Santhosham Kaanaadha Female - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ….
பெண் :
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்துவிட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
குழு :
ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ….
பெண் :
ஊருக்கு சிந்தும் வான் மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பெண் :
பகல் வந்தபோது வெளிச்சம் உண்டு
இருள் வந்தபோது விளக்கு உண்டு
எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு
பெண் :
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
குழு :
……………………………………
பெண் :
கல்லினில் வாழும் தேரையும் கூட
கண்களில் நீரை வடிக்கவில்லை
காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம்
நாளையை எண்ணி நடுக்கமில்லை
பெண் :
ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன
ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன
மதிக் கொண்டதாலே மயக்கமென்ன
பெண் :
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்துவிட்டால்
பெண் :
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா….
Santhosham Kaanaadha Female - English Lyrics
Chorus :
Aaa…..aaa….aa….aa….aa….
Aaa…..aaa….aa….aa….aa….
Female :
Santhosham kaanaatha vaazhvundaa
Sangeetham paadaatha aarunudaa
Oru thunbam vanthaal adhai inbam endru
Enni vaazhnthuvittaal
Female :
Santhosham kaanaatha vaazhvundaa
Sangeetham paadaatha aarunudaa
Chorus :
Aaa…..aaa….aa….aa….aa….
Aaa…..aaa….aa….aa….aa….
Female :
Oorukku sinthum vaan mazhai thannil
Unakkendru konjam thuligal undu
Nambikkai meedhu nambikkai kondaal
Naalaigal indrae varuvathundu
Female :
Pagal vanthapothu velichcham undu
Irul vanthapothu vilakku undu
Erumbukkum kooda sugangal undu
Female :
Santhosham kaanaatha vaazhvundaa
Chorus :
………….
Female :
Kallinil vaazhum theraiyum kooda
Kangalil neerai vadikkavillai
Kaattiil vaazhum maangalukellaam
Naalaiyai enni nadukkamillai
Female :
Aintharivellaam kalippathenna
Aararivellaam thudippathenna
madhi kondathaalae mayakkamenna
Female :
Santhosham kaanaatha vaazhvundaa
Sangeetham paadaatha aarunudaa
Oru thunbam vanthaal adhai inbam endru
Enni vaazhnthuvittaal
Female :
Santhosham kaanaatha vaazhvundaa
Sangeetham paadaatha aarunudaa….