Unnai Charanadainthen - தமிழ் பாடல் வரிகள்
நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே
விண்ணில் மழைத் துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல் மாறிவிட
விரலோரம் கவிதை ஊறியதே விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஒற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே காதல் வந்து ஒற்றை காலில்
சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே
நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
ஆண் :
உன் இதயம் நான் படிக்க கவனமாய் மாறி வந்தேன்
என் விரலில் உறைப்பனியாய் உன்னையே நான் கண்டேன்
ஏரிகள் மேலே ரெண்டு மழையாய் உறைந்திடவா
முத்தின் முகமே உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்
தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு
கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்...
Unnai Charanadainthen - English Lyrics
Male :
Naane tholaindha kadhai naan ariyen kanmaniye
Kaadhal nuzhaindha vazhi kandarivaai kaadhaliye
Vinnil mazhai thuligal minnalaai nindruvida
Mannil enadhu nizhal unnaipol maari vida
Viraloram kavithai ooriyaadhe vizhiyoram kaadhal kasigirathey
Nadhi melae oatrai kaalil mazhai aadum aanandhamaai
Kanavu oorum manasukulley kaadhal vandhu oatrai kaalil
Sutri sutri moozhgadikuthey
Naane tholaindha kadhai naan ariyen kanmaniye
Male :
Un idhayam naan padikka gavanamaai maari vandhen
En viralil uraipaniyaai unnaiye naan kanden
Erigal melae rendu mazhaiyaai urainthidavaa
Muthin mugame...
Un mugam thedi kaalaiyil veyilaagiren
Un kural thedi saalaiyil kuyilaagiren
Thervu arai muzhudhum dhevadhaiye un ninaivu
Naalai vidumuraiyaam kaadhal vadhai un pirivu
Kangal enai marandhu unnaiye thediyadhu
Suvaasam un peyarai ennulley paadiyadhu
Lesaaga sandai podavaa pesamal mutham ketkavaa
Veyil kaayum saalaiyiley mazhai thoovum aanandhamaai...