Anbe En Aaramuthae Vaaraai - தமிழ் பாடல் வரிகள்
அன்பே
ஆண் :
அன்பே என் ஆரமுதே வாராய்
பெண் :
அன்பே என் ஆரமுதே வாராய்….ஆ….
இருவர் :
அன்பே என் ஆரமுதே வாராய்
ஆண் :
தென்றல் அலை மீதினிலே
திங்கள் பிறை தோணியிலே
தென்றல் அலை மீதினிலே
திங்கள் பிறை தோணியிலே
தேன்மொழியுனை அழைத்தே செல்வேனே
பெண் :
வெண்ணிலவுக் கிண்ணியிலே
என்னிதயக் காதலையே
வெண்ணிலவுக் கிண்ணியிலே
என்னிதயக் காதலையே
உண்ணும் மதுவாய் நிறைத்தே தருவேனே
பெண் :
ஆஅ…..ஆ….ஆ….
அன்பே என் ஆரமுதே வாராய்……
ஆண் :
வண்ணமிகும் வானவில்லை
பொன்னாடையாய் மடித்தே
வண்ணமிகும் வானவில்லை
பொன்னாடையாய் மடித்தே
வள்ளி உனக்கே பரிசு தருவேனே
பெண் :
கண் சிமிட்டும் தாரகையை
முல்லை மலராய் தொடுத்தே
கண் சிமிட்டும் தாரகையை
முல்லை மலராய் தொடுத்தே
காதல் மணமாலையாக அணிவேனே
ஆண் :
அன்பே என் ஆரமுதே வாராய்
ஆண் :
மின்னல் ஒளிக் கோடுகளால்
மேகமெனும் வெண்திரையில்
மின்னல் ஒளிக் கோடுகளால்
மேகமெனும் வெண்திரையில்
உன்னழகை ஓவியமாய் வரைவேனே
பெண் :
விண்ணின் மழைத் தாரைகளை
வீணை நரம்பாக்கி அதில்
விண்ணின் மழைத் தாரைகளை
வீணை நரம்பாக்கி அதில்
இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே
இருவர் :
அன்பே என் ஆரமுதே வாராய்….ஆ…ஆ….
அன்பே என் ஆரமுதே வாராய்
Anbe En Aaramuthae Vaaraai - English Lyrics
Female :
Anbae
Male :
Anbae en aaramuthae vaarai
Female :
Anbae en aaramuthae vaarai…..aa…
Both :
Anbae en aaramuthae vaarai
Male :
Thendral alai meethinilae
Thingal pirai thoniyilae
Thendral alai meethinilae
Thingal pirai thoniyilae
Thaenmozhiyunai azhaiththae selvaenae
Female :
Vennilavuk kinniyilae
Ennithayak kaadhalaiyae
Vennilavuk kinniyilae
Ennithayak kaadhalaiyae
Unnum mathuvaai niraiththae tharuvaennae
Female :
Aaa….aa…aa….
Anbae en aaramuthae vaarai
Male :
Vannamigum vaanavillai
Ponnaadiyaai madiththae
Vannamigum vaanavillai
Ponnaadiyaai madiththae
Valli unakkae parisu tharuvaenae
Female :
Kann simittum thaaragaiyai
Mullai malaraai thoduththae
Kann simittum thaaragaiyai
Mullai malaraai thoduththae
Male :
Anbae en aaramuthae vaarai
Male :
Minnal oli kodugalaal
Megamenum venthiraiyil
Minnal oli kodugalaal
Megamenum venthiraiyil
Unnazhagai oviyamaai varaivaenae
Female :
Vinnin mazhai thaaraigalai
Veenai narampaakki athil
Vinnin mazhai thaaraigalai
Veenai narampaakki athil
Innoliyai meetti isai pozhivaenae
Both :
Anbae en aaramuthae vaarai…aa…aa…
Anbae en aaramuthae vaarai