Kettaiye Oru Kelvi - தமிழ் பாடல் வரிகள்
கேட்டாயே ஒரு கேள்வி
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
அந்தியிலே நான் அரும்பாவேன்
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்
ஆண் :
சுகமோ சுகம் என கரும்பாவேன்
சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன்
ஆண் :
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
ஆண் :
முந்தானை மேகத்தில் பந்தாடும் அழகினை
கண்டாலும் நான் ஒரு கவிதை சொல்வேன்
மந்தார தென்றலில் மன்றாடும் இடையினை
தந்தாலும் நான் அதை தழுவிக் கொள்வேன்
பெண் :
அம்மாடி எனக்கது புதியக் கதை
ஆனாலும் உன்னிடம் இனிய சுவை
மானாக பிறந்தது பருவச்சிலை
நீயாக தருவதில் தடைகள் இல்லை
ஆண் :
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
பெண் :
அத்தாணி மண்டபம் அத்தானைக் கண்டதும்
தட்டாமல் கதவுகள் திறக்கின்றன
ஆனந்த பூக்களில் தேன் வந்த வேகத்தில்
அங்கங்கள் படகென மிதக்கின்றன
ஆண் :
செந்தூர முகத்தினில் துறுதுறுப்பு
செம்மாந்த மார்பினில் பரபரப்பு
ஆரம்ப காதலின் சுவை அறிந்து
ஆனந்தம் தேடுது அணை உடைந்து
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
ஆண் :
ராசாத்தி பூஞ்சிட்டு ராஜாவின் கைபட்டும்
பேசாமல் இருப்பதின் பொருள் என்னவோ
பேசாமல் இருப்பதில் லேசான சுகம் உண்டு
பெண் பாடும் பேரின்பம் அதுவல்லவோ
ஆண் :
கேளாமல் கேட்டது நடக்கின்றது
பெண் :
பாராமல் பார்த்தது இனிக்கின்றது
ஆண் :
சேராமல் சேர்ந்தது சுவைக்கின்றது
பெண் :
தீராமல் சுகம்பெற அழைக்கின்றது
ஆண் :
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
பெண் :
அமைதியிலே நான் அரும்பாவேன்
ஆண் :
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்
சுகமோ சுகம் என கரும்பாவேன்
சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன்
பெண் :
……………………….
ஆண் :
…………………………..
Kettaiye Oru Kelvi - English Lyrics
Male :
Kettaayae oru kelvi
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil badhil solla mudiyaathu
Anthiyile naan arumpaavaen
Aasaiyil ezhunthaal irumbaavaen
Male :
Sugamo sugam ena karumpaavaen
Sorkkaththil anantha virunthaavaen
Male :
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu
Male :
Munthaanai mogaththil panthaadum azhaginai
Kandaalum naan oru kavithai solvaen
Manthaara thendralil mandraadum idaiyinai
Thanthaalum naan adhai thazhvi kolvaen
Female :
Ammaadi enakkathu pudhiya kadhai
Aanaalum unnidam iniya suvai
Maanaga piranththu paruvasilai
Neeyaaga tharuvathil thadaigal illai
Male :
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu
Female :
Aththaani mandabam aththaanai kandathum
Thattaamal kadhavugal thirakkindrana
Anantha pookkalil thaen vantha vegathil
Angangal padakena mithakkindrana
Male :
Senthoora mugaththinil thuruthuruppu
Semaantha maarbinil paraparappu
Aaramba kadhalin suvai arinthu
Anantham theduthu anai udainthu
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu
Male :
Rasaththi poonjittu rajavin kaipattum
Pesaamal iruppathin porul ennavo
Pesaamal iruppathin porul ennavo
Penn paadum perinbam adhuvallavo
Male :
Kelaamal kettathu nadakkindrathu
Female :
Paaramal paarththathu inikkindrathu
Male :
Saeraamal saernthathu suvaikkindrathu
Female :
Theeraamal sugam pera azhaikkindrathu
Male :
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu
Female :
Amaithiyilae naan arumpaavaen
Male :
Aasaiyil ezhunthaal irumpaavaen
Sugamo sugam ena karumpaavaen
Sorkaththil anantha virnthaavaen
Female :
……………………
Male :
……………………..