Naal thaanadaa…
Vizhaa… endhan vizhaa…
Kaadhalil vizhum vizhaa…..