Tamil Lyrics

Amma Thaaye Magamayi song lyrics

Movie — Aayiram Kannudayaal

Singer(s) — P. Susheela, Vani Jairam

Lyricist — K. P. Arivanantham

Music Director — Shankar Ganesh

Amma Thaaye Magamayi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே
அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் :
மடிப்பிச்சை கேட்டேன் நானே
திருமாங்கல்யம் கிடைத்திட தானே
பனிவரை தோன்றிய தேனே
சிவன் பாதத்தில் உறைகின்ற மானே

பெண் :
அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் :
மருமகள் அழுதக் குரல்
உன் மணிச் செவிக் கேட்காதோ
என் திருமகன் உயிர் பிழைக்க
உன் அருள் வந்து வாய்க்காதோ

பெண் :
மருமகள் அழுதக் குரல்
உன் மணிச் செவிக் கேட்காதோ
என் திருமகன் உயிர் பிழைக்க
உன் அருள் வந்து வாய்க்காதோ

பெண் :
ஒரு மகன் ஈன்றவள் நானென்றால்
அடி இரு மகன் ஈன்றவள் நீயல்லவோ
ஒரு மகன் ஈன்றவள் நானென்றால்
அடி இரு மகன் ஈன்றவள் நீயல்லவோ
பாசங்கள் தாய்மைக்கு பொதுவென்றால்
அடி எனைப் போல் நீயொரு தாயல்லவோ
எனைப் போல் நீயொரு தாயல்லவோ

பெண் :
அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் :
ஆயிரம் கண்ணுடையாள்
அடி அனைத்தும் குருடாமோ
அதில் ஓரிரு கண் மலர்ந்தால்
உன் கருணைக்கு குறைவாமோ

பெண் :
ஆயிரம் கண்ணுடையாள்
அடி அனைத்தும் குருடாமோ
அதில் ஓரிரு கண் மலர்ந்தால்
உன் கருணைக்கு குறைவாமோ

பெண் :
காலனை உதைத்த பாலனை மணந்த
கோலமயில் நீயே
அன்று எட்டி உதைத்தது மெட்டிகள் அணிந்த
உன் பாதந்தான் தாயே

பெண் :
இன்று சூடிய பூவினை வாடவிடாமல்
சூலினியே அருள்க
நான் பூசிய மஞ்சளை காயவிடாமல்
பகவதியே அருள்க…….

பெண் :
அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் :
திருவண்ணாமலையினில்
உண்ணாமுலையென அமர்ந்த தயாபரியே
திருவானைக்காவினில் ஞானச் சுடர் விடும்
அகிலாண்டீஸ்வரியே

பெண் :
திருக்குற்றாலம் தனில் குழல் வாய்மொழி என
உற்ற பெரும் நிதியே
நல்ல கொடுங்கல்லூரில் கொலுவில் அமர்ந்த
வடிவே பகவதியே

பெண் :
நாமக்கல்லில் நாமகிரி
திருநெல்வேலி தனில் காந்திமதி
நாட்டரசன் கோட்டையிலே
நீ கண்ணுடைய நாயகி

பெண் :
ஆயிரம் நாமம் படைத்தவளே
ஆயிரம் கோயில் புகுந்தவளே
ஆயிரம் நாமம் படைத்தவளே
ஆயிரம் கோயில் புகுந்தவளே

பெண் :
நாயகன் உயிரைக் காப்பதற்கு
நாளும் விரதம் இருந்தவளே
நாயகன் உயிரைக் காப்பதற்கு
நாளும் விரதம் இருந்தவளே

பெண் :
உதிக்கும் கதிர் உதிக்க தடை
விதித்தவளும் பெண்தான்
எமன் பறித்த உயிர் வரித்து வினை
முடித்தவளும் பெண்தான்

பெண் :
தீயினிடை தவம் புரிந்த
நீயும் ஒரு பெண்தான்
கொண்ட நாயகனின் நலம் வேண்டும்
நானுமொரு பெண்தான்

பெண் :
கண்ணீரை நெய்யாக்கி நெஞ்சத்தை நெருப்பாக்கி
குலமாது புரிந்தேனே யாகம்
கணவன் பாவங்கள் புரிந்தாலும் சாபங்கள் இருந்தாலும்
எனை மீறி தீண்டுமோ நாகம்

பெண் :
நாகத்தின் வடிவான கருமாரியே
இங்கு நீ வந்து பொழிவாயோ அருள் மாரியே
தாயே உன் திருப்பாதம் சரணாகதி
இங்கு நீயின்றி ஏழைக்கு யார்தான் கதி…..
யார்தான் கதி….. யார்தான் கதி……

Amma Thaaye Magamayi - English Lyrics

Female :

Ammaa thaaye magamaayi

Azhuthaen thozhuthaen arul purivaayae

Ammaa thaaye magamaayi

Azhuthaen thozhuthaen arul purivaayae

Female :

Madippitchai kettaen naanae

Thiru maangalyam kidaiththida thaanae

Panivarai thondriya thaenae

Sivan paadhaththil uraigindra maanae

Female :

Ammaa thaaye magamaayi

Azhuthaen thozhuthaen arul purivaayae

Female :

Marumagal azhutha kural

Un mani sevi ketkaatho

En thirumagan uyir pizhaikka

Un arul vanthu vaaikkaatho

Female :

Marumagal azhutha kural

Un mani sevi ketkaatho

En thirumagan uyir pizhaikka

Un arul vanthu vaaikkaatho

Female :

Oru magan eendraval naanendraal

Adi Iru magan eendraval neeyallavo

Oru magan eendraval naanendraal

Adi Iru magan eendraval neeyallavo

Paasangal thaaimaikku podhuvendraal

Adi enai pol neeyoru thaayallavo

Enai pol neeyoru thaayallavo

Female :

Ammaa thaaye magamaayi

Azhuthaen thozhuthaen arul purivaayae

Female :

Aayiram kannudaiyaal

Adi anaiththum kurudaamo

Adhil ooriru kann malaranthaal

Un karunaikku kuraivaamo

Female :

Aayiram kannudaiyaal

Adi anaiththum kurudaamo

Adhil ooriru kann malaranthaal

Un karunaikku kuraivaamo

Female :

Kaalanai uddhaiththa paalanai manantha

Kolamayil neeyae

Andru etti udhaiththathu mettial anintha

Un paadhanthaan thaayae

Female :

Indru soodiya poovinai vaadavidaamal

Sooliniyae arulga

Naan poosiya manjalai kaayavidaamal

Pagavathiyae arulga

Female :

Ammaa thaaye magamaayi

Azhuthaen thozhuthaen arul purivaayae

Female :

Thiruvannaamalaiyinil

Unnaamulaiyena amarantha thayaapariyae

Thiruvaanaikkaavinil nyaana sudar vidum

Akilaandishwari

Female :

Thirukuttraalam thanil kuzhal vaaimozhi ena

Uttra perum nidhiye

Nalla kodungallooril koluvil amarantha

Vadivae bagavathiyae

Female :

Naamakkallil naamagiri

Thirunelveli thanil gandhimaddhi

Naattarasan kottaiyilae

Nee kannudaiya naayagi

Female :

Aayiram naamam padaiththavalae

Aayiram koyil pugunthavalae

Aayiram naamam padaiththavalae

Aayiram koyil pugunthavalae

Female :

Naayagan uyirai kaappatharkku

Naalum viratham irunthavalae

Naayagan uyirai kaappatharkku

Naalum viratham irunthavalae

Female :

Udhikkum kadhir udhikka thadai

Vidhiththavalum pennthaan

Eman pariththa uyir variththu vinai

Madinthavalum pennthaan

Female :

Theeyinidai thavam purintha

Neeyum oru pennthaan

Konda nayaganin nalam vendum

Naanumoru pennthaan

Female :

Kanneerai neiyaakki nenjaththai neruppaakki

Kulamaadhu purinthaenae yaagam

Kanavan paavangal purinthaalum saabangal irunthaalum

Enai meeri theendumo naagam

Female :

Naagaththin vadivaana karumaariyae

Ingu nee vanthu pozhivaayo arul maariyae

Thaayae un thiruppaatham saranaagathi

Ingu neeyindri yaezhaikku yaarthaan gathi

Yaarthaan gathi……yaarthaan gathi……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Amma Thaaye Magamayi

Which movie does the song Amma Thaaye Magamayi belong to?

The song Amma Thaaye Magamayi is from the movie Aayiram Kannudayaal.

Who is the music director of Amma Thaaye Magamayi?

The music for Amma Thaaye Magamayi is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Amma Thaaye Magamayi?

The lyrics for Amma Thaaye Magamayi are penned by K. P. Arivanantham.

Who sang the Amma Thaaye Magamayi song?

Amma Thaaye Magamayi is sung by P. Susheela, Vani Jairam.

Related Songs