Meenakshi Kalyana - தமிழ் பாடல் வரிகள்
மீனாட்சி கல்யாண வைபோகமே
சோம சுந்தரேசர் வருகின்ற மணக்கோலமே
வேதங்கள் காணாத பாதங்கள் புவி மீது
தானாக வரச் செய்த காமேஸ்வரி
தானாக வரச் செய்த காமேஸ்வரி….
மீனாட்சி கல்யாண வைபோகமே
ஆண் :
தேவர்கள் தலைவன் இந்திரன்
காளாஞ்சி கொண்டே பன்னீர் தெளித்திடவே
தீயென எரிக்கும் அக்னி தேவன்
தூபம் காட்டி நெருங்கிடவே
ஆண் :
தென்றலின் சுகமிது என்றிட வாயுவும்
ஆலவட்டமதை வீசிடவே
மாரியை வழங்கும் வருண தேவன்
மணமலர் தட்டை ஏந்திடவே
ஆண் :
அருவுருவானவன் திருமுக தரிசனம்
நிருதியும் கண்ணாடி காட்டிடவே
ஈசானன் எனும் வடக்கிழக்கதிபன்
மாப்பிள்ளை சீதனம் தாங்கிடவே
ஆண் :
ஆண்டி அல்ல இவர் அரசருக்கரசர் என
குபேரன் அவன் நிதி வீசிடவே
காலனும் காவலனாக அஷ்டதிக் காவலர்
யாவரும் பணி செய்தார்
காவலர் யாவரும் பணி செய்தார்…
ஆண் :
மீனாட்சி கல்யாண வைபோகமே
ஆண் :
குண்டோதரன் இங்கு உலகத்தின் குடையான
இறைவனுக்கே இன்று குடை தாங்கினான்
அகத்தியனான தமிழ் கும்பமுனி பூரண
கும்பத்தை காட்டி எதிர்கொண்டே பணிந்தான்
பெண் :
அமிழ்துக்கு சுவைதன்னை சேர்பவர் போல்
அழகுக்கு அழகினை செய்ய வந்தார்
தமிழுக்கு இனிமையினை தருபவர் போல்
தேவிக்கு அலங்காரம் செய்ய வந்தார்
பெண் :
செம்மலர் திருமகளும்
வெண்மலர் கலைமகளும்
தம்மலர் கரம் செய்த
புண்ணியம் இதுவென்று
செம்மஞ்சு வண்ணத்தை தீட்டினார்….
பெண் :
காமன் முன் வளையாத
ஈசனை வளைத்ததால்
கை வளை போடலுற்றாள்
நக்கீரனுடன் ஈசன் வாதாட வைத்திட்ட
கூந்தலில் தைலமிட்டார்
தேவி கூந்தலில் தைலமிட்டார்….
பெண் :
அண்டமெனும் ஆடைதனை
கொண்டவளின் மேனிதனில்
பட்டாடைகள் பூட்டினார்
சக்தியுடன் சிவமின்று
ஒன்றாக வேண்டுமென்று
ஒட்டியாணம் மாட்டினார்
நத்துமடியார்க் அருள் நித்தமும் புரிவதால்
நத்தினை பூட்டுகின்றார்
பெண் :
தோடுடைய செவியன் என
ஞானசம்பந்தர் பாடிடவே
தோடினை மாட்டுகின்றார்
குங்கும் திருநீற்றில் சங்கமம் என்பதனை
பிறை நெற்றியில் காட்டினார்
பெண் :
நவக் கோள்களும் இவளின்
ஆணை வழி நிற்குமென
நவரத்தினம் மகுடம் சூட்டினார்
கருணை மிகும் திருஷ்டியால்
உயிர் காக்கும் தேவிக்கு
திருஷ்டி பொட்டும் வைக்கிறார்
ஆண் :
மங்கல சடங்கினை தொடங்கிட ப்ரம்மனும்
மஞ்சளில் பிள்ளையார் வைக்கின்றார்
நானே இருக்கையில் ஏனிந்த மஞ்சளென
தானே விநாயகர் அமர்ந்து விட்டார்
பெண்கள் :
அங்கயற்கண்ணி வருக
எங்கள் மங்கல செல்வி வருக
ஆலவாய் அழகன் காணவே வல்ல
அன்னை மீனாட்சி வருக வருக நீ வருக….
பெண் :
மணம் புரியும் முன் கண்ணாடியில் நீ
தன் முகம் ஓர் முறை பார்த்திடம்மா
மணந்த பின் கணவரின் முகமன்றி
மங்கைக்கு வேறெதுவும் தெரியக்கூடாதம்மா
பெண் :
தமையனார் முன்னின்று தங்கையின் திருமணம்
நடத்திடல் முறையல்லவா
என்றே தேவி வினவுகிறாள்
என்பதை அயனும் உணருகிறார்
ஆண் :
தங்கையின் திருக்கரம் பற்றியே திருமால்
மணவறை வலம் வந்தார்
மணவறை வலம் வந்தார்…..
மங்கையும் ஈசனும் யோகமும் போகமும்
சேர்ந்ததென அம்ர்த்தி வைத்தார்
சேர்ந்ததென அம்ர்த்தி வைத்தார்
பெண் :
பேரழகு ரூபமெனும் சோமசுந்தரர் வடிவை
காணவே தேவி இவள் தவித்தாள்
ஓர் முறை கண்டாலும் போதுமே சபைதன்னில்
எவ்விதம் காண்பதென நினைத்தாள்
ஆண் :
அம்பிகையின் நிலையை ஐயன் உணர்ந்தே
தானே முதலில் கண்டார்
பெண் :
ஆவல் பெருகிட நாணம் உடைபட
அம்பிகையும் கண்டாள்
அற்புதம் இதுவென சொற்பதம் கடந்த
சுந்தரனை கண்டாள்…..
இருவர் :
தங்கையின் திருக்கரம் மைத்துனன் கரத்தில்
திருமால் எடுத்து வைத்தார்
தாரை வார்த்தேன் என்றே தங்கையை
கன்னிகாதானம் செய்தார்
அனைவரும் :
நித்திய சுமங்கலி கல்யாணி
புவி மகிழ்ந்திட புது மணம் பெறுகின்றாள்
நாரதமுனி முதல் யாவருமே
அந்த மாங்கல்யம் தொட்டு போற்றுகின்றார்
அனைவரும் :
அண்டம் அனைத்தையும் ஈன்றவள் ஆயினும்
கன்னியென பெயர் கொண்டவள்
கழுத்தில் ஈசன் மாங்கல்யம் பூட்டினார்
திருமாங்கல்யம் பூட்டினார்…….
Meenakshi Kalyana - English Lyrics
Music Director :
M. S. Vishwanathan
Lyricist :
K. P. Arivanantham
Male :
Meenatchi kalayana vaibogame
Soma sundresarar varugindra manakolame
Vedhangal kanathapaahnagal povi meethi
Thaanaga varaseitha kaameshvari
Thaanaga varaseitha kaameshvari….
Meenatchi kalayana vaibogame
Male :
Devargal thalaivan indiran
Kaalanji Konde Pneer thelithidave
Thee enna erikkum agni devane
Dhubam kaati nerungidave
Male :
Thendralin sugamithuத endrida yavum
Allavattamathai veesidave
Maariyai vazhangum varuna devan
Manamalr thattai endhidave
Male :
Aruvurvamaanavan thiru muruga dharisanam
Niruthiyum kannadi kaatidave
Eesanan ennum Vadakizhagthiban
Maapillai seethanam thaagidave
Male :
Aandi alla ivar arasarkkuarasar ena
Kuberan avan nithi veesidave
kaalanum kaavalanaaga asthathik kavalar
Yaavarum pani seithaar
Kaavalar yaavarum pani seithaar..
Male :
Meenatchi kalayana vaibogame
Male :
Gundotharan inthe ulagathin kudaiyan
Iraivanukke indru kudai thaanginaan
Agathiyanaana thamizh Kumbarani pooran
Kumbathai kaati Ethir konde paninthaan
Female :
Amizhthukku suvaithannau serpavarpol
Azhagukku azhaginaiseiya vanthaaar
Thamizhukku inimaiinaitharuvathu pol
Devikku alangaaran seiya vanthaar
Female :
Semmalar thirumagalum
Venmalar kalaimagalum
Thammalar karam seitha
Punniyam ithuvendru
Semanju vaanathai theetinaar
Female :
Kaaman mun valaiyaatha
Eesanai valaithaal
Kai vala podaluttraal
Nakiranudan eesan vaathaada vaithitta
Koonthalil thailam mittaar
Devi koonthalil thailamittaar
Female :
Andam enaum adaithanai
Kondavalin aadaithanil
Pattadaigal pootinaar
Shakthiyudan sivammindru
Ondraaga vendummendru
Ottiyanam maatinaar
Nathummadiyarga arul nithamum purivathaal
Nathinai pootukindraar
Female :
Thodudayaseviyan en
Gnanasamnthar paadidave
Thodinai maatukindraar
Kungum thiruneetril sanganam enpathanai
Pirai netriyil kaatinaar
Female :
Nava kolagalum ivalin
Aanai vazhi nirukumena
Navarathinam magudam soodinaar
Karunai migum dhrishtiyaal
Uyir kaakum devikku
Dhrustti pottum vaikuraar
Male :
Mangala sadanginai thodankida brammanum
Mnajalil pillaiyaar vaikindraar
Naane irukayil yaen intha manjalena
Thaane vinayakar amarnthu vittar
Female :
Angayar kanni varuga
Engal mangal solli varuga
Aalavaai azhagan kaanve valla
Annai meenatchi varuga varuga nee varuga
Female :
Manam puriyum munkannaadiyil nee
Than mugam ormurai paarthidamma
Mananthapin kanavarin mugamandri
Mangaikku verethuvum theriyakoodathamma
Female :
Thamayanar munnindru thangaiyin thirumanam
Nadathidal muraiyallava
Endre devi vinavugindraal
Enbathai aiyanum unarukindraar
Male :
Thangayin Thirukaram patriye thirumaal
Manavarai valam vanthaar
Manavarai valam vanthaar
Mangaiyum eesanum yogamum bogamum pole
Sernthathen amarthi vaithaar
Sernthathen amarthi vaithaar
Female :
Perazhagu roobammenum somasundrara vadivai
Kaanave devi ival thavithaal
Ormurai kandalum podhume sabaithannile
Evitham kanbathena ninaithaal
Male :
Ambikayin nilaiyai iyan unarnthe
Thaane mudhalil kandaar
Female :
Aaval perukida naanam udaipada
Ambikaiyum kandaal
Arputham ithuvena sorpatham kadantha
Suntharanai kandaal…..
Both :
Thangaiyin thirukaram maithunan karathil
Thirumaal eduthu vaithaaar
Thaarai vaarthen Endre thangaiyai
Knnikaadhanam seithaar
All :
Nithiya sumangali kalyaani
Puli magizhnthida pudhumanam perukindra
Naaratha muni mudhal yavarume
Antha maangalyam thottu pottrukindraar
All :
Andam anaithaiyum eendraval aayinum
Kanniyena peyarkondaval
Kazhuthil eesvaran maangalyam pootinaar
Thiru maangaliyam pootinaar…….