Ilam Vayadhu - தமிழ் பாடல் வரிகள்
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
பெண் :
சிப்பியிலே முத்து வரும்
வாழையிலே கன்று வரும்
கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும்
எவர் மனதில் யார் வருவாரோ…..ஓ….
பெண் :
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
பெண் :
காமனுக்கு ரதி இருந்தாள்
ராமனுக்கு ஒருத்தி வந்தாள்
மாமனுக்கோ பிள்ளை இல்லை
மாப்பிள்ளைதான் யாரடியோ…யோ….
பெண் :
தாமரைக்கோர் வெண்ணிலவு
தாய் வழியில் சொந்தமில்லை
காமன் விடும் கணை விழுந்தால்
மாமனுக்குப் பஞ்சமில்லை
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ
பெண் : இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
பெண் :
ஊடலென்றும் கூடலென்றும்
ஊரில் பல கதைகள் உண்டு
ஊடலத்தை நானறிவேன்
கூடலென்றால் என்னடியோ
பெண் :
இசையுடன் சுதி கூடும்
இல்லறத்தில் சுகம் கூடும்
இதுவரையில் நானறிவேன்
எதுவரையில் நீ அறிவாய்
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ (இளம்)
பெண் :
பொன் மழையின் துளி விழுந்தால்
பூமியெல்லாம் நனைந்து விடும்
ஆசை எனும் மழை விழுந்து
அன்பு மனம் நனையுதடி
பெண் :
நனைவதெல்லாம் காய்வதுண்டு
காய்வதெல்லாம் நனைவதுண்டு
நினைப்பது போல நடப்பதற்கு
நேரம் வரும் காலம் வரும்
உன் கதையை சொல்லடியோ
உன் கதைதான் என்னடியோ
பெண் :
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
Ilam Vayadhu - English Lyrics
Female :
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Female :
Sippiyilae muththu varum
Vaazhaiyilae kandru varum
Kadavulathu padaippilae kadhalukku neram varum
Evar manathil yaar varuvaaro…oo….
Female :
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Female :
Kamanukku radhi irunthaal
Ramanukku oruththi vanthaal
Mamanukko pillai illai
Maappillaithaan yaaradiyo….yo….
Female :
Thaamaraikkor vennilavu
Thaai vazhiyil sonthamilai
Kaaman vidum kanai vizhunthaal
Mamanukku panjamilai
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Female :
Ilam vayathu vanthaal
Ellaa kadhaiyum varum
Antha nadagaththil naalu varum
Female :
Oodalendru koodalendru
Ooril pala kadhaikal undu
Oodalathai naanarivaen
Koodalendraal ennadiyo
Female :
Isaiyudan suthi koodum
Illaraaththil sugam koodum
Idhuvaraiyil naanarivaen
Edhuvaraiyin nee arivaai
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Female :
Pon mazhaiyin thuli vizhunthaal
Bhoomiyellaam nanainthu vidum
Aasai enum mazhai vizhunthu
Anbu manam nanaiyuthadi
Female :
Nanaivathellaam kaaivathundu
Kaaivathellaam nanaivathundu
Ninaippathu pola nadappatharkku
Neram varum kaalam varum
Un kadhaiyai solladiyo
Un kadhaithaan ennadiyo
Female :
Ilam vayathu vanthaal
Ellaak kadhaiyum varum
Antha nadakaththil naalu varum