Vizhi Oram - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
விழி ஓரம் உந்தன் ஏக்கம்
உன்னை காண வாடும் நெஞ்சம்
எங்கு சென்றாய் வெகு தூரம்
தொலைத்தேனே உன்னை நானும்
பெண் :
தோள் சாயவே நீ இல்லையே
உனக்காகத்தானே வாழும் எந்தன் ஜீவனே
என் உயிரே
நீ இன்றி போகும் நாட்கள் இங்கு வேதனை
வா உயிரே
பெண் :
ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஹா…..
ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஹா…..
பெண் :
உன்னோடு நானும் சேர
நீ சென்ற பாதை எங்கே
காணமல் தேடி நின்றேன்
காதல் நெஞ்சே நெஞ்சே
பெண் :
கண்மூடும் நேரம் கூட
என் முன்னே உன்னை கண்டேன்
கனவோடு கவிதை ஆன
மாயம் என்ன என்ன
பெண் :
எனை விட்டு ஏன் பிரிந்தாய்
என் அன்பே
நானும் துடிகின்றேன்
நினைவோடு நான் என்றும் உயிரை
உன்னை ஏந்தி நின்றேனே
ஆண் :
ஓ நண்பா
என் நண்பா
நீயும் இல்லை
எங்கே நண்பா
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
உந்தன் நட்பே போதும் நண்பா
ஆண் :
உன் தியாகமே ஈடில்லையே
நான் செய்த பாவம்
என்னை இங்கு வாட்டுதே
என் நண்பனே
விடை இல்லா கேள்வியாக
மாறி போனதே
என் வாழ்க்கையே
ஆண் :
உயிர் போகும் நேரம்கூட
அன்பான பார்வை தந்தாய்
உன் நட்பின் ஆழத்தை நான் கண்டேன்
அங்கே அங்கே
ஆண் :
நான் செய்த துரோகம் என்னுள்
தீயாக மாறி மாறி
ஒவ்வொரு நாளும் என்னை
கொல்லுதிங்கே இங்கே
வழி தடு மாறி சென்றேன் நான்
வழியோடு வாழ்கின்றேன்
இனி எங்கு போவது நான் என்று
என்னையே கேட்கிறேன்
Vizhi Oram - English Lyrics
Female :
Vizhi oram undhan yekkam
Unnai kaana vaadum nenjam
Engu sendraai vegu dhooram
Tholaithenae unnai naanum
Female :
Thozh saayavae nee illaiyae
Unakkaagathanae vaazhum endhan jeevanae
En uyirae
Nee indri pogum naatkal ingu vedhanai
Vaa uyirae
Female :
Ah…ah…aa…aaa….haaa..
Ah…ah…aa…aaa….haaa..
Female :
Unnodu naanum sera
Nee sendra paadhai engae
Kaanamal thedi nindren
Kaadhal nenjae nenjae
Female :
Kan moodum neram kooda
En munnae unnai kanden
Kanavodu kavithai aana
Maayam enna enna
Female :
Enai vittu yen pirinthaai
En anbae
Naanum thudikindren
Ninaivodu naan endrum uyirai
Unai yendhi nindrenae
Male :
Oh nanbaa
En nanbaa
Neeyum illai
Engae nanbaa
Maru jenmam ondru irunthaal
Undhan natpae podhum nanbaa
Male :
Un thyagamae eedillaiyae
Naan seidha paavam
Ennai ingu vaattuthae
En nanbanae
Vidai illa kelviyaaga
Maari ponadhae
En vazhkaiyae
Male :
Uyir pogum neram kooda
Anbaana paarvai thadhaai
Un natpin aalathai naan
Kanden angae angae
Male :
Naan seidha dhrogam ennul
Theeyaaga maari maari
Ovvoru naalum ennai
Kolluthingae ingae
Vazhi thadu maari sendren naan
Vazhiyodu vaazhgindren
Ini engu povathu naan endru
Ennaiyae ketkindren