Kurunchiragu - தமிழ் பாடல் வரிகள்
தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தான் பூமி என்றதோ
ஆண் :
குறுஞ்சிறகினில் பெருமலையினை
ஏன் ஏற்றினாய்
சுருங்கிடும் வானை காட்டினாய்
வெறும் குமிழியில் புது நிறங்களை
ஏன் ஊற்றினாய்
இருண்டிடும் உலகை தீட்டினாய்
ஆண் :
எறும்புகள் நசுங்கும் போதிலும்
உயிருடன் தத்தி போகுதே
இருதயம் நொறுங்கும் போதிலோ
உயிர் எனை விட்டு போகுதே
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
குழு :
தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தான் பூமி என்றதோ
உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா
மீண்டும் மேலேறி சென்றதோ
ஆண் :
ராமன் செய்த போரே
சீதைக்காக தானே
ஆனால் என்ன போர் இது
உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
Kurunchiragu - English Lyrics
:
Madhan Karky
Chorus :
Tharai irangi vandha megha vennila
Neeyae than bhoomi endratho
Male :
Kurunchiraginil perum alaiyinai
Yen yetrinaai
Surungidum vaanai kaattinaai
Verum kumizhiyil pudhu nirangalai
Yen Ootrinaai
Irundidum ulagai theettinaai
Male :
Erumbugal nasungum bothilum
Uyirudan thaththi poguthae
Irudhayam norungum bodhilo
Uyir enai vittu poguthae
Nee endhan kanneer endru yenaaginaai
Chorus :
Tharai irangi vandha megha vennila
Neeyae than bhoomi endratho
Un nenjil neendhi vandha kaadhal vennila
Meendum mel yeri chendratho
Male :
Raaman cheidha pore
Seethaikkaaga thaanae
Aanaal enna por idhu
Unarvae illaamal aaneno aayudhamaai
Uyirae illaamal nindreno kaavalanaai
Nee endhan kanneer endru yenaaginaai