Velli Odam Pole - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் :
கன்னியின் நெஞ்சிலே மின்னி அரும்பிடும்
கற்பனைக் கனவு போலே
காரிருள் வானிலே பேரெழில் நெற்றியை
காட்டும் பிறை நிலாவே……..
பெண் :
வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
பிறர் வேதனை நீ அறியாயோ பிறை நிலாவே
பெண் :
வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே…….
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
பெண் :
வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய்
வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய்
உனை எண்ணி எண்ணி அல்லி மகள் ஏங்குகிறாள்
உன் அன்பு என்று முழுநிலவாய் வளருமோ
அவள் ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ
ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ
பெண் :
வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே…….
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
பெண் :
மங்கியதோர் புன்னகையை வீசுகிறாய்
மந்த மாருதமாய் மௌனமொழி பேசுகிறாய்
உன் பொங்கி வரும் இன்ப ஒளி தீண்டுமோ
அல்லி புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ….
புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ….
பெண் :
வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே…….
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
Velli Odam Pole - English Lyrics
Female :
Kanniyin nenjilae minni arumbidum
Karpanai kanavu polae
Kaarirul vaanilae perezhil nettriyai
Kaattum pirai nilaavae
Female :
Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Pirar vedhanai nee ariyaayo pirai nilaavae
Female :
Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Female :
Vennmugilin panjanaiyil thoongugiraai
Vennmugilin panjanaiyil thoongugiraai
Unai ennai enni allai magal yaengugiraal
Un anbu endru muzhu nilavaai valarumo
Aval aasaiyenum arumbu mugam malarumo
Aasaiyenum arumbu mugam malarumo…
Female :
Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Female :
Mangiyathor punnaigaiyai veesugiraai
Mantha maaruthamaai mounamozhi pesugiraai
Un pongi varum inba oli theendumo
Alli pudhu malaraai manam peravum thoondumo
Pudhu malaraai manam peravum thoondumo…
Female :
Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae