Kaarkala Megam Un Kangal - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
பி. ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் :
மு. மேத்தா
ஆண் :
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே
ஆண் :
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன
ஆண் :
தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே
ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம்
ஆண் :
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன
ஆண் :
மாறாத சொந்தம் கல்யாண பந்தம்
உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம்
காலங்கள் மாறும் காயங்கள் ஆறும்
நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம்
ஆண் :
எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள்
கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள்
நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே
ஆண் :
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன
ஆண் :
ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும்
முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும்
நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று
ஓர் பாடமே கூறுமே காலை வானம்
ஆண் :
பூமாலையாக நான் மாற வேண்டும்
பூப்போல நாளும் நீ வாழ வேண்டும்
நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே
ஆண் :
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி காலங்கள் தோறும்
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி
ஆண் :
சோகங்கள் இங்கே நீராவி ஆகும்
சொந்தங்களே வாழுமே எந்த நாளும்
ஆண் :
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி…..
Kaarkala Megam Un Kangal - English Lyrics
Male :
Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna en aasai nenjae
Male :
Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna
Male :
Thaagangal ingae megangal angae
Yaen peithatho kann mazhai intha neram
Male :
Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna
Male :
Maaraatha sontham kalyaana pantham
Un vaazhvilae poonguyil koovum neram
Kaalangal maarum kaayangal aarum
Naam paadakaam vaazhvilae anbin raagam
Male :
Ennaththil ennam inaikindra naatgal
Kannaththil enna kanneerin pookkal
Naan un thunai allavo en aasai nenjae
Male :
Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna
Male :
Orr vaasal moodum orr vaasal naadum
Mul meedhilum poong kodi paadi aadum
Netrenndru ondru indrillai endru
Orr paadamae koorume kaalai vaanam
Male :
Poomaalaiyaaga naan maara vendum
Pooppola naalum nee vaazha vedum
Neeraaduvaai thendralae en aasai nenjae
Male :
Kaarkaala megam un kangal endrum
Kaanathu en kanmani kaalangal thorum
Kaarkaala megam un kangal meedhu
Kaanathu en kanmani
Male :
Sogangal ingae neeraavi aagum
Sonthangalae vaazhmae entha naalum
Male :
Kaarkaala megam un kangal endrum
Kaanathu en kanmani ….