Tamil Lyrics

Raja Raja Maha Raja Veeraprathaaban song lyrics

Movie — Navarathri

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan, S. C. Krishnan

Lyricist — Sankaradas Swamigal

Music Director — K. V. Mahadevan

Raja Raja Maha Raja Veeraprathaaban - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

ஆண் :
ராஜ ராஜ மகா…..
ராஜ தீர பிரதாபன்
வந்தேனே……ஏ……ஏ…….ஏ…….
வந்தேனே…..ஏ…….
வந்தேனே… ஏ……ஏ…….ஓ…….
வந்தேனே…..ஏ…….
ஆமா…

ஆண் :
ரஜாதி ராஜ மகா
ராஜ தீர பிரதாப
ரஜாதி ராஜ மகா
ராஜ தீர பிரதாப
ரஜாதி ராஜன் வந்தேனே
வந்தேன் ஐயா
வந்தனம் தந்தேன் ஐயா
வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேன் ஐயா
வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேன் ஐயா

ஆண் :
தஜ்ஜோம் தக ஜோம்
தக திகு தித் தோம்
திகி தோம் திகி தக
தத்தளாங்கு தக
திகி தக திகி தக
கிட தக கிட தக ஜுணு தக ஜுணு தக
தத்தித் தகஜுணு தா
தகதித் தகஜுணு தா
தளாங்கு தகஜுணு தா ஆ…..ஆ……அஆ…

ஆண் :
சபையோர்களே பெரியோர்களே
இன்றைய கூத்திலே
சொற்குற்றம் பொருட் குற்றம்
எக் குற்றம் இருப்பினும்
குற்றத்தை மன்னித்து
குணத்தை மட்டும் கொள்ளும் படியாக
மிகத் தாழ்மையுடன்
மண்டியிட்டு தண்டலிட்டு கேட்டுக் கொள்கிறேன்
வர சொல்லு வர சொல்லு

பெண் :
தங்க சரிகச் சேல…….ஏ…
எங்கும் பள பளக்க……ஏ…
வந்தேனே……

ஆண் :
ஏ வந்தேனே……ஏ…..ஏ….
ஏ வந்தேனே……ஏ…..ஏ….

பெண் :
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தனியாளா வந்தேன் ஐயா
வந்தேன் ஐயா
வந்தனம் தந்தேனையா
வந்து நின்று சபைக்கு
வந்தனம் தந்தேனையா

ஆண் :
ஸ்வாமி வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேனையா

பெண் :
தங்க சரிகச் சேல

ஆண் :
எங்கும் பள பளக்க

பெண் :
தங்க சரிகச் சேல

ஆண் :
எங்கும் பள பளக்க

பெண் :
தங்க சரிகச் சேல

ஆண் :
எங்கும் பள பளக்க

பெண் :
தங்க சரிகச் சேல

ஆண் :
எங்கும் பள பளக்க
தஜ்ஜோம் தக ஜோம் தக திமி

பெண் :
தித் தோம் திகி தோம்
திகி தக

ஆண் :
தத் தளாங்கு தக
திமி தக திமி தக

பெண் :
கிட தக கிட தக

ஆண் :
ஜுணு தக ஜுணு தக

இருவர் :
தத்தித் தகஜுணு தா
தகதித் தகஜுணு தா
தளாங்கு தகஜுணு தா… ஆ… ஆ…

பெண் :
அதாகப் பட்டது
மதுராபுரி மன்னன் அஸ்வபதி மகள்
சாவித்திரியாகிய யான்
எனக்கு உரிமையான
இந்த சொந்த நந்த வனத்திலே
உலாவி வரும் காலையிலே
காட்டு ராஜன் என சொல்லக் கூடிய
சிங்கமாகப்பட்டது
என்னை வெரட்டி தொரத்தி
மெரட்டி வருகையிலே
வீர புருஷனாகப்பட்டவர்
வந்து நின்று அதைக் கொன்று
பின் சென்று விட்டாரே
அவன் யாராக இருக்கலாம்
நல்லது தேடி வருவோம்

பெண் :
ஆஹா இவரேதான்
அந்த மஹானுபாவர்
அடடா இவர் உறங்கும் போதே
இத்தனை அழகென்றால்
விழித்தெழுந்தால் ஹையோ…
இவர் யாராக இருக்கலாம்

பெண் :
அண்டர் தொழும் மாரனோ

ஆண் :
நோ…

பெண் :
தண்டுளப வண்ணலோ

ஆண் :
லோ…

பெண் :
அன்பு ரதி என்றும் மகிழ்
இன்ப மதனோ

ஆண் :
ஓ மதனோ…

பெண் :
இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இவனைக் கண்ட உடன் என் உள்ளம் மகிழுதே
பருவத்தான்…

இருவர் :
ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஅ…..

பெண் :
நாம் இங்கு நின்று
இந்த யுகம் முழுவதையும் வர்ணித்தாலும்
இவர் அங்கத்தில் ஒரு பாகத்தைக் கூட
வர்ணிக்க முடியாது போல் இருக்கிறது
நல்லது அருகில் சென்று
உறக்கத்தில் இருந்து நீக்குவோம்

ஆண் :
ஆஹா… நான் காண்பதென்ன கனவா
இல்லை நனவா
எனது கண்ணெதிரே நிற்பது
மண்ணுலக மங்கையா அல்லது
விண்ணுலக நங்கையா
என்ன அழகு என்ன அழகு
இவளது இடை அழகும் நடை அழகும்
உடை அழகும்
இவளது கண்ணழகும் கட்டழகும்
பொட்டழகும்
எனது நெஞ்சை விட்டகலா நிற்கிறதே
இவள் யாராக இருக்கக் கூடும்… ஹா ஹா

ஆண் :
ஊர்வசியும் இவள் தானோ
ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
ஊர்வசியும் இவள் தானோ
ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ

குழு :
ஐயா பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ

ஆண் :
இவள் ஊர்தான் எது பேர்தான் எது
யார்தான் அறிவார் தானது
உன்னதமாகவே வந்தாள் வந்து நின்றாள்
நெஞ்சில் உவகை பெற காட்சி தந்தாள்

ஆண் :
ஆஹா ஆயிரம் நாவை படைத்த
அந்த ஆதிசேஷனாலும் இவள் அழகை
வர்ணிக்க முடியாதென்றால்
கேவலம் ஏக நாவை படைத்த
நம்மால் எப்படி முடியும்
அருகிலே சென்று
யார் என்று விசாரிப்போம்

ஆண் :
நாரீ மணியே

பெண் :
ஸ்வாமி…

ஆண் :
அதாகப்பட்டது தென்றல் வீசும் இந்த
உத்யான வனத்திலே
என்னை மறந்து நான்
உறங்கிக் கொண்டிருக்கும் காலையிலே
அதாகப்பட்டது
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
என்று சொல்லக் கூடிய
அந்த நான்கு விதமான
பெண்களுக்குரிய குணங்களை விட்டு
நீ என் அருகிலே வந்து
நின்று என்னை தொட்டு

ஆண் :
ஏனோ எனை எழுப்பலானாய்
மட மானே மட மானே
எனக்கதனை உரைக்க வேணும்
இசைந்து கேட்பேன் நானே ஏ நானே

பெண் :
சிங்கத்தால்

ஆண் :
சிங்கத்தால்

பெண் :
சிங்கத்தால் நான் அடைந்த
துன்பம் தீர்த்ததாலே
செய்த நன்றி எண்ணி வந்தேன்
சேர்ந்த அன்பினாலே

ஆண் :
எந்த ஊரோ இருப்பதேது பேர்
யார் தந்தை
என்றெனக்கு நீ உரைத்தால்
இன்பம் கொள்ளும் சிந்தை

பெண் :
அழகிய மதுராபுரி
அஷ்வபதி புத்ரி

ஆண் :
புத்ரி

பெண் :
அக்கம் பக்கத்தோர்கள் என்னை
அழைக்கும் பெயர் சாவித்ரி

ஆண் :
சாவித்ரி
இன்னும் மணம் ஆனதோ ஓஹோ…
இன்னும் மணம் ஆனதோ
இல்லையோ சொல்லு
இச்சை கொண்டேன் கேட்பதற்கு
லஜ்ஜையும் ஆகாது

பெண் :
சொல்ல வெக்கம் ஆகுதே…

ஆண் :
ஓஹோ…

பெண் :
சொல்ல வெக்கம் ஆகுதே
இன்னும் மணம் இல்லை
சொந்தமான தந்தை தாயார்
எண்ணிடவும் இல்லை

ஆண் :
இல்லை

பெண் :
இதாகப்பட்டது பிரபோ

ஆண் :
பெண்பாவாய்

பெண் :
என் திருமணத்தைப் பற்றி
என் தாய் தந்தையர்கள்
நினைக்கவும் இல்லை
நானும் நேற்று வரை அதைப் பற்றி
சிந்திக்கவும் இல்லை

ஆண் :
இன்றென்னவோ

பெண் :
அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா
ஸ்வாமி…

ஆண் :
ஹா ஹா

ஆண் :
ரூப சித்திர மாமரக் குயிலே
உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட
நாடி நிற்கிறதா
அன்பினால் இன்பமாய் இங்கு வா

பெண் :
அட்டில் ஏது இதோ கிட்டி வாரேன்

ஆண் :
பித்தமானேன் சமீபத்தில் நீ வா

பெண் :
மன்னா என் ஆசை மறந்தீடாதீர்

ஆண் :
உன்னாசை நானும் மறப்பதில்லை

பெண் :
ஹையோ மன்னா என் ஆசை மறந்தீடாதீர்

ஆண் :
சகி உன்னாசை நானும் மறப்பதில்லை

பெண் :
மறந்தீடாதீர்

ஆண் :
மறப்பதில்லை

பெண் :
மறந்தீடாதீர்

ஆண் :
மறப்பதில்லை

Raja Raja Maha Raja Veeraprathaaban - English Lyrics

Male :

Raaja raaja mahaa…

Raaja dheera praadhaban

Vandhenae…ae…ae….ae…

Vandhenae… ae…

Vandhenae… ae… ae… oo…

Vandhenae… ae…

Aamaa…

Male :

Raajaadhi raaja mahaa

Raaja dheera pradhaaba

Raajaadhi raaja mahaa

Raaja dheera pradhaaba

Raajaadhi raajan vandhenae

Vandhen aiyaa

Vandhanam thandhen aiyaa

Vandhu ninnu sabaikku

Vandhanam thandhen aiyaa

Vandhu ninnu sabaikku

Vandhanam thandhen aiyaa

Male :

Thajjom thaga jom

Thagha thighu thom

Thighi thom thighi thagha

Thatthalaanghu thagha

Thighi thagha thighi thagha

Kida thagha kida thagha junu thagha junu thagha

Thatthit thaghajunu thaa

Thaghathit thaghajunu thaa

Thalaanghu thaghajunu thaa aa…aa….aaa….

Male :

Sabaiyorgalae periyorgalae

Indraiya koothilae

Sor kuttram poru kuttram

Ek kuttram iruppinum

Kuttratthai mannithu

Gunathai mattum kollum padiyaaga

Migha thaazhmaiyudan

Mandiyittu dhandalittu kettuk kolgiren

Vara sollu vara sollu

Female :

Thanga sariga chaela… ae..

Engum pala palakka… .ae…ae….ae…ae…

Vandhenae…

Male :

Ae vandhenae… ae.. ae…

Ae vandhenae… ae.. ae…

Female :

Thanga sariga chaela…

Engum pala palakka

Thanga sariga chaela…

Engum pala palakka

Thaniyaalaa vandhen aiyaa

Vandhen aiyaa

Vandhanam thandhen aiyaa

Vandhu nindru sabaikku

Vandhanam thandhenaiyaa

Male :

Swaami vandhu ninnu sabaikku

Vandhanam thandhenaiyaa

Female :

Thanga sariga chaela

Male :

Engum pala palakka

Female :

Thanga sariga chaela

Male :

Engum pala palakka

Female :

Thanga sariga chaela

Male :

Engum pala palakka

Female :

Thanga sariga chaela

Male :

Engum pala palakka

Thajjom thagha jom thagha dhimi

Female :

Dhit thom dhighi thom

Dhighi thagha

Male :

That thalaanghu thagha

Dhimi thadha dhimi thagha

Female :

Kida thagha kida thagha

Male :

Junu thagha junu thagha

Both :

Thatthit thaghajunu thaa

Thaghathit thaghajunu thaa

Thalaanghu thaghajunu thaa aa… aa… aa…

Female :

Adhaagappattadhu

Madhuraapuri mannan aswapathi magal

Saavithriyaagiya yaan

Enakku urimaiyaana

Indha sondha nandha vanathilae

Ulaavi varu kaalaiyilae

Kaattu raajan ena solla koodiya

Singamaagappattadhu

Enna veratti thorathi

Meratti varugaiyilae

Veera purushanaagappattavar

Vandhu nindru adhai kondru

Pin sendru vittaarae

Avan yaaraaga irukkalaam

Nalladhu thaedi varuvom

Female :

Aahaa ivarae thaan

Andha magaanubaavar

Adadaa ivar urangum podhae

Ithanai azhagendraal

Vizhithezhundhaal haiyo…

Ivar yaaraaga irukkalaam

Female :

Andar thozhum maarano

Male :

No…

Female :

Thandulaba vannalo

Male :

Lo…

Female :

Anbu radhi endrum maghizh

Inba madhano

Male :

O madhano…

Female :

Ilam paruvathaan nalla uruvathaan

Naanum virumba thaan eesan tharuvithaan

Ilam paruvathaan nalla uruvathaan

Naanum virumba thaan eesan tharuvithaan

Ivanai kanda udan en ullam maghizhudhae

Paruvathaan…

Both :

Aa…aaa….aaa….aaa…aaa….

Female :

Naam ingu nindru

Indha yugam muzhuvadhaiyum varnithaalum

Ivar angathil oru baagathai kooda

Varnikka mudiyaadhu pol irukkiradhu

Nalladhu arugil sendru

Urakkatthil irundhu neekkuvom

Male :

Aahaa… naan kaanbadhenna kanavaa

Illai nanavaa

Enadhu kannedhirae nirpadhu

Mannulaga mangaiyaa alladhu

Vinnulaga nangaiyaa

Enna azhagu enna azhagu

Ivaladhu idai azhagum nadai azhagum

Udai azhagum

Ivaladhu kannazhagum kattazhagum

Pottazhagum

Enadhu nenjai vittagalaa nirkkiradhae

Ival yaaraaga irukka koodum… haa… haa…

Male :

Oorvasiyum ival thaano

Rambai thaano radhi thaano

Bramman ulagai vella padaithaano

Oorvasiyum ival thaano

Rambai thaano radhi thaano

Bramman ulagai vella padaithaano

Chorus :

Aiyaa bramman ulagai vella padaithaano

Male :

Ival oor thaan yedhu paer thaan yedhu

Yaar thaan arivaar thaanadhu

Unnadhamaagavae vandhaal vandhu nindraal

Nenjil uvagai pera kaatchi thandhaal

Male :

Aahaa aayiram naavai padaitha

Andha aadhi saeshanaalum ival azhagai

Varnikka mudiyaadhendraal

Kaevalam yaega naavai padaitha

Nammaal eppadi mudiyum

Arugil sendru yaar yendru visaarippom

Male :

Naaree maniyae

Female :

Swaami…

Male :

Adhaagappattadhu thendral veesum indha

Udhyaana vanathilae

Ennai marandhu naan

Urangi kondirukkum kaalaiyilae

Adhaagappattadhu

Acham madam naanam payirppu

Endru sollak koodiya

Andha naangu vidhamaana

Pengalukkuriya gunangalai vittu

Nee en arugilae vandhu

Nindru ennai thottu

Male :

Yaeno enai ezhuppal aanaai

Mada maanae mada maanae

Enakkadhanai uraikka venum

Isaindhu ketppen naanae yae naanae

Female :

Singathaal

Male :

Singathaal

Female :

Singathaal naan adaindha

Thunbam theerthadhaalae

Seidha nandri enni vandhen

Saerndha anbaalae

Male :

Endha ooro iruppadhaedhu paer

Yaar thandhai

Endrenakku nee uraithaal

Inbam kollum sindhai

Female :

Azhaghiya madhuraapuri

Ashvapathi puthri

Male :

Puthri

Female :

Akkam pakkatthorgal ennai

Azhaikkum peyar saavithri

Male :

Saavithri

Innum manam aanadho oho…

Innum manam aanadho

Illaiyo sollu

Ichai konden ketpadharkku

Lajjaiyum aagaadhu

Female :

Solla vekkam aagudhae…

Male :

Oho…

Female :

Solla vekkam aagudhae

Innum manam illai

Sondhamaana thandhai thaayaar

Ennidavum illai

Male :

Illai

Female :

Idhaagappattadhu prabo

Male :

Penpaavaai

Female :

En thirumanathai pattri

En thaai thandhaiyargal

Ninaikkavum illai

Naanum naettru varai adhai pattri

Sindhikkavum illai

Male :

Indrennavo

Female :

Adhai naan solli theriya vendumaa

Swaami…

Male :

Haa haa

Male :

Rooba chithira maamara kuyilae

Unakkoru vaasagathinai naan uraithida

Naadi nirkkiradhaa

Anbinaal inbamaai ingu vaa

Female :

Attil yaedhu idho kitti vaaren

Male :

Pithamaanen sameebathil nee vaa

Female :

Mannaa en aasai marandhidaadheer

Male :

Unnasai naanum marappadhillai

Female :

Haiyo mannaa en aasai marandhidaadheer

Male :

Sagi unnasai naanum marappadhillai

Female :

Marandhidaadheer

Male :

Marappadhillai

Female :

Marandhidaadheer

Male :

Marappadhillai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raja Raja Maha Raja Veeraprathaaban

Which movie does the song Raja Raja Maha Raja Veeraprathaaban belong to?

The song Raja Raja Maha Raja Veeraprathaaban is from the movie Navarathri.

Who is the music director of Raja Raja Maha Raja Veeraprathaaban?

The music for Raja Raja Maha Raja Veeraprathaaban is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Raja Raja Maha Raja Veeraprathaaban?

The lyrics for Raja Raja Maha Raja Veeraprathaaban are penned by Sankaradas Swamigal.

Who sang the Raja Raja Maha Raja Veeraprathaaban song?

Raja Raja Maha Raja Veeraprathaaban is sung by P. Susheela, T. M. Soundararajan, S. C. Krishnan.

Related Songs