Pothumada Sami Ponnu - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர்
:
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
தேவியடி மாரியம்மா
சிரிப்பா சிரிக்கிறியே……!
என்னை சிரிப்பா சிரிக்க வைத்து
சிலையா நிக்கிறியே….!
பெண் :
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
பெண் :
நாதியில்லா பூமி
இது நன்மையில்லா நாடு
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
பெண் :
நாதியில்லா பூமி
இது நன்மையில்லா நாடு…..
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
பெண் :
பசித்தபோது சோறெடுத்துக்
கொடுத்த கையைக்
கடித்துப் பார்க்கும் ஜனங்களே
பெண் :
பதுங்கிப் பாயும் மிருகமெல்லாம்
உங்களோடு
பிறந்து வந்த இனங்களே
பெண் :
பசித்தபோது சோறெடுத்துக்
கொடுத்த கையைக்
கடித்துப் பார்க்கும் ஜனங்களே
பெண் :
பதுங்கிப் பாயும் மிருகமெல்லாம்
உங்களோடு
பிறந்து வந்த இனங்களே
பெண் :
பூஜை செய்வீரே
பெண்ணை தேவி என்பீரே
வாழ்வில்லாத பெண்ணினத்தைப்
பாவி என்பீரே
பெண் :
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
பெண் :
இடமில்லாமல் கோயில் கட்டி
மடங்கள் கட்டி
குளங்கள் வெட்டிப் போடுங்கள்
பெண் :
இரண்டு கையில்
விளக்கெடுத்து
இரக்கமென்றால் என்னவென்று தேடுங்கள்
பெண் :
இடமில்லாமல் கோயில் கட்டி
மடங்கள் கட்டி
குளங்கள் வெட்டிப் போடுங்கள்
பெண் :
இரண்டு கையில்
விளக்கெடுத்து
இரக்கமென்றால் என்னவென்று தேடுங்கள்
பெண் :
கண்ணை வைத்தானே இரண்டு
கையை வைத்தானே – அவன்
மனசை மட்டும் எடுத்து வைக்க
மறந்து விட்டானே…………
பெண் :
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
பெண் :
அந்தக் காலம் பக்தனுக்கு
வந்து வந்து காட்சி தந்த கடவுளே
பெண் :
இந்தக் காலம் நீங்களெல்லாம்
இருக்குமிடம் எங்களுக்குத் தெரியல்ல
பெண் :
அந்தக் காலம் பக்தனுக்கு
வந்து வந்து காட்சி தந்த கடவுளே
பெண் :
இந்தக் காலம் நீங்களெல்லாம்
இருக்குமிடம் எங்களுக்குத் தெரியல்ல
பெண் :
கல்லைத்தான் கண்டோம் வெறும்
செம்பைத்தான் கண்டோம் – இரு
கண் திறந்து பெண்ணைப் பார்க்கும்
கருணையைக் காணோம்
பெண் :
போதுமடா சாமி
பொண்ணுப்பட்ட பாடு
பெண் :
இறைவனுக்கே கண் கொடுத்தான்
எங்களைப்போல் மனிதனான கண்ணப்பா
பெண் :
மனிதனுக்குக் கண் கொடுக்க
இறைவனாலும் முடியலையே ஏனப்பா
பெண் :
சாத்திரம் பொய்யோ
கேட்ட சரித்திரம் பொய்யோ
நாங்கள் ஆத்திரத்தில் படைத்துக் கொண்ட
ஆண்டவன் பொய்யோ
Pothumada Sami Ponnu - English Lyrics
Female :
Theviyadi mariyamma
Sirippa sirikkiraaye
Ennai sirippaa sirikka vaikka
Silaiya nikkiriye
Female :
Pothumada sami
Ponnupatta paadu
Pothumada sami
Ponnupatta paadu
Female :
Naathiyillaa boomi
Ithu nanmaiyilla naadu
Pothumada sami
Ponnupatta paadu
Female :
Naathiyillaa boomi
Ithu nanmaiyilla naadu
Pothumada sami
Ponnupatta paadu
Female :
Pasithapothu soreduthu
Kodutha kaiyai
Kadithu paarkum janangale
Female :
Pathungi paayum
Mirugamellaam ungalodu
Piranthu vantha inangale
Female :
Pasithapothu soreduthu
Kodutha kaiyai
Kadithu paarkum janangale
Female :
Pathungi paayum
Mirugamellaam ungalodu
Piranthu vantha inangale
Female :
Poojai seiveere
Pennai thevi enbeere
Vaazhvillaatha penninathai
Paavi enbeere
Female :
Pothumada sami
Ponnupatta paadu
Female :
Idamillamal koyil katti
Madangal katti
Kulangal vetti podungal
Female :
Irandu kaiyil vilakkeduthu
Irakkamendraal
Ennavendru thedungal
Female :
Idamillamal koyil katti
Madangal katti
Kulangal vetti podungal
Female :
Irandu kaiyil vilakkeduthu
Irakkamendraal
Ennavendru thedungal
Female :
Kannai vaithaane irandu
Kaiyai vaithaane
Avan manasai mattum eduthu vaikka
Maranthu vittaane
Female :
Pothumada sami
Ponnupatta paadu
Female :
Antha kaalam bakthanuku
Vanthu vanthu kaatchi thantha
Kadavule
Female :
Intha kaalam neengalellam
Irukkumidam engalukku
Theriyala
Female :
Antha kaalam bakthanuku
Vanthu vanthu kaatchi thantha
Kadavule
Female :
Intha kaalam neengalellam
Irukkumidam engalukku
Theriyala
Female :
Pothumada sami
Ponnupatta paadu
Female :
Kallaithaan kandom verum
Sembaithaan kandom iru
Kan thiranthu pennai paarkum
Karunaiyai kaanom
Female :
Iraivanukke kan koduthaan
Engalaipol manithanaana
Kannappa
Female :
Manithanukku kan kodukka
Iraivanaalum mudiyalaiye
Yenappaa
Female :
Saathiram poyyo..
Ketta sarithiram poyyo..
Naangal aathirathil padaithukonda
Aandavan poyyo..