Anbe Thilagam - தமிழ் பாடல் வரிகள்
அன்பே திலகம் அழகே திலகம்
என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண் :
நாயகன் நீயொரு வீரத்திலகம்
இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்
ஆண் :
ஆஹா நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம்
எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்
பெண் :
அன்பின் திலகம் பண்பின் திலகம்
என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண் :
லல லா லல லா…..ஆஅ…
ஆஅ…..ஆ…… லா லல லா
ஆண் :
ஆஅ……..
ஆண் :
நிறம் மாறி விடும் பூக்கள்
மறைந்தோடி விடும் நாட்கள்
மாறாத மறையாத திலகம் இது
பெண் :
நிலம் வானம் உள்ள காலம்
நிழல் போல உன்னை நாளும்
நீங்காத உறவாடும் இதயம் இது
ஆண் :
அழகான ஆலயம் நம் வீடு
அதில் வாழும் அம்பிகை நீ
பெண் :
தினந்தோறும் தேவனின் பேர் சொல்லி
மனம் பாடும் கீர்த்தனையே
ஆண் :
ஸ்ருதியோடு லயம் போல
சேர்ந்தேன் நான்தானே
பெண் :
அன்பின் திலகம் பண்பின் திலகம்
ஆண் :
என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண் :
தமிழ் மூன்று வகையாகும்
அதைப் போல இங்கு நாமும்
நான் ஒன்று நீ ஒன்று மகன் ஒன்றுதான்
ஆண் :
நமை சேர்ந்ததொரு பிள்ளை
நடைப் போட்டு வரும் கிள்ளை
மகனல்ல மணம் வீசும் மலர்ச்செண்டுதான்
பெண் :
பிறை போலே பிள்ளையும் வளர்ந்தாலே
வருங்காலம் பௌர்ணமியாகும்
ஆண் :
ஒருபோதும் தேய்பிறை காணாது
உலவும் நம் வெண்ணிலவு
பெண் :
மகன் வாழ மனை வாழ
பாடும் பூங்காற்று
ஆண் :
அன்பே திலகம் அழகே திலகம்
என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண் :
நாயகன் நீயொரு வீரத்திலகம்
இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்
ஆண் :
ஆஹாஹ நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம்
எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்
பெண் :
அன்பின் திலகம் பண்பின் திலகம்
ஆண் :
என்றும் நீதான் எந்தன் உலகம்
Anbe Thilagam - English Lyrics
Male :
Anbe thilagam azhagae thilagam
Endrum neethaan enthan ulagam
Female :
Naayagan neeyoru veerathilagam
Intha naayagi nee konjum vanjith thilagam
Male :
Aahaa naan thanthu ne vaiththa netriththilagam
Entha naalum en vaazhvukku vetri thilagam
Female :
Anbin thilagam panbin thilagam
Endrum neethaan enthan ulagam
Female :
Lala laa lala laa….aaa….
Aaa…..aa….la lala laa….
Male :
Aaa…..
Male :
Niram maari vidum pookkal
Maranthodi vidum naatkal
Maaraatha maraiyaatha thilagam idhu
Female :
Nilam vaanam ulla kaalam
Nizhal pola unnai naalum
Neengaatha uravaadum idhayam idhu
Male :
Azhagaana aalayam nam naadu
Adhil vaazhum ambigai nee
Female :
Dhinanthorum dhevanin per solli
Manam paadum keerthanaiyae
Male :
Shruthiyodu layam pola
Saernthaen naanthaanae
Female :
Anbin thilagam panbin thilagam
Male :
Endrum neethaan enthan ulagam
Female :
Tamil Moondru vagaiyaagum
Adhai pola ingu naamum
Naan ondru nee ondru magan ondruthaan
Male :
Namai saernthoru pillai
Nadai pottu varum killai
Maganalla manam veesum malar senduthaan
Female :
Pirai polae pillaiyum valarnthaalae
Varungaalam pournamiyaagum
Male :
Orupothum theipirai kaanaathu
Ulavum nam vennilavu
Female :
Magan vaazha manai vaazha
Paadum poongaattru
Male :
Anbe thilagam azhagae thilagam
Endrum neethaan enthan ulagam
Female :
Naayagan neeyoru veerathilagam
Intha naayagi nee konjum vanjith thilagam
Male :
Aahaa naan thanthu ne vaiththa netriththilagam
Entha naalum en vaazhvukku vetri thilagam
Female :
Anbin thilagam panbin thilagam
Endrum neethaan enthan ulagam