Netriyil Pottittu - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று
நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று
ஆண் :
எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு
புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள் ஆஹாஹா
எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு
புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள்
ஆண் :
நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று …
பெண் :
{பிள்ளை முகம் பாலூறுது
கிள்ளை மொழி தேனூறுது முல்லைப்பூ சிரிக்கும்
முகம் வெட்கத்தால் சிவக்கும்
வஞ்சிக்கொடி வா இப்படி மாப்பிள்ளை கையைப்பிடி
என்னம்மா நடிப்பு நெஞ்சில் இன்பத்தின் துடிப்பு} (2)
ஆண் :
{அப்பாவும் நீயும் பூமாலை சூடும்
கல்யாணம் நான் பார்க்கவில்லை
இப்போது பார்த்தேன் கண்ணீரை வார்த்தேன்
என் நெஞ்சில் ஆனந்த எல்லை} (2)
ஆண் :
கரமும் கரமும் இணைய
நரையும் திரையும் மறைய
நலமும் வளமும் நிறைய நடந்திடும்
திருமணம் ஆஹாஹா
ஆண் :
சூடாமணி சிந்தாமணி
பாலும் பழம் கொண்டாங்கடி
முதல் நாள் இரவு ரெண்டு மனம் போல் உறவு
முந்தானையில் கட்டிக்கணும்
எந்நேரமும் ஒட்டிக்கணும்
மகளே சமத்து நான் சொல்லவா உனக்கு
பெண் :
கண்ணான கண்ணே
கல்யாணப் பெண்ணே
எந்நாளும் மங்காத பொன்னே
நூறாண்டு காலம் நீ காண வேண்டும்
மாறாது செந்தூரக் கோலம்
ஆண் :
ஹோ அடடா கவனம் கவனம்
அளவா பெறணும் பெறணும்
அறியாப் பருவம் பருவம்
அனுபவம் புதியது புதியது
இருவர் :
நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று…..
Netriyil Pottittu - English Lyrics
Female :
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru
Male :
Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhgu
Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal aahaahaa
Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhagu
Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal
Female :
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru
Female :
{Pillai mugam paalooruthu
Killai mozhi thaenooruthu mullai poo sirikkum
Mugam vetkkaththaal sivakkum
Vanjikkodi vaa ippadi maappillai kaiyaip pidi
Ennammaa nadippu nenjil inbaththin thudippu}(2)
Male :
Appavum neeyum poomaalai soodum
Kalyaanam naan parkkavillai
Ippothu paarthaen kanneerai vaarththaen
En nenjil aanantha ellai} (2)
Male :
Karamum karamum iniya
Naraiyum thiraiyum maraiya
Nalamum valamum niraiya nadanthidum
Thirumanam Aahaahaa
Male :
Soodaamani sinthaamani
Paalum pazham kondaangadi
Mudhal naal iravu rendu manam pol uravu
Munthaanaiyil kattikanum
Enneramum ottikkanum
Magalae samththu naan sollava unakku
Female :
Kannaana kannae
Kalyaanae pennae
Ennaalum mangaatha pennae
Nooraandu kaalam nee kaana vendum
Maaraathu senthoorra kolam
Male :
Ho adadaa kavanam kavanam
alavaa peranum peranum
Ariyaa paruvam paruvam
Anupavam pudhiyathu pudhiyathu
Both :
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru…